Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசத்தின் புயல்கள்
#1



தனித்தழிழ் ஈழம் தேடிய தமிழர் நம் வரலாற்றுப்பாதையிலே நாம் கடந்து வந்த காலத்தின் பதிவுகள் கனதியானவை. கண்ணீரும் சோகமும் கலந்து நிற்பவை. வீரமும் தீரமும் தியாகமும் நிறைந்து வழியும் இந்தப் பாதையின் வழி நெடுங்கே காணப்படும் கல்லறைகள் கால ஒட்டத்தின் மைல்க்கற்கள். தி;டமும் திண்மையும் கொண்ட இந்த விடுதலை வேள்விக்கு இன்று விடிவு கிட்டும் போன்ற தொரு தோற்றம். ஆம் சமாதானப்புறா சிறகடிக்க முயல்கிறது. சமாதானத்திற்கான பாதைகள் திறக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. வேட்டொலிகளை மட்டுமே கேட்ட நாம் இன்று வெடி கொளுத்தி விளையாட முடிகிறது. காரணம் சமாதானம். ஆயினும் கடந்த இரு தசாப்த காலமாக புரையோடிப்போன இந்த யுத்தத்தில் புண்ணாகிப் போன நம் தேசம் தன் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு முன்னெடுத்துச் சென்றது என்பது நோக்கப்பட வேண்டியதொன்றாகும்.

இனவெறி பிடித்த சில சிங்களப் பேரினவாதிகளின் சிற்றத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்ட உண்மையின் பதிவுகள் பிஞ்சு மனங்களால் என்றுமே மறக்க முடியாதவை. வாழ்வா?சாவா?என்ற கோட்டில் நின்று கொண்டு நாளை என்ன நடக்குமோ என்ற கேள்விக் குறியோடு வாழ்ந்த அந்த நாட்களை இன்று நினைக்கும் போது நெஞ்சம் குமுறுகின்றது. அன்று நாம் பயணிகள் விமானம் பார்த்ததில்லை. ஆயினும் குண்டு வீச்சு விமானங்களே எமக்கு காலைச் சூரியன். ஆட்லறி நம் அன்றாட வாழ்வின் அங்கமாய்ப் போனது வேட்டோசை கேட்கா விடின் நித்திரையே கொள்ள முடியாது போனது . பதுங்கு குழிகளேநாம் அனைவரும் ஒன்று கூடும் பொது இடம் ஆனது. கல்வி கற்க வேண்டிய வயதில் கையிலே துப்பாக்கி ஏந்திய சிறுவர்களுமஇ; கோரப் போரின் தாக்கத்தால் ஏற்பட்ட வடுக்களைத் தாங்கியபடி தாயின்றித் தந்தையின்றித். தனயனின்றி விரக்தியுடன் வாழும் விடலைகளையும்; இன்று வந்து போவோர் அறிவார்களா?.

இத்தனை இம்சைகளுக்கு மத்தியிலும் அன்று நாம் நாமாகவே வாழ்ந்தோம். நம்மை நாமே கட்டியெழுப்பினோம். ஜெயிக்க வேண்டுமென்ற வெறியோடு தொடர்ச்சியாக முன்னேறினோம் மேசை விளக்கிலிருந்தே படித்து நல்ல பெறுபேறுகளைப் பெற்றோம.; எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்மை நாமே இழக்கத் துணியவில்லை.
ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை சமாதானம். சகல விதமான ஆடம்பரப் பொருட்களும் சந்தைக்கு வநததுவிட்டது. வெளிநாட்டிலிருந்தெல்லாம் நம்மவர்கள் வந்துபோகிறார்கள். கூடவே பல அம்சங் களையும் கூட்;டி வருகிறார்கள் அன்றாட வாழ்வில் அடங்கிப் போயிருந்த நம் வாழ்க்கை இன்று ஆட்டம் காண்கிறது.அநியாய ஆசைகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. கொலைகளும் கற்பழிப்புகளும் கூடிக் கொண்டே போகிறது.

