12-09-2003, 09:55 AM
இவ் ஆய்வு 08.12.03 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் ~தமிழ்க்குரல்| வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது
'நரிகளின் முகமூடிகள்"
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் பதவிக்குப் போட்டியிடுவதற்காக மின்னாமல், முழங்காமல் ஒரு திடீர் வேட்பாளராக திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களை சிறிலங்கா அரசு பிரேரித்தபோது பல உலக நாடுகள் ஆச்சரியப்பட்டுப் போயின எதிர்பாராத முறையில் திரு கதிர்காமர் போட்டியிட வந்தாலும் எதிர்பார்த்தவாரே அவர் தோற்றுப் போய்விட்டார். சந்திரிக்கா அம்மையாரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு தமிழீழமும் சிறிலங்காவும் என உலக நாடுகளுமே இப்போது பழக்கப்பட்டுப் போயிருப்பது உண்மைதான். ஆனால் அம்மையாரின் இந்த சமீபத்திய நடவடிக்கைக்கு ஐயா ரணில் விக்கிரமசிங்கவும் துணை போயிருப்பது சில அடிப்படை உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்தத் திடீர் நாடகத்தின் பின்னால் உள்ள காரணிகளை நாம் சற்றுக் கவனிக்க வேண்டியது அவசியமாகும். பொதுநலவாய நாடுகளின் உறுப்பினராக இருந்து வந்த சிம்பாவே நாட்டின் உறுப்புரிமை தற்hகலிகமாக ஓராண்டிற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் கடந்த ஆண்டு சிம்பாவே நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தல் ஒழுங்கற்ற முறையில் நடைபெற்றதாகவும், அந்த ஒழுங்கற்ற தேர்தல் மூலம் ரொபேட் முகாபே தெரிவு செய்யப்பட்டது நியாயமற்றது என்றும் தேர்தல் கண்கணிப்புக்குழு அறிவித்திருந்தது. பொதுநலவாய நாடுகளின் அமைப்பிலிருந்து தற்காலிகமாக ஓராண்டிற்கு சிம்பாவே நாட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்திய முடிவை பல ஆபிரிக்க நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிபர் ரொபேட் முகாபேயிற்கு வேறு விதத்தில்தான் அரசியல் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் சில ஆபிரிக்க நாடுகள் கருதின. இந்த நிலையில்தான் டிசம்பர் 5ம் திகதி நைஜீரியாவில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மகாநாடு நடைபெற்றதும் அதில் பொதுநலவாய அமைப்புக்களின் புதிய செயலாளர் பதவிக்கான தேர்தலும் இடம்பெற்றன. இந்த வேளையில் சிம்பாவேயின் ரொபேட் முகாபேயின் கடம் போக்குகளை விமர்சித்து வருபவரும், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளருமான நியுூசிலாந்து நாட்டின் டொன் மக்னன் அவர்கள் மீண்டும் இச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட இருந்தார்.
திரு டொன் மக்னன் அவர்களுக்கு பசுபிக் பிராந்திய நாடுகளும் கரபியன் பிரதேச நாடுகளும் முக்கியமாக அவுஸ்திரேலியா, நியுூசிலாந்து, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் தங்கள் ஆதரவை ஏற்கனவே தெரிவித்து இருந்தன. இதில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுண்டு. கடந்த செப்டம்பர் மாதம் 25ம் திகதியன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியுூசிலாந்து வெளியுறவு அமைச்சருக்கு ஓர் உறுதி அளித்திருந்தார் .நியுூசிலாந்து நாட்டின் திரு டொன் மக்னன் இரண்டாவது தடவையாக பொதுநலவாய அமைப்புக்களின் செயலாளராக வருவதற்கு சிறிலங்கா தனது ஆதரவை நல்கும் என்பதே! சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியுூசிலாந்து நாட்டிற்கு அளித்த உறுதிமொழியாகும். அப்படியென்றால் செப்டம்பர் மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்குமிடையில் என்னதான் நடைபெற்றது?
ஒழுங்கீன முறையில் தேர்தலை நடத்திப் பதவிக்கு வந்தவர் என்றும், நிறவெறி பிடித்தவர் என்றும், மனித உரிமை மீறல்களைச் செய்து வருபவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரொபேட் முகாபேயிற்கு ஆதரவான சில ஆபிரிக்க நாடுகள் திரு டொன் மக்னனின் தெரிவுக்கு எதிராகக் காய்களை நகர்த்த ஆரம்பித்தன. இதற்குத் தகுந்த குணாதியங்களையும், கெட்டித்தனத்தையும் கொண்டவர் வேறு யாராக இருக்க முடியும்? ஆகவே இந்த நாடுகள் திரு லக்ஷ்மன் கதிர்காமரைக் குறிவைத்து அவரை அனுகின.
