இதுவரை இக்களத்தில் <b>இளைஞன்</b> என்பவரிடம் பாராட்டுப் பெற்றோர்..
ஆதிபன்
யாழ் கருத்துக்களத்தில் இணைந்ததிலிருந்து இதுவரையிலும் பண்பாக அருமையான பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். இன்று அவர் தனது 200 ஆவது பதிப்பினை இங்கு பதித்துள்ளார். காதல் பொங்க கவிதைகள் படைப்பார். சமூகம் சார்ந்த நற் கருத்துக்கள் தருவார். அறிவியலுக்குள்ளும் காலெடுத்து வைத்துள்ளார். வந்த வேகத்தில் 200 படைப்பு - அற்புதம்! தொடர்ந்தும் இவர் நிறைய எழுதி எம்மை மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
வானதி
யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடும் இளைஞர்களில் ஒருவர் இவர். இதுவரை 35 பதிப்புகள் பதித்துள்ளார். தமிழில் எழுதுவதில் கவனமாகவும், ஆர்வமாகவும் இருப்பவர். தொடர்ந்தும் சோராமல் களமாடுபவர். இன்னும் 15 பதிப்புகள் எழுதினால் இவருக்கு இடைநிலை அங்கத்துவம் வழங்கப்படும். அந்த வகையில் வாழ்த்துக்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள். அதேநேரம் உங்களிடமிருந்து நிறைய அரியபல தகவல்களையும் எதிர்பார்க்கிறோம்!
சண்முகி
இவர் யாழ் கருத்துக்களத்தில் அனைவரோடும் நட்போடும், பண்போடும் கருத்தாடும் ஒரு பெண். மற்றைய கள அங்கத்துவர்களால் செல்லமாக "சண்முகிப் பாட்டி" என்று அழைக்கப்படுபவர். இதுவரை மொத்தம் 159 கருத்துக்களைப் பதித்திருக்கிறார். ஆர்வமாக அனைத்து விடயங்களிலும் கலந்துகொண்டு சிறப்பிப்பார். உதாரணம்: அஜீவன் அண்ணா நடத்திய ஒரு போட்டியில் பரிசு வென்றுள்ளார். இவர் மென்மேலும் களத்தில் நிறைய ஆக்கங்களைப் பதிவு செய்யவேண்டும் என வாழ்த்துக்கள் கூறுவதோடு அனைத்து கள அங்கத்துவர்களுடனும் சேர்ந்து பாராட்டுகிறோம்.
மணிமாறன்
இவர் யாழ் களத்தின் புதிய அங்கத்துவர். அண்மையில் இணைந்துகொண்ட போதும் சிறப்பாகவும் பண்பாகவும் இதுவரை 24 கருத்துக்களை இங்கு பதித்துள்ளார். அறிவியலுக்கு சந்தேகம் கேட்பார். அரசியலுக்குள் அலசுவார். சமூகம் சார்ந்து தனது பக்க கருத்துக்களை நியாயமாக வைப்பார். மேலும் நிறையக் கருத்துக்களைப் பதித்து களத்தை மெருகூட்டி சிறப்படையுமாறு வாழ்த்துவதோடு அனைவரும் சேர்ந்து பாராட்டுகிறோம்.
தேவகுரு
யாழ் கருத்துக்களத்தின் கணினிப் பகுதியில் மிகவும் பிரபல்யமானவர். "குறுக்கு வழி" தேவகுரு என்று யாழ்களத்தில் அன்பாக மகுடம் சூடுகிறோம். . மொத்தம் 50 கருத்துக்களை யாழ் கருத்துக்களத்தில் பதித்திருக்கிறார். இதுவரைக்கும் மொத்தம் 44 கணினி சார்ந்த குறுக்குவழிகளை இங்கு எமக்கு பயனுள்ளவகையில் தேர்ந்தெடுத்து அளித்திருக்கிறார். அந்தவகையில் அவரிற்கு எமது நன்றிகளும், பாராட்டுகளும். தொடர்ந்தும் எமக்கு பல்வேறு பயனுள்ள ஆக்கங்களைத் தரவேண்டுமென்று நட்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தொடர்க...
தமிழினி
10 ஆம் திகதி பெப்ரவரி மாதம் களத்தில் இணைந்ததிலிருந்து இன்றுவரை 713 பதிவுகளை எழுதியிருக்கிறார். "ரமிலினி" என்று செல்லமாக களநண்பர்களால் அழைக்கப்படுபவர். எழுதுவதும், பாடல்களும் தனது விருப்பங்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் இவர், களத்தில் அப்பப்பொழுது கவிதைகளையும் இணைத்துள்ளார். அதேபோல மற்றைய கள நண்பர்களின் ஆக்கங்களுக்குப் பதில் எழுதி ஊக்குவிப்பதிலும் முன்நிற்பவர். வலைப்பதிவு (
http://www.tamilini.blogspot.com/) ஒன்றினை அமைத்து அங்கும் தனது எழுத்துக்களைப் பதித்து வருகிறார். நகைச்சுவை, பொதுஅறிவு, கவிதைகள், தொழில்நுட்பம் என்று முடிந்தளவு பங்கெடுத்துக்கொள்கிறார். "நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்..", எனக்கே எனக்காக.......! ஆகிய கவிதைகள் நம் களநண்பர்களின் பாராட்க்களைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் நிறைய எழுதிட வாழ்த்துகிறோம். பாராட்டுக்கள் தமிழினி.
உதில கொஞ்சப் பேரக் காணேல்ல... வாறாக்களுக்கு சக கள உறுப்பினர்களாக எமது வாழ்த்துக்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>