Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
விளக்கம் தேவை
ஓம் என்ற சொல்லின் அர்த்தம் என்ன ?
ஓம் என்பது பிரணவ மந்திரம் என்பது தெரிந்திருக்கும். அதன் அர்த்தம் தற்போது தேவைப்படுகின்றது. எனக்கும் ஒரு அரேபிய நண்பரிற்கும் இடையிலே ஒரு சிறு வாக்குவாதம். ஒரு நண்பனின் கழுத்தில் அணியப்பட்டிருந்த தங்கச்சங்கிலியில் ஓம் என்ற முத்திரை இருந்தது அதைப்பார்த்தும ஏற்பட்ட சந்தேகம்தான் இது
தெரிந்தவர்கள் தீர்த்து வையுங்கள்
[b] ?
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
ஓம் என்பது உடன்பாட்டை உணர்த்துவதாகவும் கொள்ளப்படுகிறது.
உடன் படுதல் என்றால் இசைதல்
இசைதல் என்றால் பொருந்துதல் அல்லது பண் ஓசை பொருந்துதல் எனவும் பொருள் கொள்ளலாம். பண் ஓசை கொள்ளல் என்றால் அங்கே பிரணவ மந்திரம் தொக்கு நிப்பதாக எனக்கு படுகிறது. ஆகவே மொத்தத்தில் ஓம் என்கிறபோது மத hPதியாக பாற்கிறபோது பிரணவ மந்திரம். மனிதநேயம் என பாக்கிறபோது உடன்பாட்டைக்குறிக்கிறது.( மதங்களுக்கிடையிலேயான பிரச்சனைகள் பிளவுகள் அற்ற நிலை எனவும் கொள்ளலாம்?
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
இந்து மத வழிபாட்டில் திருமாலை 'அ' என்ற எழுத்தாலும் சிவனை ' உ' என்ற எழுத்தாலும் (அ+உ) = <b>ஓ</b>
பிரம்மாவை '<b> ம்' </b>என்ற எழுத்தாலும் உச்சரிக்கப்படுவதாகவும் அறிந்துள்ளேன்.
Posts: 69
Threads: 3
Joined: Jan 2004
Reputation:
0
ஓம்=அ+உ(ம்-இசைக்காக சேர்ந்தது)
தமிழில், அ=8, உ=2(தமிழ் எண்கள்) எனவே 8+2=10.
மேழும் தமிழில் 10=ய. ய=ஆன்மா என்று பொருள்.எனவே அ+உ(ம்)=8+2=ஓம்=10=ய=ஆன்மா.
மண்ணால் ஆன இந்த யாக்கையை உயிர் ஆள,உயிரை ஆன்மா ஆள்கிறது. இதை உணர்வே நாம் ஓம்-மை ஒலித்து தியானிக்கின்றோம்.
திருவாசகத்தில் "எட்டிரண்டும் அறியாதவனை.."என்ற அடியும் இப்பொருளால் விளங்கும்.
Posts: 69
Threads: 3
Joined: Jan 2004
Reputation:
0
ஆன்மாவையே அன்பு ஆள்கின்றது எனவே தான் "அன்பே சிவம்,சிவமே அன்பு" என்ற வழக்கு தோன்றியது.ஆக அன்பு தான் நாம் வாழும் வாழ்வின் பொருள்.
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
அருமையான விளக்கங்கள்...ஒரு கேள்விக்குத் தான் எத்தனை பதில்கள்? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
[size=16][b].