கட்டுப்படுத்தக் கூடிய இந்தச் சீரழிவுகளை விட கட்டவிழ்த்து விடப்பட்ட கலாச்சாரச் சீரழிவுகள் தான் எத்தனை எத்தனை. அடக்க ஒடுக்கமாய் ஆடை அணிந்தது போய் அரை குறையாய் தெரிய அணிவது இன்று அத்தியாவசியமாகி விட்டது போற்தோன்றுகின்றது. அன்று மூடிக் கட்டிக் கொண்டு களை பிடிங்கிய நம்மவர்கள் அகதிகளாய் வெளிநாடு சென்று இப் போது அரை குறையோடு இங்கு வந்து ஆசை காட்;டினால் இங்குள்ளோர் நிலை என்னாhவது ? போதைப் பொருட்களும் நீலப் படங்களும் இன்று பொழுது போக்கு அம் சங்களாக மாறிப் போய் விட்;டது. மேசை விளக்கு மறைந்து மின்சாரம் வந்த போதும் கல்வித்தரம் மட்டமாகிப் போய் விட்டது.

இத்தனை காலமும் நாம் பட்ட கஸ்ரங்களின் மூலம் அடைய நினைத்து இதைத் தானா ? இந்தரச் சீரழிந்து போகும் கலாச்சாரத்துக்காகவா நாம் எம் சொத்துகளையும் சொந்தங்களையும்; பறி கொடுத்தோம் ? எந்த நோக்கத்துக்காக போராடத் தொடங்கினோமோ அந்த நோக்கத்தை மறந்து எம்மையே நாம் இழந்து எம் பண்பாடு கலாச்சாhரத்தை சீரழித்து இன்று கூனிக் குறுகிப்போய் நிற்கின்றோம். காலத்தின் கோலத்திற்கேற்ப நாம் மாறுவது வழவல ஆயினும் நாம் காத்து வந்த, ஏற்று வந்ந, நாகரீக உலகங்கள் யாவும் உயர்ந்த போற்றிய நம் விழிமியங்களை விட்டு நாம் ஒரு போதும் விலகிவிடக் கூடாது. வீரம் மட்டும் என்றுமே விலை போகாது, விவேகமுகம் கூட வராhவிட்டால்... எனவே சிந்தித்து செயற்படுவோம். மூன்றாம் ஈழப்போரை அறிவினாற்; தொடுப்போம். புதியதொருதேசம் படைப்போம், ஒன்று பட்ட இலங்கைக்குள்....


இப்படிக்கு...............கெளஷிகன்[/b]
Reply
#2
முதலில் உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் (ஒரு நாள் முந்தி சொல்கிறேன் உங்களுக்கு). நீங்கள் நல்லா எழுதுறீங்கள் அனால் நடக்கும் தவறுகள் அநீதிகளுக்கு மற்றவர்களை நன்கே சாடுகிறீர்கள். குறிப்பாக புலம் பெயர்ந்தவர்களை. நான் பலம் பெயர முன்பே, 80களின் ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன அத்தனையும் நடை பெற்றது. நிங்கள் சொல்லும் அவ்வளவு விடயமும் தற்போது சகல இடங்களிலும் நடைபெறுகிறது. கல்வி என்பது மனித அறிவை வழர்க்கவே அன்றழ வயிறு வழர்த்து நல்ல சீதனம் வாங்க அல்ல. நமது சமுதாயம் இன்று பினநோக்கி செலல காரணம் நமது கல்விக் கலாச்சாரமும் படித்தவர்களின் தலைக்கனமுமே. ஒரு நாட்டுள் வாழ தயாராக இருந்த தமிழ் மக்கள் அடக்கப்பட்ட பின்னர்தான் போராட்டம் தொடங்கியது. நீங்கள் சொன்ன கலாச்சார அழிவு போராட்டத்திற்கு மன்னரே ஆரம்பமாகியது. சிங்கள தேசத்தால்... அனால் அது பின்னர் போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததால் அடங்கி போனது. எழுபதுகளில் மினிஸ்கேட் பசன் நம்ம ஊருக்கு வந்ததை நான் சிறுவயதில் பார்த்தேன். எனவே வெறுமனை மறடறவர்களை குறை கூறுவதை விடுத்து நமது கலாச்சாரத்தின் வரைமுறைகளை கேழ்வி கேழுங்கள். பதில் தானக வரும்.
Reply
#3
இதில் சிக்கல் என்னவென்றால் புலம் பெயர்ந்து தாயகம செல்பவர்கள கிட்டத்தட்ட ஒரு காய்ந்த மாடு கம்பில் வீழ்ந்த நிலையில போகிறவர்கள .அதனை தாயகத்தில உள்ளவர்கள் பெரிது படுததாமல அணைத்துச்செல்லவேண்டியது தாயத்தில் உள்ளவர்களது கடமை..

