Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Autism
#1
நேற்று மாலை 9 மணிக்கு சனல் 5இல் சிறுபிள்ளைகளை தாக்கும் ஓட்டிசம் என்ற குறைபாடு பற்றிய உண்மை திரை நாடகமாக காட்டப்பட்டது. ஓட்டிசம் அனேகமாக ஆண் குழந்தைகளை தாக்கும் ஒரு குறைபாடு. மன வளர்ச்சி உள வளர்ச்சி மற்றும் தொடர்பாடலலில் பாரிய குறைபாடுகளை ஏற்படுத்தும் இந்த குறைபாடு எதனால் தோன்றுகிறது என்பது இன்னமும் கேள்விக் குறியே, ஆனால் இரவு சின்னத்திரையில் ஒலிபரப்பான அந்த நாடகத்தில் தாய் தனது மகனின் இந்த குறைக்கு முக்கூட்டு தடுப்புூசியே காரணம் என குற்றஞ்சாட்டியதுடன் அதை நிரூபிகக்க வைத்திய உதவியை நாடுவதும் அதன் பின் என்ன நடைபெற்றது என்பதுவே அந்த நாடகத்தின் மீதி.
முக்கூட்டு தடுப்புூசி (அம்மை, பொக்களிப்பான் போன்ற பயங்கர வியாதிகளுக்கான தடுப்புூசி ) முன்று மோசமான வியாதிகள் வராது இருப்பதற்காக சிறு குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி. இந்த தடுப்புூசி போட்ட பின்னரே தமது குழந்தைகழுக்கு இந்த குறைபாடு வந்ததாக பெற்றோர் குற்றம்சாட்ட பிரித்தானிய மருத்துவ தலைமைகளே அதை இல்லை என்று மறுத்து வருகின்றனர். ஆனால் இதைப்பற்றி ஆராட்சி செய்த வைத்தியர் இது பற்றிய உண்மைகளை கண்டறியும் போது அவர் மறைமுகமாக அந்த ஆராட்சி செய்வதை மருத்துவ பீட தலைமைகள் தடுக்க முனைந்ததுடன் அவர் அந்த ஆராட்சியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இதில் முக்கிய வியடம் என்ன வென்றால் இந்த தடுப்பூசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களே இதன் பின்னணியில் இருப்பதுதான். தமது இலாபங்களுக்காக குழந்தைகளின் எதிர் காலத்தை இருளில் விடக் கூட இந்த அமைப்புகள் தயாராக உள்ளதா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. நான் இங்கு கேட்க வந்த விடயம் ஐரோப்பாவில் ஏனைய நாடுகளிலும் இந்த முக் கூட்டு தடுப்பூசி ஒரே தடைவையில் போடப்படுகிறதா? ஓட்டிசம் என்ற குறைபாடு மற்றைய ஐரோப்பிய நாடுகளில் பிரித்தானியாவில் உள்ளது போல் அதிக அளவில் உள்ளதா? பதில் தந்தால் உதவியாக இருக்கும்! இரவு சின்னத்திரையில் வந்த அந்த நாடகம் இந்த குறை பாடு பற்றியும் முக்கூட்டு தடுப்புூசி பற்றியும் பல விளக்கங்களை தந்தது. இது பற்றி யாராவது அறிய விரும்பின் இங்கே எழுதவும்.
Reply
#2
முக் கூட்டு தடுப்பூசி
Measles, Mumps and Rubella Vaccine (MMR),
Reply
#3
சுவிற்சலாந்தின் உண்மை நிலமை 2 நாட்களுக்குள் தர முயல்கிறேன்.

http://www.autism-society.org/site/PageSer...=allaboutautism
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#4
நன்றி, ஜே;மன் , மற்றும் நெதர்லாந்து நேயர்கள் யாராவது இது பற்றி அறியத் தந்தால் உதவியாக இருக்கும்.
Reply
#5
வணக்கம் முகமெட்.முக் கூட்டுத் தடுப்புூசிக்கும் இன்நோய்க்கும் எந்த வித சம்பந்தமுமில்லை. வருகிற புதன் கிழமை மட்டும் வேலைப்பழு அதிகம்.. ஆகையால் அதன் பிற்பாடு முழுவிபரம் தருகிறேன்.

<img src='http://www.showtimes.sonypictures.com/assets/bigfish.gif' border='0' alt='user posted image'>
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)