நவம்பர் மாத நடுப்பகுதியில் திரு கதிர்காமர் ருமேனியா நாட்டிற்குச் செல்கின்றார். ருமேனியா நாட்டிலிருந்து பின்னர் ஜெனிவா நகருக்கச் செல்கின்றார். பின்னர் ஜெனிவா நகரிலிருந்து லண்டன் நகர் செல்கின்றார். ருமேனியாவிலும், ஜெனிவாவிலும் பின்னர் லண்டனிலும் திரைமறைவில் பல இரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. டன்சானியா போன்ற நாடுகளின் இராஜதந்திரிகள் திரு லக்ஷ்மன் கதிர்காமரை பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் போட்டியிடும்படி அவரைக் கேட்டுக் கொண்டன.
திரு கதிர்காமர் அவர்கள் பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளராக போட்டியிட வேண்டுமென்ற கருத்தை சிறிலங்காவின் சனாதிபதி சந்திரிக்காவும், சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். இந்த விடயத்தில் மட்டும் சிங்கள தேசத்தின் இரண்டு பெரும் தலைமைகளும் இணைந்து கொண்டன. பொதுநலவாய நாடுகளின் ஐம்பத்திரண்டு தலைவர்களுக்கும் திரு கதிர்காமரை ஆதரிக்கக் கோரி சிறிலங்கா சனாதிபதி சந்திரிக்கா அம்மையார் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் எழுதுவதற்குத் தன்னுடைய அனுமதியையும், சம்மதத்தையும் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அளித்தார். இந்த விடயத்தில் சனாதிபதி சந்திரிக்கா உடனடியாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைத் தொடர்பு கொண்டார் என்றும் அதன் பின்னர் உடனடியாகத் தன்னைச் சந்தித்த கதிர்காமருக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது குறித்துத் தனது மகிழ்ச்சியை தெரிவித்ததோடு தனது அரசின் ஆதரவை வழங்குவதாக அறிவித்தார் என்றும் நாம் அறிகின்றோம்.
இதன் பின்னர் பல விடயங்கள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. சனாதிபதி சந்திரிக்கா இந்தியப் பிரதமர் வாஜ்பாயைத் தொடர்பு கொண்டு லக்ஷ்மன் கதிர்காமருக்கு இந்தியா ஆதரவு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். பொதுநலவாய நாடுகளின் மகாநாடு நடைபெற இருந்த நைஜீரிய நகரான அபுஜாவில் கதிர்காமருக்கு ஆதரவு தேடி பல சிறு, சிறு குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன. இந்திய வெளிவிவகார அமைச்சர் யஸ்வந்த் சின்கா, பங்களாதேசின் வெளிவிவகாரச் செயலாளர் பெக்கி (ஆடீநுமுஐ) போன்றோர் தங்கள் ஆதரவை கதிர்காமருக்கு வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஆனால் நடந்த இரகசியத் தேர்தல் கள்ள வாக்குத் தேர்தலாக இல்லாத காரணத்தால் திரு டொன் மக்னனுக்கு 41 வாக்குகளும், திரு கதிர்காமருக்கு 11 வாக்குகளும் கிடைத்தன. திரு டொன் மக்னன் அமோக வெற்றி பெற்று மீண்டும் பொதுநலவாய நாடுகளின் செயலாளராகத் தெர்ந்தெடுக்கப்பட்டார்.
இது ஒரு இரகசிய வாக்கெடுப்பாக இருந்த போதும் கதிர்காமருக்கு ஆதரவாக சிறிலங்காவோடு இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் ஏழு ஆபிரிக்க நாடுகள் வாக்களித்திருக்கலாம் - என்று கதிர்காமரே கூறியிருப்பதாக பத்திரிகைச் செய்திகள் கூறியிருக்கின்றன.
உள்நாட்டில் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவும், தமிழீழ மக்களின் வாழ்க்கையை இன்னல் நிறைந்த அவல வாழ்க்கையாக மாற்றுவதற்காகவும் திரு கதிர்காமர் ஆற்றிய கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இந்தக் கொடுமைகளை அபுூர்வமாக வெளிக் கொண்டுவந்த நிறுவனங்களின் குரல்வளைகளை நெறிக்கவும் கதிர்காமர் தவறியதில்லை. சிறிலங்காவின் விமானப் படையின் குண்டுவீச்சால் நவாலித் தேவாலயம் படுசேதமடைந்ததுடன் நு}ற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழ்மக்கள் கொள்ளப்பட்டதை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் வெளிக்கொணர்ந்த போது சர்வதேசச் சங்கத்தை நாட்டை விட்டே வெளிறே;றுவேன் என்று எச்சரித்தவர் இந்தக் கதிர்காமர்.
