04-25-2006, 09:24 AM
தென் தமிழீழ தளபதிகளின் கிளிநொச்சி பயணம் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்கியுள்ளனர்.
இது தொடர்பாக இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹான்சன் பௌயருக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:
25 ஏப்ரல் 2006
திரு ஜோன் ஹான்சன் பௌயர்
சிறப்புத் தூதுவர்
அன்புள்ள திரு பௌயர்
சமாதான முயற்சிகளைப் புத்துயிரூட்டுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எமது நன்றியைத் தெரிவிக்கும் நோக்கிலும் இது தொடர்பாக எமது நிலைப்பாட்டை உங்களுக்கு அறியத்தரும் நோக்கிலும் இக்கடிதத்தை நான் எழுதுகின்றேன்.
அரசாங்கமானது ஒரு புறம் தாம் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்று பிரச்சாரம் செய்வதுடன் மறுபுறத்தில் சமாதானத்தை அழிப்பதற்கான அனைத்து வகையிலுமான செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவருகின்றது என்பதை நான் உங்களுக்கச் சுட்டிக்காட்டவேண்டும்.
இக்கடிதத்தில் சிறிலங்கா அரசு இரட்டைமுகத்துடன் சமாதான முயற்சிகளைக் கையாளுகின்றது என்பதை நிரூபிக்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று முக்கிய விடயங்களை விளக்குகின்றேன்.
அண்மைய நிகழ்வுகளும் சம்பவங்களும் அரசாங்கமானது எமது தமிழர் தாயகப் பிரதேசங்களில் முற்றிலும் யுத்த நிறுத்தத்திற்கு முரணான வன்முறைகளைத் தூண்டிவிட்டுக்கொண்டிருப்பதை தெளிவாகக் காட்டுகின்றது.
சிறிலங்கா அரசாங்கமானது தமிழர் தரப்பிலிருந்து காட்டப்பட்ட அனைத்து நல்லெண்ண முயற்சிகளையும் சீர்குலைத்ததடன் துணை இராணுவக் குழுவினர் மூலம் யுத்த நிறுத்தத்திற்கு விரோதமாக செயற்பட்டும் அவர்களுடன் இணைந்து தமிழர் தாயகப் பிரதேசங்களில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களைக் களைவதன் மூலம் ஆபத்தான வகையில் வளர்ந்து வரும் அவர்களது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு பல சந்தர்ப்பங்களில் கேட்டுக்கொண்டதுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணங்கிக்கொண்டதற்கமைவாக தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து துணை இராணுவக் குழுக்களை அகற்றுமாறும் கேட்டுக்கொண்டோம். சர்வதேச சமூகமும் நிலைமையை உணர்ந்து துணை இராணுவக் குழுவினரை அகற்றுவது தொடர்பானதும் அவர்களது ஆயுதங்களைக் களைவது தொடர்பானதுமான வேண்டுகோளை விடுத்தது.
இருப்பினும் சிறிலங்கா அரசாங்கமும் அதன் ஆயுதப்படைகளும் இதைத் தட்டிக்கழித்ததால் அனைத்து மட்டங்களிலும் இன்று வன்முறைகளை துணை இராணுவக் குழுவினர் பரவச் செய்துள்ளனர்.
சிறிலங்கா ஆயுதப்படைகளும் துணை இராணுவக் குழுவினரும் பொது மக்களை இலக்கு வைத்துத் கொலைகளைச் செய்துவருகின்றனர். இச்செயற்பாடானது பொதுமக்களைக் ஆத்திர நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது.
யுத்த நிறுத்த சூழலை பேணும் எந்தவொரு சந்ததர்ப்பத்தையும் இல்லாதொழிக்கின்ற அரசாங்கத்தின் சதிச்செயற்பாடாகவே நாம் உணருகின்றோம்.
