02-26-2004, 11:26 PM
மனிதர்கள் பிறக்கின்றனர்; வாழ்கின்றனர்; கடைசியில் இறந்து போகின்றனர். இந்த நியதி மனிதர்களுக்கு மட்டுமல்ல; எல்லா ஜீவன்களுக்கும் பொது. ஆனால், மனிதனைப் பற்றிதான் எல்லாரும் பேசுவர். மனிதன் வாழ வேண்டியது தான். அவனவன் விதிப்படி வாழ்ந்து மரணமடைய வேண்டியது தான். ஆனால், எப்படி வாழ வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
ஒருவன் உயிரோடு இருக்கும்போது அவரை பலர் கொண்டாடுவதுண்டு. ஏதாவது லாபம் கிடைத்தாலும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவரை கொண்டாடி புகழ்பாடுவதுண்டு. ஓ! அவரா? அவர் சிறந்த பரோபகாரியாச்சே என்பார் பலன் பெற்றவர். ஓ! அவனா! மகா கஞ்சனாச்சே! காலணா தர்மம் செய்ய மாட்டானே! என்பார் பலன் பெறாதவர்.
ஒரு தாசி இருந்தாள். அவள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார் ஒரு சாமியார்.
தாசி வீட்டு வழியாக ஒரு பிணத்தை தூக்கிச் சென்றதை பார்த்தாள் அந்த தாசி. உடனே, வேலைக்காரியைக் கூப்பிட்டு, அதோ ஒரு பிணம் போகிறது. அதன் பின்னாலேயே போய், இறந்தவன் சொர்க்கத்துக்கு போகிறவனா, நகரத்துக்குப் போகிறவனா என்று பார்த்து விட்டு வா என்றாள்.
திண்ணையில் உட்கார்ந்திருந்த சாமியாருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் தாசியைக் கூப்பிட்டு, ஏம்மா! ஒருவன் இறந்து விட்டால், அவன் சொர்க்கத்துக்குப் போவா னா, நரகத்துக்குப் போவானா என்று எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? என்று கேட்டார். அதற்கு ஏதாவது மிஷின் அல்லது மீட்டர் வைத்திருக்கிறாயா என் றார்.
என்னாசாமி! இது கூட உனக்குத் தெரியாதா? பிணத்தின் பின்னால் போகிறவர்கள், மனு ஷன் ரொம்ப நல்லவன். எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறான். அநியாயமாகப் போய் விட்டானே என்று பரிதாபப்பட்டால், இறந்தவன் சொர்க்கத்துக்குப் போவான் என்று பொருள்.
அப்படி இல்லாமல், படுபாவி, தொலைந்தான். இவன் எவ்வளவு அக்ரமங்கள் செய்திருக்கிறான். எவ்வளவு குடும்பங்களை மோசம் செய்திருக்கிறான் என்று பேசிக் கொண்டு போனால், இறந்த வன் நரகத்துக்குப் போவான் என்று சொல்லலாம். இதுகூட தெரியாதா சாமி உங்க ளுக்கு என்றாள் அவள்.
சாமியாராக இருந்தும்கூட அந்த தாசிக்கு உள்ள அறிவு நமக்கில்லையே என்று வருத்தப்பட்டார் சாமியார். அதாவது மனிதன் இறந்தபிறகு அவனைப்பற்றி மற்றவர்கள் உயர்வாகப் பேச வேண்டும். அப்படி வாழ வேண் டும். சுயநலம் பிடித்து தனக்காகவே வாழக்கூடாது!
thaks
dinakaran varamalar

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->கொஞ்சம் மாறி இருக்கு அவ்வளவு தான்.