தாயகம என்றால் அதுதானே...
Reply
#4
மினி ஸ்கேட் என்ன உள்ளாடையோடும் போவினம் அல்லது இல்லாமலும் போவினம்...அதுதானே விடுதலை ஆணுக்குப் பெண் சமானம்...நீங்கள் வெறும் மேலோட போகலாம் அவையள் போகக் கூடாதோ....அதென்ன நியாயம்....முதலில உந்த சமூக அநியாயங்களைக் களைய வேண்டும் ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு இன்னொரு சட்டம்...இப்ப பாருங்கோ கனடாவில boy பிரண்ட் இல்லாட்டி பொம்பிளைப் பிள்ளையில்ல எண்ட கணக்கு...லண்டனில ஒரு பியர் அடிச்சு சிகரட்டும் பத்திக் கொண்டு மொபையில் போனில மெசேஸ் அனுப்பி போய் பிட்ரண்டும் கேள் பிரண்டும் சுத்துறது ஒரு சுதந்திரம்....அதுவும் அரைக் கலுசான் பின் பக்கத்தால கழண்டு விழவேணும் அது பசன்....இப்படி எத்தினை சுதந்திரம்...புகை விடுறதில சுதந்திரம்...பியர் அடிக்கிறதில சுதந்திரம்...கலுசானுக்கு சுதந்திரம்...ரோட்டில கொஞ்சிக் குலாவிறதில சுதந்திரம்....இதெல்லோ விடுதலை...உத விட்டிட்டு சும்மா கலாசாரம் எண்டு கொண்டு அடங்கி ஒடுங்கி வாழுறதெல்லோ அடிமைத்தனம்....அதுதான் புலத்தில பொறுக்கி எடுத்த சுதந்திரத்தை அங்க போய் சுதந்திராமாய் சொல்லிக் குடுக்கினம்...அவையும் சும்மா வருகுது சுதந்திரம் எண்டு பொக்கற்றுக்குள்ள போடுகினம்.....இதில என்ன குற்றம் பாருங்கோ...சும்மா சொல்லாக் கூடாது இப்பத்தப் பெடி பெட்டை நாகரிகத்தின்ர உச்சியில தான் இருக்கினம் என்டதை அடிக்கடி நிறுவினம்.....கலை நிகழ்ச்சிக்கு வந்தாலும் கட்டிப் பிடிச்சுக் கொண்டெல்லா வருகினம்....இப்ப பிலிம் இவையே காட்டுவினம் பிறகேன் தமிழ் நாட்டில இருந்து இறக்குவான் பிலிம்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
உது தனிநாட்டு வியாதியின்ரை பக்கவிளைவுகள்தான் (சைட்இஃபெக்ற்) வியாதி குணமானாலும் சைட்இஃபெக்ற் இருக்கும்.. அதில் எந்தவித சந்தேகமுமில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
பேராட்டாம் என்றால் பல புயல்களை சந்தித்துதான் ஆகவேண்டும்.

கலாச்சாரம் என்பது எம்மில்தான் தங்கி இருக்கின்றது. அடுத்தவன் என்ன செய்கின்றான் என்று பார்ததுசெய்ய முயன்றால் நாம் மேல்நோக்கி போகமாட்டோம். கீழ்நோக்கித்தான் போவோம்.
எமக்கென்று ஒரு வரையறையை எமக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வகுத்துக்கொண்டால் என்றென்றும் வெற்றிதான்.

குப்பிவிளக்கில் படித்தபோது கிடைத்த பெறுபேறுகள் குழிழ் விளக்குகளினால் குறைந்துபோகின்றது என்ற ஆதங்கம் உண்மையானது. அதை நினைக்க வேதனைதான். அதற்கான காரணம் புலம்பெயர்ந்து சென்றவர்களின் மீள் வருகை என்று கணக்கிலெடுப்பது மிகப்பெரிய தவறு.
இன்றைய இந்த வீழ்ச்சிக்கான காரணம் இளைஞர் யுவதிகளிற்கு கிடைத்துள்ள கட்டுப்பாடற்ற தன்மை. யாழ் மண்ணிலே இராணுவ ஆட்சியும் இல்லை புலிகளின் ஆட்சியும் இல்லை. இரண்டும்கெட்டான் நிலையில்தான் தேசம் அழுகின்றது.