போர்க்குற்றவாளி என்று கருதப்புடுகின்ற ஜானக பெரேராவை அவுஸ்திரேலியாவிற்கான சிறிலங்காத் து}துவராக நியமிப்பதற்காக சகல முயற்சிகளை எடுத்ததோடு மட்டுமல்லாது இது குறித்து 'சர்வதேச மன்னிப்புச் சபை" எழுப்பிய விசனத்தையும் புறம் தள்ளியவர் இந்தக் கதிர்காமர் பண்டாரவளையில் உள்ள பிந்துனுவேவா புனருத்தாரன நிலையத்தில் பயங்கரவாதிகள் என்ற முத்திரையிடப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட 24 தமிழ் இளைஞர்களை சிங்களக் காடையர்கள் கொன்று குவித்ததோடு மேலும் 16 தமிழ் இளைஞர்களையும் காயப்படுத்திய சம்பவத்தை எமது நேயர்கள் அறிவீர்கள். இந்த பிந்துனுவேவா புனருத்தாரன நிலையத்தினை நிர்வகிப்பதற்கான செயற்குழு திரு கதிர்காமரின் பொருப்பிலேயே இருந்தது. அதுமட்டுமல்ல புதுக்குடியிருப்பில் சிறிலங்கா விமானம் நடத்திய விமானக் குண்டு வீச்சில் தமிழ்ப் பொதுமக்கள் கொள்ளப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்தபோது கதிர்காமர் விட்ட அறிக்கையையும் நேயர்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 'ஐக்கிய நாடுகள் சபை எமது உள்நாட்டு விடயங்களில் தலையிடக்கூடாது என்றும் நுளம்பிற்கு மருந்தடிப்பதையும், மலேரியாவைக் கட்டுப்படுத்துவது பற்றியுமே ஐக்கிய நாடுகள் கரிசனை காட்ட வேண்டும்" என்று ஏளனமாகவும். காட்டமாகவும் ஐக்கிய நாடுகள் சபையினை இதே லக்ஷ்மன் கதிர்காமர் கண்டித்திருந்தார்.
இப்படிப்பட்ட மனித நேயமற்ற, இரக்கமற்ற, நேர்மையற்ற ஒருவராகத் தெரிகின்ற திரு கதிர்காமர் அவர்களை பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்காக சிறிலங்காவின் இரண்டு சிங்களத் தலைமைகளும் ஒற்றுமையாகச் செயல்ப்பட்டிருக்கின்றன. காரணம் என்ன? அவர் எப்படிப்பட்ட கீழான குணநலன்களை உடையவராகக் காட்டப்பட்டபோதும் அவர் ஒரு புத்திசாலி, அறிவுஜீவி தன்னுடைய சிறப்பு அம்சங்களை திறமைகளையெல்லாம் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் மேலான்மைக்கே முற்றிலுமாக அர்ப்பணித்துள்ள ஒருவர். தம்முள் வேறுபட்டிருந்தாலும் அவரை ஆதரிப்பதனை எந்தச் சிங்களத் தலைமையுமே செய்யும். அதனைத்தான் சந்திரிக்கா அம்மையாரும், ரணில் விக்கிரமசிங்கவும் இன்று செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் சந்திரிக்காவின் முகமூடியை மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்கவின் முகமூடியையும் கிழித்துக் காட்டியுள்ளது.
முகாபே போன்ற கடும் போக்காளர்களை ஆதரிப்பதற்கும் அவரது செயல்களை நியாயப்படுத்துவதற்கும் இந்த 52 நாடுகளில் மிகச் சிறந்தவராக திரு கதிர்காமரைத்தான் ஆபிரிக்க நாடுகள் இனம் கண்டுள்ளன என்றால் அவருடைய (சுப) கீர்த்தி பற்றி அனைவரும் அறிந்துள்ளார்கள் என்பதையும் நாம் இங்கே காணுகின்றோம்.
திரு லக்ஷ்மன் கதிர்காமர் வெற்றி பெற்றால் அவரூடாக சிங்கள பௌத்த பேரினவாதத்தை நியாயப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் 41 பொதுநலவாய நாடுகளின் கருத்திற்கும், விருப்பத்திற்கும் எதிராகச் செயல்படுவதிற்கும் சிறிலங்கா தயாராக இருந்திருக்கின்றது. என்ற விடயத்தையும் நாம் இங்கே உணரக் கூடியதாக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 'நியுூசிலாந்து வேட்பாளரை ஆதரிப்போம்" என்று ரணில் விக்கிரமசிங்க கொடுத்த வாக்குறுதியை நவம்பர் மாதத்திலேயே அவர் காற்றில் பறக்க விட்டார் என்ற நிதர்சனத்தையும் நாம் இங்கே காண்கிண்றோம்.
