Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவி செய்தால் தான் பெருமை
#1
[Image: vivekananda.jpg%20]

ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு, அந்தக் காரியத்தைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்க்கையில்நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடங்களுள் ஒன்றாகும். இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில், வெற்றிக்கு உரிய எல்லா ரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும்தான்.


உலகிற்கு நன்மை செய்வதால், உண்மையில் நமக்கு நாமே உதவி செய்து கொள்கிறோம்.

உயர்ந்த பீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக்கொண்டு, ""ஏ பிச்சைக்காரா! இதை வாங்கிக்கொள்'' என்று சொல்லாதே. மாறாக, அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து, அந்த ஏழை அங்கு இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு. கொடுப்பவன்தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்ததற்காக நீ நன்றியுள்ளவனாக இரு.

சமநிலையில் பிறழாதவன், சாந்தமானவன், நன்மையை ஆராய்ந்து ஏற்பவன், அமைதி படைத்தவன், இரக்கமும், அன்பும் பெரிதும் உள்ளவன் நல்ல பணிகளில் ஈடுபடுகிறான். அதன்மூலம் அவன் தனக்கே நன்மைத் தேடிக் கொள்கிறான்.


விவேகானந்தர்..

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)