முற்றுமுழுதான காரணம் எமது இளைஞர்களின் தான்தோன்றித்தனமான போக்கு
[b] ?
Reply
#7
பக்கவிளைவுகள் இல்லை தாத்தா !
பக்கமான விளைவுகள் அவை பாதகமானவையாகவும் இருக்கலாம் சாதமானவையாகவும் இருக்கலாம்

எப்பவுமே அன்னமாக இருக்க பழகுவோமே ஏன் பன்னாடையாகத்தான் வாழ்வேன் என்று அடம்பிடிக்கின்றீர்கள்
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->உது தனிநாட்டு வியாதியின்ரை பக்கவிளைவுகள்தான் (சைட்இஃபெக்ற்) வியாதி குணமானாலும் சைட்இஃபெக்ற் இருக்கும்.. அதில் எந்தவித சந்தேகமுமில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  Tongue  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
Reply
#8
<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->பக்கவிளைவுகள் இல்லை தாத்தா !
பக்கமான விளைவுகள் அவை பாதகமானவையாகவும் இருக்கலாம் சாதமானவையாகவும் இருக்கலாம்

எப்பவுமே அன்னமாக இருக்க பழகுவோமே ஏன் பன்னாடையாகத்தான் வாழ்வேன் என்று அடம்பிடிக்கின்றீர்கள்
<!--QuoteBegin-Mathivathanan+--><div class='quotetop'>QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->உது தனிநாட்டு வியாதியின்ரை பக்கவிளைவுகள்தான் (சைட்இஃபெக்ற்) வியாதி குணமானாலும் சைட்இஃபெக்ற் இருக்கும்.. அதில் எந்தவித சந்தேகமுமில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  Tongue  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->இப்போது தேவைக்குப் பன்னாடை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இவ்வளவு காலமும் செய்த அநியாயம் பன்னாடையிலுள்ளது.. அத்தனையும் அதுதான் செந்தபந்தங்களே தெரியாமல் ஒவ்வொருவர் ஒவ்வொருநாட்டில்.. ஒவ்வொரு பாஷை பேசிக்கொண்டு.. விசித்திரமான வடிகட்டல்..
வானொலிகளை உற்றுக் கேட்டுப்பாருங்கள்.. உண்மைத்தன்மை புரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#9
இன்று இந்தியாவிலிருந்து வருகிற பட பஷனை விட புலத்திலிருந்து ஒண்டும் போகேல்லை. புலத்திலை நிங்கள் சொல்வது நடந்தாலும் அதற்கும் தயாகத்தில் நடப்பதற்கும் தொடுப்பு போடாதையுங்கோ.. 70களிலை மினிஸ்கேட் வரேக்கை புலத்திலையிருந்தே கொண்டு பேனவை.. ஆடை சுதந்திரம் தனி மனித உரிமை, அடுத்தவனை அவலப்படுத்தாதவரை அது அவர் அவர் பிரச்சனை. அனால் இப்ப தாயகத்திலை நடக்கிற கூத்தகளுக்கு புலத்தை சுட்டிக்காட்டினால் புலத்தில் உள்ளதுகள் ஒண்டும் செய்ய முடியது. தென்இந்தியாவில் கூட இப்ப இந்த பிரச்சனை இருக்கு.. அங்கை எப்ப எம்ரீவீ வந்துதோ அப்பவே இது தொத்தி விட்டது, இப்ப அது மற்ற இடங்களுக்கும் பரவுது. பரப்புபவர்கள் சிம்ரான், ரம்பா, ஜோதிகா போன்றர்களே..
Reply
#10
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எனவே சிந்தித்து செயற்படுவோம். மூன்றாம் ஈழப்போரை அறிவினாற்; தொடுப்போம். புதியதொருதேசம் படைப்போம்,<b> ஒன்று பட்ட இலங்கைக்குள்.... </b>
இப்படிக்கு...............கெளஷிகன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:?: :roll: Confusedhock:
Reply
#11
ஒன்றுபட்டால் என்ன பாடாவிட்டால் என்ன தமிழன் கெட்டு குட்டிச் சுவராகாமல் இருந்தால் கடவுள் புண்ணியம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
இது நன்றாகத்தான் இருக்கு.
இப்படி இந்தக்காலத்தில் இருந்தால்
நகைவாங்கிக் குடுத்தே கணவன் ஆண்டியாகிப் போவான் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
<b>கல்வி கற்க வேண்டிய வயதில் கையிலே துப்பாக்கி ஏந்திய சிறுவர்களும கோரப் போரின் தாக்கத்தால் ஏற்பட்ட வடுக்களைத் தாங்கியபடி தாயின்றித் தந்தையின்றித். தனயனின்றி விரக்தியுடன் வாழும் விடலைகளையும்; இன்று வந்து போவோர் அறிவார்களா?. அப்படி அறிந்து உணர்ந்திருந்தால் அவர்கள் சொல்,செயல் ,னடை,உடை,பாவனை வேறு . அப்படியானவர்கள் பலர் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இது பொருந்தாது

