01-20-2004, 09:17 PM
வானொலி காலம் போய் இன்று தொலைக்காட்சிக்கலாமாய் உள்ளதுஇ. இவை பற்றி சில சந்தேககங்கள் எழுகின்றன. இங்கு வானொலி பற்றி மாறன் எழுதிய ஒரு கருத்து. விளக்கமாய் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் ம் நேரம். உங்கள் கருத்துக்களையாவது வையுங்கள்.
சிலகாலத்திற்கு முன்வாசித்த பத்திரிகைச்செய்தி
........ இரண்டாம் உலகப்போரின்போது பி.பி.சி ஒரு வானொலிச்சேவையை நடத்தியது. கிட்லரின் மொத்தப்படைகளையும் குறிவைத்து ஜேர்மன் நாட்டுக்கு வெளியில் சென்று சண்டையிட்டுக்கொண்டிருந்த அணிகளுக்கு அவர்களுடைய மொழியில் உண்மை நிலவரங்களை இந்தவானொலி வெளியிட்டு வந்தது. இதை ஒரு நம்பகத்தன்மை கொண்ட செய்தி ஊடகமாக பல ஜேர்மன் படையாட்கள் ஏற்றுக்கொள்கின்ற நிலைவரும் வரை, இந்த வானொலி மிகவும் உண்மையான செய்திகளையே ஒலிபரப்பி வந்தது. தனது செய்திகளுக்கு நம்பகத்தன்மை கிடைத்துவிட்டது என்ற நிலைமை தோன்றியபின்னர், மெதுமெதுவாக உண்மை கலந்த சில பொய்களையும் சில பரப்புரைகளையும் இந்தவானொலி ஒலிபரப்பிற்று. உதாரணமாக உளவாளிகள் மூலம் சில ஜேர்மன் நகரங்களில் உள்ள முக்கியமானவர்கள், இடங்கள், என்பவற்றை அறிந்து அதன் அடிப்படையில் உண்மையெனத்தோன்றக்கூடிய திரிபுபட்ட செய்திகளை வெளியிட்டு ஜேர்மனியால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் இருந்த அதன்படைகளில் பல குழப்பங்களை இந்த வானொலி ஏற்படுத்தியது..........
உடனடியாகக் குழப்பங்களை ஓரிடத்தில், ஒரு சமூகத்தில், ஒரு அமைப்பில் உருவாக்க ஒரு குழுவை, தனி நபர்களை உடனடியாக விலைக்கு வாங்குவது, தயாராக்குவது மிகக்கடினம். இன்று உலகெங்கும் உள்ள ஆதிக்கசக்திகளின் உளவு அமைப்பு, வெளிநாட்டுப்பிரிவு ஏனைய நாடுகளில் (அவை தமக்கு ஆதரவான நாடாக இருப்பினும்) பல்வேறு விதமான குழுக்களை உருவாக்கி வைத்துள்ளது, இக்குழுக்களின் தலைமை இவ்வாறான உளவு அமைப்புக்களுடன் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே அல்லது ஒரு மூன்றாம் தரப்பு மூலமாகவே தொடர்புகளை வைத்திருக்கின்றது. இவர்கள் இவ்வாறு இவைகளை உருவாக்கி வைத்திருப்பதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இனங்களிடையே, நாடுகளிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதும் ஒன்றாகும். இவர்களை பார்ப்பதற்கு மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் எதுவித வித்தியாசமும் தெரியாது. மக்களுடன் மக்களாக, அவர்களுக்கு தொண்டுகள் செய்பவர்களாக ஊடுருவிக்கொண்டு இருப்பார்கள். அத்துடன் ஒரு உளவு அமைப்புக்களின் ஆலோசனைக்கேற்ப சில வேலைத்திட்டங்களை முன்னின்று செய்வார்கள். இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் மக்களின் தேவைகளை தாம் முன்னின்று செய்வோம், செய்து வைப்போம் என்று கூறிவைப்பார்கள். இவை கட்சிகளாகவே, மன்றங்களாகவோ, சமூக அமைப்புக்களாகவே, சங்கங்களாகவோ, வானொலியாகவே, தொலைக்காட்சியவோ, பத்திரிகையாளர்களாகவே இருக்கலாம்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் சிறீலங்காவை தன்காலடியில் வைத்திருக்க வேண்டும் என்றதொரு அடிப்படையில் ஆரம்பகாலகட்டங்களில் தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா உதவிகள் பல செய்தது. இந்தியா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழர்கட்கு தனிநாடு வேண்டும் என்ற ரீதியில் ஆயுதப்பயிற்சியோ ஆயுத உதவியோ அளிக்கவில்லை. அதன் முக்கிய நோக்கம் சிறீலங்காவை தன் கட்டுக்குள் வைத்திருப்பதே. தமிழீழ விடுதலைப்போராட்டம் விடுதலைப்புலிகளால் தீர்க்கதரிசனத்துடன் முன்னெடுக்கப்பட்டபோது, அதாவது விடுதலைப்புலிகள் தமிழீழத்திலேயே தம் முக்கிய தளங்களை அமைத்து தம் சொந்தக்காலில் நின்று போராட்டத்தை நடத்தியபோது ஏனைய தமிழீழ விடுதலை அமைப்புக்களை புலிகளுக்கு எதிராக திசை திருப்பியது. இவைகளும் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது, சிறீலங்காவுக்கு நேரடியாக உதவி சிறீலங்காவை தன்கட்டுக்குள் வைத்திருக்கும் விதத்தில் வெளிநாட்டுக்கொள்கைகள் வகுக்கப்பட்டன. அதன் அடிப்படை தான் இந்தியாவின் தமிழீழ ஆக்கிரமிப்பு. பின் இந்தியா வெளியேறினாலும் தமிழ்க்குழுத் தலைமைகளை சிறீலங்கா அரசுடன் சேரவைத்து விடுதலைக்கு எதிரான மறைமுகமாக பெரும் போர் ஒன்றை நடாத்துகின்றது. இது தவிர வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களில் தேவைப்படும் நேரங்களில் குழப்பங்களை உருவாக்க ஒரு சிலரை இந்திய, சிறீலங்கா, மற்றும் சில அரசுகள் பண உதவிகளை வழங்கி வைத்திருக்கின்றது.
