01-08-2004, 04:39 PM
ஜனவரி 08, 2003
[b]கருணாநிதி மன்மோகன் சிங் சந்திப்பு: 24
<img src='http://thatstamil.com/images17/karuna-manmohan-425.jpg' border='0' alt='user posted image'>
காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங்கை வரவேற்கும் திமுக தலைவர் கருணாநிதி. உடன் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், திமுக துனைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன்
---------------------
திமுக தலைவர் கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவரும் சோனியா காந்தியின் தூதருமான மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக கூட்டணியை அமைத்தன.
24 ஆண்டுகளுக்குப் பின் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே தற்போது கூட்டணி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று பகலில் சென்னை வந்த மன்மோகன் சிங்கை காங்கிரஸ் நிர்வாகிகளும், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும் வரவேற்றனர்.
பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுடன் கருணாநிதியை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார் மன்மோகன் சிங். அவரை திமுக பொதுச் செயலாளர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் இணைந்து உணவருந்தினர்.
''நாட்டின் முக்கிய தலைவர் கருணாநிதி''
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிங், திமுககாங்கிரஸ் இடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவே நான் வந்தேன். வந்த இடத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணியே இறுதி செய்யப்பட்டுவிட்டது. மதவாத சக்திகளை இந்த அணி தோற்கடித்து மத்தியில் ஆட்சியை அமைக்கும் என்றார்.
நீங்கள் கூட்டு சேரப் போகும் திமுக அணியில் உள்ள மதிமுகவுக்கும் ராஜிவ் காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகளுக்கு இடையே நெருஙகிய தொடர்புள்ளதே என்று நிருபர்கள் கேட்டபோது,
கடந்த காலத்தில் என்னென்னவோ நடந்தது. அதில் எல்லாம் மீண்டும் நுழைய காங்கிரஸ் தயாராக இல்லை. பழைய விஷயத்தை மீண்டும், மீண்டும் கிளற வேண்டியதில்லை.இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இடங்கள் பகிர்வு குறித்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பேசுவோம் என்றார்.
அடுத்த பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டபோது, அதை மக்களும், மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்களும் சேர்ந்து முடிவு செய்வார்கள். பிரதமர் யார் என்று சொல்லாமல் தேர்தலில் நிற்பதால் காங்கிரசுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது.
கருணாநிதி வெறும் ஒரு மாநிலத்தின் அரசியல் தலைவர் மட்டும் அல்ல. அவர் இந்த நாட்டின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்றே நான் நினைக்கிறேன். இந்த நாட்டை உருவாக்கிய தலைவர்களில் மிக முக்கியமானவர் கருணாநிதி. அவரது வாழ்வும் அவரது செயல்களுமே அதற்கு சாட்சி. தமிழகத்தில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த மரியாதையைப் பெற்ற தலைவர்.
தமிழகத்தில் கூட்டணியில் எந்தெந்த கட்சி இருக்க வேண்டும், யாருக்கு எத்தனை இடம் தர வேண்டும் என்பதை எல்லாம் கலைஞர் முடிவு செய்வார் அவர் என்றார்.
கூட்டணியில் மதிமுக நிச்சயம்: கருணாநிதி
இதையடுத்து நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது: டாக்டர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகுந்த திருப்தி அளித்தது. மிக நல்ல சூழலில் பேச்சுவார்த்தை நடந்தது. பா.ம.க. இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து இருந்து வந்தாலும் வரும் 12ம் தேதி என்னுடன் பேசுவதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். பா.ம.கவும் இக் கூட்டணியில் சேரும் என்று நம்புகிறேன்.
இன்று ஏற்படுத்தப்பட்ட இந்த முற்போக்குக் கூட்டணியில் மதிமுக நிச்சயம் இடம் பெறும். அதில் யாருக்கும் எள்ளவும் சந்தேகமே வேண்டாம் என்றார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் சார்பில் இனி தமிழக கூட்டணி விவகாரங்களை மன்மோகன் சிங் தான் கவனிப்பார் என சோனியா காந்தி அறிவித்துள்ளார். 1980ம் ஆண்டில் தான் கடைசியாக திமுகவும் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசும் கூட்டணி வைத்தன.
கிருஷ்ணா வராதது ஏன்?
முன்னதாக கருணாநிதியுடன் கூட்டணி தொடர்பாகப் பேச கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை அனுப்பவே காங்கிரஸ் திட்டமிட்டது.
ஆனால், காவிரி விவகாரத்தில் கிருஷ்ணாவின் மீது தமிழகத்தில் அவப் பெயர் உள்ள நிலையில் அவருடன் பேச்சு நடத்துவது நன்றாக இருக்காது என திமுக தரப்பிலும் தமிழக காங்கிரஸ் தரப்பிலும் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. இதையடுத்தே கிருஷ்ணாவுக்குப் பதிலாக மன்மோகன் சிங்கிடம் இந்தப் பொறுப்பை சோனியா ஒப்படைத்துள்ளார்.
கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு:
இதற்கிடையே புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.
அறிவாலயத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற அவர் முன் வந்ததாகத் தெரிகிறது.
---------
Thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>