'திரு லக்ஷ்மன் கதிர்காமர் தோற்றுவிட்டார்" என்று புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடும்! சந்திரிக்கா அம்மையாரினதும், ரணில் விக்கிரமசிங்காவினதும் இந்த நடவடிக்கைகள் அவர்களுக்கு உலக அரங்கில் தர்மசங்கடத்தை அளித்துள்ளன என்ற உண்மையை உணர்ந்தும் உலகத் தமிழ் மக்கள் மகிழ்வு கொள்ளக்கூடும். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, நியுூசிலாந்து போன்ற பல உலக நாடுகளின் அதிருப்தியை சிறிலங்கா தற்போது சம்பாதித்துள்ளது. இவர்களுக்கும் இப்போது உண்மை புரியும் என்ற எண்ணமும் எம்மவருக்கு ஏற்படக்கூடும்.
ஆனால் இதற்கும் அப்பால் இதேபோன்ற அபாயங்கள் எதிர்காலத்தில் வரக்கூடும். அப்போது அன்றைய அரசியல் காலநிலையைப் பொறுத்து மீண்டும் உலக நாடுகள் பாராமுகமாக இருக்கவும் கூடும். அதற்கு உலகத் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும். திடீரென்று உருவாகிய இந்த பொதுநலவாய புது வேட்பாளர் சம்பவத்தை ஒரு பாடமாக நாம் ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறு ஏற்படக்கூடிய அரசியல்த் திருப்பங்களுக்கு நாம் முகம் கொடுத்துச் செயல்ப்படக்கூடிய வகையில் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
'நரிகளின் முகமூடிகள் கிழிகின்றன. உண்மைதான்" ஆயினும் நரிகளின் குணம் மாறப் போவதில்லை. நாளை வேறொரு முகமூடி வரலாம், அல்லது வேறொரு மேடை வரலாம்! ஆனால் இதே நரிகளும். அதே குணங்களும்தான் அரங்கேறக் காத்து நிற்கின்றன. அரசியல்க் களத்திலே இப்போது நடைபெறுகின்ற தமிழர் போராட்டம் இத்தகைய சலசலப்புகளுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டுமென்றால் உலகத் தமிழினம் ஒன்றினைந்து ஒற்றுமையாகச் செயல்ப் படவேண்டும்.
உள்நாட்டில் நிலைமை எதுவாக இருந்தாலும் வெளிநாடுகளில் தமது கரத்தைப் பலப் படுத்திக் கொள்ள முயல்வதில் எந்த சிங்கள அரசுமே தவறியதில்லை. 1999ல் ருநௌஉழ வின் செயலாளர் நாயகப் பதவிக்காக சிறிலங்கா முயன்றதும் தோல்வி கண்டதும் நாம் அறிந்த விடயங்களே! இன்று இப்போது பொதுநலவாய நாடுகளின் செயலாளர் பதவிக்கு சிறிலங்கா முயன்றிருக்கின்றது. அதைப்போல் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய செயலாளர் நாயகமான திரு கோபி அனன் ஓய்வு பெறும்போது அவரிடத்தை நிறப்புவதற்காக சிறிலங்காவின் தற்போதய வெளிவிவகார அமைச்சரான திரு டிரோன் பெர்ணாண்டோவை சிபாரிசு செய்யும் முயற்சியில் சிறிலங்கா இப்போதேயே இறங்கி விட்டது.
ஆகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் உலக அரங்கிலும், உலக அரசிலும் உருவாகக்கூடிய செயற்பாடுகளுக்கு முகம் கொடுப்பதற்கும் அவற்றை எதிர்த்து எமது மக்களின் போராட்டத்திற்கான நியாயத்தை நிரூபிப்பதற்கும் உலகத்தமிழ் மக்கள் ஒன்றினைந்து செயல்ப்பட வேண்டும். இன்றைய தினத்தில் எமது மக்களும், அவர்கள் அங்கத்துவம் வகிக்கின்ற சங்கங்கள், கழகங்கள், நலன்புரி அமைப்புக்கள், நிறுவனங்கள் போன்றவையும் ஒன்றினைந்து தமிழ்த் தேசிய தலைமையின் கீழ் தமது செயற்ப்பாடுகளை நெறிப்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் செய்ய வேண்டிய முதன்மையான கடமைகளில் இது ஒன்றாகும்.