நான் 83 இல் பிறந்தவன். தொடர்ச்சியான் இடம் பெயர்வுகளினை பலமுறை எதிர் கொன்டவன்.என் போன்ற மனநிலையில் உள்ளவர்களே இன்றய இளையவர்கள். பொதுவாக கலாச்சாரப்பாதிப்பு வெளிக்காட்டப்படுவது இன்றய இளையவர்களிலேயே தவிர நேற்றய இளயவர்களில் அல்ல
மனித மனம் என்பது அலைபாயக்கூடியது....தேவைகளையும் ஆசைகளயும் பொறுத்து மாறக்கூடியது.காணாத ஒன்றை காணும் பொழுது மனம் நிலைதடுமாறுகின்றது.அந்த நினைப்பிலேயே மனம் தவிக்கிறது.இன்றய இளயவர்களின் உண்மை நிலை இது தான்.

னாகரீக மோகத்தின் பக்க விளைவுகள் அந் நாகரீகம் தோன்றிய நாட்டில் இருக்காது.னம் போன்ற் நாகரீகமடையும் நாடுகளில் தான் அதன் தாக்கம் வலுப்பெற்றிருக்கும்.இதனை புரிந்து கொள்ள் வேண்டும்

என்னால் இப்படி உடுத்த முடியவில்லயே,என்னால் இப்படி பந்தாவாக வலம்வர முடியவில்லயே என ஆதங்கப்படுபவனில் தான் அதன் தாக்கம் தெரியும்.

கருத்து குறுவது சுலபம்.கடைப்பிடிப்பது தான் கடினம்.
அதை அனுபவித்தவனுக்குத் தான் அந்த ஆதஙம் புரியும்.னான் அனுபவித்தவன்.

இது வியாதியுமல்ல் பக்க விளைவுமல்ல
வெளினாட்ட்வர்கள் விளங்கிக் கொள்ள் வேன்டிய உன்மை</b>
Reply
#14
வியாதி ஜீனிலையே இருக்கு.. பிறகெப்படி இல்லையென்று சொல்லுவார்..? கௌஷிகன்.. நீங்கள் எழுதியதை திரும்ப கிரகித்து வாசித்துப்பாருங்கள் வியாதியும் வியாதியால் வந்த பக்கவிழைவும் தெரியும்..

<!--QuoteBegin-கெளஷிகன்+-->QUOTE(கெளஷிகன்)<!--QuoteEBegin-->புதியதொருதேசம் படைப்போம்,<b> ஒன்று பட்ட இலங்கைக்குள்.... </b>
இப்படிக்கு...............கெளஷிகன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அது சரி.. நீங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருப்பீர்கள்தானே.. இது பூச்சாண்டி இல்லைத்தானே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#15
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><b>கல்வி கற்க வேண்டிய வயதில் கையிலே துப்பாக்கி ஏந்திய சிறுவர்களும் கோரப் போரின் தாக்கத்தால்..... </b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->


கல்வி என்பது வெறும் டாக்குத்தர் ஆவதும் பட்டதாரி ஆவதும் மட்டும் அல்ல...இராணுவக் கல்வியும் அவசியம்...பாரம்பரிய தேசம் இழந்து அடிப்படை வாழ்வுரிமைக்காக ஏங்கி நிற்கும் சமூகத்தில் அனைத்துக் கல்வியுடன் இராணுவக் கல்வியும் அவசியம்....சிங்கப்பூரும் இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்வதும் அதுவே தான்....எமது சமூகம் எதிர்காலத்தில் தலை நிமிர்ந்து வாழ் வேண்டுமாயின் சுவிஸ்லாந்தில் அரசே வீட்டுக்கொரு துப்பாக்கி வழங்கி தேசத்தைக் காக்க நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் பொறுப்பளித்துள்ளது போல் அளிக்கப்படுதல் அவசியம்.....வள்ளுவரே சொல்லி இருக்கிறார் படையில்லாத அரசு நிலையில்லாதது என்று....

வீட்டில் கத்தி இருக்கிறது என்பதற்காக என்ன கொலையா செய்து கொண்டிருக்கின்றோம்......

இதையும் கொஞ்சம் யதார்த்தத்தோடு சிந்திக்கக் கடவீர்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)