ஒரு புறத்தில் சமாதான நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது போல நடித்துக்கொண்டு மறுபுறத்தில் துணை இராணுவக் குழுக்களை கட்டுபடுத்த முடியாத அளவிற்கு வன்முறைகளை செய்வதற்கும் ஏவிவிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச சமூகம் ஆராய வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் நயவஞ்சகத்தை சர்வதேச சமூகம் கண்டிக்கவேண்டும். உண்மைத்தன்மையுடன் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளைத் தடைசெய்யுமாறு சர்வதேச சமூகத்தை வற்புறுத்துவதன் ஊடாக
அரசாங்கமானது புலிகளதும் தமிழர் தரப்பினதும் சர்வதேச சமூகத்துடனான உறவுகளைத் துண்டிக்கக் கடுமையாக உழைத்துவருகின்றது.
இதனூடாக சிறிலங்கா அரசாங்கத்தின் நம்பகத்தன்மையற்ற நோக்கங்களை உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கமுடியும் என அவர்கள் நம்புகின்றார்கள். இந்நடவடிக்கையானது முற்றிலும் தமிழர்களை பழைய நிலைக்குத் தள்ளும் முயற்சிக்கும் சமாதான முயற்சிகள் மீதான தமிழ் மக்கள் மீதான நம்பிக்கைகளைச் சிதறடித்து சமாதான முயற்சிகளை முற்றிலும் நிரந்தரமாகவே உடைத்துவிடும் சதித் திட்டமாகும்.
அண்மையில் நான் உங்களைச் சந்தித்து உரையாடும் போது எமது தலைமைப் பீடம் மத்திய குழுவைக் கூட்ட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் எமது கிழக்குப் பிராந்திய தளபதிகளும் பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளவேண்டியதன் தேவை பற்றியும் விளக்கியிருந்தேன்.
மகிந்த ராஜபகச தமது தரப்பில் சர்வ கட்சி மாநாடு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களையும் நடாத்தி அடுத்த கட்ட ஜெனீவாப் பேச்சுக்களுக்கு ஆயத்தமாவது போல் காட்டிக்கொண்டு, புலிகள் தரப்பில் நான்கு வருடத்திற்கு மேலாக நடைமுறையில் இருந்து வந்த வான்வழிப் போக்குவரத்து நடைமுறைகளையும் அனுமதிக்க மறுத்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கமானது நான்கு வருடமாக நடைமுறையில் இருந்த வான் வழிப் போக்குவரத்தை தடைசெய்தது மட்டுமல்லாது நாம் தெரிவித்த மாற்றுவழி யோசனையான கடற் போக்குவரத்தையும் நிராகரித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தை முயற்சிகளையும் யுத்த நிறுத்த நல்லெண்ண சூழலைக்கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளையும் தடுக்கும் நோக்கில் செயற்படுவதாகவே நாம் உணருகின்றொம்.
மகிந்த அரசிற்கு உண்மையாகவே சமாதான முயற்சிகள் மீது அக்கறை இருந்தால், நான்கு வருடங்களாக நடைமுறையில் இருந்த வான் வழிப் பயணங்களை எந்த மாற்றமும் இன்றி ஏற்றுக்கொள்வதும் அல்லாவிடில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரசன்னத்தோடு எமது கடற் படைக் கலத்தில் எமது போராளிகள் பயணிப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போதைய பதற்றமான சூழ்நிலையை அமைதிக்குக் கொண்டுவரவும் ஆயுதப் படைகளாலும் துணை இராணுவக் குழுக்களாலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பீர்கள் என நம்புகின்றோம்.
இவை தொடர்பாக அரசிடம் இருந்து ஒரு தீர்க்கமான முடிவை எமக்குப் பெற்றுத் தருவீர்கள் என நாம் நம்புகின்றோம்.
தங்கள் உண்மையுள்ள,
சு.ப தமிழ்ச்செல்வன்,
அரசியல்துறைப் பொறுப்பாளர்.
என்று அக்கடிதத்தில் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
நன்றி: புதினம்