பத்திரம் என்ன
சித்திரம் குலைந்தால்
பத்திரம் கோட்டில் பறக்கும்...!
நிரத்தரமில்லாப் பத்திரமும்
தங்கத்தாலான தடையமும்
மனத்துக்கெங்கே தடை போடும்...?!
சிந்தனை இப்படியும் எழலாம்...!
விவாகரத்து என்று
நேற்றுவரை இருந்த உறவு
அறுத்து விடப்படும்...
மனங்கள் அறுமோ..??!
நினைவுகள் அழியுமோ...??!
மனிதனால் ஆகா ஒன்று உண்டு
நினைவை நிரந்தரமாய் அழிப்பது...!
மனதால் கல்லானால்
அவன் மனிதனில்லை
இதற்குமேல் விளக்கம் வேண்டுமோ....!
மனத்தை அடக்க
பத்திரமும் தடையமும் உதவியென்றால்
அவையும் கருவியாக இருக்கட்டுமே...!
அழியாத அன்பு
உள்ளத்தால் வலுவானால்
உறவுமங்கே நிலைக்கும்...ஆனால்
அன்பை அளக்க வழியில்லையே...!
ஆதலால்
சாட்டுக்கேனும் கருவி கொண்டு
வேலிபோடுதல் அன்பும்
படிதாண்டாது வட்டமடிக்க
உதவலாம்....!
திருடனும் திருடியும்
வேலிகண்டு மிரளுதல் இயல்பு...!
அதற்காய் வேலி அறுத்தல்
தோல் இன்றி
ஊனுடல் உயிர் கொள்ள
நினைத்தற்கு ஈடாகும்
சாத்தியமோ....?!
மேற்கில் அலையும்
அன்பற்ற மனிதக் கூடுகள் கண்டுமா
இப்படி ஒரு சிந்தனை...!
மேற்கே வியக்குது
கீழைத்தேயக் குடும்ப பலம் கண்டு
ஆனால்
கீழை இன்று மேற்கை விரும்புது...?!
மனிதன் வாழ்வானா வீழ்வானா...???
நாளை
ஆயுதங்களும் சட்டமும்
வலுவான கைவரிசை காட்டவே
மனமென்ன
ஊனே அடங்கி ஒடுங்குவீர் ...!
நாளைய சந்ததிக்காய்
நாமதைச் செய்வோம்....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>