இந்த வகையில் புலத்தில் சில வானொலிகள் ஏகாதிபத்தியத்தின் துணை கொண்டு நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஒரு வானொலி முற்று முழுதாக விடுதலைக்கு எதிரான கருத்துக்களை பரப்புரை செய்து கொண்டு அவர்களை ஒன்றிணைக்கும் வேலையிலும் (தெரிந்தவர்களுக்கு தொலைபேசியில் கட்டாயம் புலிகளுக்கு எதிராக சில வார்த்தைகள் பேசவேண்டும் என அன்பு வேண்டுகோள் விடப்பட்ட விடயங்கள் பதிவில் வைத்துள்ளார்கள்). மாற்றுக்கருத்துக்கள் என்றபோர்வையில் போரட்டத்தையும், போராளிகளையும் கொச்சைப்படுத்தும் செயல்களை ஏவலாளிகளின் ஆலோசனைப்படி செய்து வருவதை இந்த நிகழ்ச்சிகளை (நிகழ்சியா) அவதானித்து வந்தால் நன்கு புரியும். அத்துடன் யாரும் தொலைபேசியில் வராதபோது ஒருவரே மீண்டும் மீண்டும் மூன்று தடவைகள் குரல்மாற்றிப் பேசியதையும் உற்று அவதானித்தால் புரிந்து கொள்ள முடியும். இந்த வானொலி அதற்கான வேலையை ஜனநாயகம் என்ற தொனியில் செய்து வருகின்றது. ஜனநாயகத்தைப்பற்றி கதைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது. எத்தனை உயிர்களைக் குடித்துவிட்டு, கொள்ளையடித்துவிட்டு இங்கு குடியிருக்கின்றார்கள். சரி திருந்தி விட்டார்களா என்றால் இல்லை. இன்னும் ஏவல்பேய்களிடம் அடிமைவேலை செய்துகொண்டல்லவா இருக்கின்றார்கள்.
மற்றைய வானொலி தாம் முன்பு என்ன செய்தோம் என்பதை மறந்துவிட்டு (மறைத்துவிட்டு என்றால் பொருத்தமாக இருக்குமோ தெரியாது) தேசியத்தலைவரின் ஆளுயர படத்தை தங்கள் அலுவலகத்தில் வைத்து தாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று காட்டவும் முற்படுகின்றார்கள். ஆட்களில் மாற்றங்கள் வரலாம் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் இவர்கள் மாறியது நம்பக்கூடியதாக இல்லை. தங்களை பத்திரிகையாளர்கள் என்றும், புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த இரண்டாவதாகக் குறிப்பிட்ட வானொலிக்காரர் மக்களிடையே ஊடுருவல் செய்ய முற்படுகின்றார்கள்.
இவையெல்லாம் ஏகாதிபத்தியத்தின் கைவரிசைகளில் ஒன்றென்றே கருதவேண்டியுள்ளது. ஒரு வானொலி ஏதாவது ஒரு காரணத்தினால் தங்கள் கையைவிட்டுபோய்விட்டால் இன்னொன்றை பாவிக்க வேண்டிய தேவையேற்படலாம் என்ற நீண்ட பாரிய நோக்கத்துடன் இப்புதிய வானொலிகள் உருவாக்கப்படுகின்றன. அல்லது வேறு வேறு எகாதிபத்தியத்தின் பின்புலத்தோடு இவைகள் உருவாக்கப்படுகின்றன. இவை எல்லாம் நீண்ட நோக்கில் தமிழ்மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தப்போகின்றன என்பது உண்மை.
இவர்கள் வீரியமற்று இருந்தாலும் ஒரு குடம்பாலுக்கு ஒரு துளி விசம் என்பதுபோல எதிர்காலத்தில் ஏதாவது நடைபெறலாம் என்பதால் நாம் இன்றே அவதானமாக இருத்தல் நல்லதல்லவா?
நன்றி: மாறன்
http://www.yarl.com/kalam/viewtopic.php?p=...ighlight=#14036

<b>
?
?</b>-
?
?</b>-

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->