<b>தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில்
தமிழ்மொழி செத்துக் கொண்டிருக்கின்றது</b>
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ஆஸ்திரேலியா ஈழத் தமிழர் கழகத் தலைவர் உரை
புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களி டையே தமிழ்மொழி மெல்லமெல்லச் செத்துக்கொண்டு இருக்கின் றது. இத்தகைய நாடான ஆஸ்திரேலியாவில் இருந்து சுமார் பதின்மூன்று வருடங்களின் பின்னர் இந்த மண்ணுக்கு வந்துள் ளேன். நான் பேசும் மொழியில் தடங்கல்கள் ஏற்பட்டால் மன்னித் துக்கொள்ள வேண்டும்||.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர் கழகத்தின் தலைவர் வை.ஈழலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
கலாநிதி சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 79ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழா நிகழ்வு தெல்லிப் பழை துர்க்காதேவி தேவஸ்தான அன்னபுூரணி மண்டபத்தில் துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வை.ஈழலிங்கம் மேலும் தெரிவித்ததாவது:-
1977 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் சங்கம் என்ற பெயரில் எமது அமைப்பு உருவானது. தமிழீழப் பேராட்டம் வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர் சங்கம் என்ற பெயரை ஈழத்தமிழர் கழகம் என மாற்றி ஆஸ்திரேலிய அரசில் பதிவுசெய்து அறக்கட்டளை நிறுவனமாக இயங்கிவருகின்றோம்.
எமது சங்கத்தின் 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டா டும் போது 25 ஆயிரம் டொலர்களைச் சேமித்து ஈழத்தில் கல்வி அபிவிருத்திக்கு உதவி செய்வதெனத் தீர்மானித்தோம். அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றியபோது, ஆறு. திருமுருகன் அங்கு வந்து செயற்பாடு இடம்பெறுவதற்கான வழியை ஏற்படுத்தித் தந்தார்.
சமாதானத்தை நோக்கி இன்று நாம் சென்று கொண்டி ருக்கின்றோம். இந்த நிலைமையில், இளைய தலைமுறையை வலுவுள்ளவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் மாற்ற வேண்டி யது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இதன் அடிப்படையிலேயே நாம் சிவத்தமிழ்ச்செல்வி அம்மா வின் மூலம் கல்வி அபிவிருத்திக்கு நிதி உதவியை வழங்கி யுள்ளோம். தமிழர்கள் வாழும் இடங்களில் சமயத்தின் தேவை யும் அவசியமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே சிட்னி நகரில் முருகன் கோயிலையும் நிறுவி செயற்படுத்தி வரு கின்றோம்.
அங்கு சமய வளர்ச்சி ஏற்பட இங்குள்ளவர்கள் உதவி செய்ய முன்வரவேண்டும். இந்தியாவில் இருந்து அறிஞர்களை அழைக்கின்ற போதிலும் கூட முழுமையான வரலாற்றைக் கூறுபவர்களாக அவாகள் இல்லை. இங்கு இருந்து வருபவர் களினாலேயே உண்மையான சமயக்கருத்தை வெளிப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லு}ரி பீடாதிபதி தி.கமல நாதன் உரையாற்றும்போது கூறியதாவது:-
சமூகத்தில் இன்று கூறுவது ஒன்று செய்வது ஒன்று மாறுபட்ட நிலையே காணப்படுகின்றது. ஆனால், சிவத்தமிழ்ச்செல்வியி டம் இத்தன்மை இல்லை. சொல், செயல், சிந்தனை என்ற மூன் றும் ஒரு நேர்கோட்டிலேயே இருக்கின்றது. இதுவே உயர்ந்த பண்பும் ஆகும்.
தேவாரங்கள், திருவாசகங்கள், திருமுறைகளை ஓதும்போது கைகூப்பி வணங்கிய வண்ணம் இருக்க வேண்டும் என நான் இந்துக்கல்லு}ரியில் படிக்கும்போது அம்மா கூறியிருந்தார். மாண வனாக இருக்கும்போது அதனைப் புறந்தள்ளிய நான், அதன் மகி மையை இன்று உணர்கின்றேன். என்னுடைய மாணவர்களுக் கும்கூட இதனை கற்பித்து வருகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
அகில இலங்கை கம்பன் கழகத்தைச் சேர்ந்த பிரசாந்தன் உரையாற்றும்போது தெரிவித்ததாவது:-
நான் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தபோது ஒன்றை உண ரக் கூடியதாக இருந்தது. அங்குள்ள புலம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த மண்ணில் நிர்க்கதியாக இருக்கும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கி றார்கள்.
நாம் இடம்பெயர்ந்து எம்மையே பாதுகாத்துக்கொள்ள முடியாது இம்மண்ணில் இருந்து ஓடிய போதிலும் அம்மையார் தன்னுடன் இருந்த பிள்ளைகளையும் பாதுகாத்து இங்கு வாழ்ந்த பெருந்தகையாவர் எனக் குறிப்பிட்டார்.
சிவசிறீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள், சட்டத்தரணியும் பதில் நீதிபதியுமான மு.சபாநாதன் உட்பட மற்றும் பலரும் நிகழ்வில் உரையாற்றினார்கள்.
நன்றி: உதயன்