Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.webulagam.com/news/national/0401/07/images/img1040107023_1_1.gif' border='0' alt='user posted image'>
இந்திய ராணுவத்திடம் டி-90 டாங்கிகள் ஒப்படைப்பு!
ரஷ்யாவில் தயாரான அதிநவீன டி-90 டாங்கிகளை இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜென்ரல் என்.சி. விஜ்ஜிடம் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஓ. ராஜகோபால் இன்று ஒப்படைத்தார்!
பீஷ்மா என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் தலைசிறந்த டாங்கியான டி-90 முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு அவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் இருந்து இன்று வெளிவந்தது. அதனை பெற்றுக்கொண்ட பாதுகாப்பு உற்பத்தி பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர் ஓ. ராஜகோபால், ஜென்ரல் விஜ்ஜிடம் அளித்தார்.
1,000 குதிரை சக்தி திறன் கொண்ட எஞ்ஜினுடன் கூடிய பீஷ்மா, இலக்குகள் எதிர்பட்டவுடன் சுட்டுத் தள்ளும் திறன் கொண்டது மட்டுமின்றி, அதிவேகமாக போகக்கூடியது, வழிகாட்டு ஏவுகணைகளை தாங்கிச் சென்று ஏவத் தக்கது என்பது மட்டுமின்றி, எதிர்தாக்குதலை சமாளித்துக்கொள்ளக் கூடிய சுய பாதுகாப்பு திறன் கொண்டதாகும்.
இரவில் இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்குதல் நடத்தவல்ல இந்த டாங்கியின் மேலும் உன்னத திறன், வெப்பத்தை உணர்ந்து இலக்கைத் தாக்கும் வல்லமையாகும்.
ரஷ்யாவில் இருந்து தனித்தனி பாகங்களாக பிரித்து அனுப்பப்பட்ட 80 டி-90 டாங்கிகள் கனரக வாகன தொழிற்சாலையில் ஒன்றிணைக்கும் பணி நடந்து வருகிறது.
---------
webulagam.com
---------
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>