Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுகாதாரத்திற்கான புதிய அளவு கோல்கள்
#1
சாதாரணமாக நாம் ரத்த அழுத்த சோதனை மேற்கொள்ளும் போது, பாதுகாப்பான அளவாக 120/80 கருதப்படுகிறது. அதேபோல, டிரைகிளசரைட்களை பொருத்தவரையில் 150 மி.கி.,/ டி.எல்.,லிற்கு குறைவாக இருக்க வேண்டும். ஆனால் மாறி வரும் இவ்வுலகில் இந்த அளவுகளும் மாறிவிட்டன. இந்த அளவுகளில் இருந்தால் கூட இதயம் பாதிக்கப்படகூடும் என்கின்றன புதிய ஆராய்ச்சிகள்.

முப்பதிற்கும் மேற்பட்ட சோதனைகளிலிருந்து தெரிய வந்திருப்பது 120/80 என்பது பாதுகாப்பான அளவு அல்ல. இந்த நிலை பிரீஹைபர்டென்ஸில் நிலையாக கருதப்படுகிறது. இதனால் மாரடைப்பு அல்லது சிறுநீரக கோளாறுகள் கூட ஏற்படலாம். முன்பு ரத்த அழுத்தம் 120/80 முதல் 139/89 வரை இருப்பது பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஆனால், இப்பொழுது ""இந்த அளவினை உடையவர்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றி கொள்வதற்குரிய அறிகுறியாக இதனை எடுத்து கொள்ள வேண்டும்'', என்கிறார் புதிய வரம்புகளை வகுத்துள்ள சுகாதாரத்திற்கான குழுவின் தேசிய நிறுவனத்தில் பணியாற்றிய நிபுணர்.

ரத்த அழுத்தத்தை சோதிக்கும் பொழுது அமர்ந்து கொள்ள வேண்டுமே தவிர படுக்க கூடாது. மருத்துவரை அணுகும் பொழுது சிறு உதறல் இருக்கலாம். அப்படியிருந்தால் சிறிது நேரம் கழித்து சோதனையை மேற்கொள்ள சொல்வது நன்று ஏனெனில், இதனால் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும் அமைதியான மனநிலையில் இச்சோதனையை மேற்கொள்ளுதல் மூலமே சரியான அளவை அறிய முடியும். இப்பொழுதுள்ள புதிய அளவின்படி ரத்த அழுத்தம் 120/80க்கு குறைவாக இருத்தல் வேண்டும்.

"ரத்தக் கொழுப்பு சோதனையின் ஒரு பகுதியான டிரைகிளசரைட் அளவு 100க்கும் குறைவாக இருக்க வேண்டும்'', என்கின்றனர். மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில், இந்த அளவுகள் நாள் முழுவதும் கூடி குறையும். சில சமயங்களில் இருமடங்காக கூடும். "இந்நிலையில், 150ஆக இருக்கும் டிரைகிளஸரைட் 300 ஆக உயர்ந்தால் இதய நோய்கள் வருவதற்கான அபாயம் அதிகம்'', என்கிறார்கள் மருத்துவ மைய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த மாற்றங்களை அங்கீகரிப்பதற்கு முன் பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்கிறது அமெரிக்க தேசிய கொழுப்பு கல்வி திட்டமைப்பு. எனினும், ரத்த அழுத்தம், டிரைகிளசரைட் அளவையும் சாதாரண நிலையில் கொண்டவர்கள் கூட இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சோதனை செய்வது நன்று. பெரும்பாலும், பெண்கள் டிரைகிளசரைட் அளவை கண்காணிப்பது அவசியம். ஏனெனில், பெண்களில் டிரைகிளசரைட் அளவை வைத்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை கணிக்கலாம்', என்கிறார் மற்றொரு நிபுணர்.

எனவே, நாம் அனைவரும் உணவிலும், பிற செயல்களிலும் தேவையான நடவடிக்கைகளை பின்பற்றி இதய நோயை தூர விரட்டலாம்.


நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)