Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஸ்பெயினில் (Spain) குண்டு வெடிப்பு...!
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39876000/gif/_39876314_south_east_madrid_416map.gif' border='0' alt='user posted image'>
குண்டு வெடிப்பு நடந்த இடங்கள்...!

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39875000/jpg/_39875742_train_ap203body.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39875000/jpg/_39875754_police_victim_ap203body.jpg' border='0' alt='user posted image'>

ஸ்பெயின் தலைநகரில் உள்ள முக்கியமான புகையிரத நிலையத்திலும் மற்றும் அதன் அருகிரு இன்னும் இரண்டு புகையிரத நிலையங்களிலும் மக்கள் அதிகமாக கூடும் நேரத்தில் நடந்த பயக்கரக் குண்டு வெடிப்புக்களில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதுடன் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்...! இதை ஸ்பெனில் இயங்கும் ஈடா (Eta) எனும் தீவிரவாத அமைப்பே செய்திருக்க வேண்டும் என்று ஸ்பெயின் அரசு கருத்து வெளியிட்டுள்ளது...!

ஈராக் சண்டையில் அமெரிக்க சார்ப்புப் படைகளுடன் ஸ்பெயின் படைகளும் இருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது....! சில தரப்புக்கள் இது Eta வின் வேலை இல்லை என்றும் இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என்றும் கருதுகின்றன...!

Thanks BBC.com...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ஸ்பெயின் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன! 175 பேர் பலி! 600 பேர் காயம்!


ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள ரயில் நிலையங்களில் நின்றுக்கொண்டிருந்த 4 ரயில்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 175-க்கும் அதிகமான பயணிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது!

ஸ்பெயினின் பாஸ் எனும் பகுதியின் விடுதலைக்காக போராடிவரும் ஈ.டி.ஏ. எனும் பயங்கரவாத இயக்கம் நடத்திய கொலைவெறித் தாக்குதல் இது என்று அந்நாட்டு அரசின் பேச்சாளர் எடுவார்டோ சாப்லானா கூறியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் பொதுத் தேர்தலுக்கு 3 நாட்களே உள்ள நிலையில் அந்நாட்டின் அதிவேக நீண்டதூர ரயில் ஒன்றும், 3 புறநகர் ரயில்களிலும் சிறு நேர இடைவெளிகளில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது என்றும், குண்டு வெடிக்கும் பொழுது அந்த 4 ரயில்களிலும் ஏராளமான பயணிகள் இருந்ததாகவும் மேட்ரிட் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

முதல் குண்டு அட்டாச்சோ ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அதிவேக ரயிலில் வெடித்தது. அதன் பிறகு மேட்ரிட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள புறநகர்ப் பகுதியில் நின்றுக்கொண்டிருந்த ரயில்களில் குண்டு வெடித்தது. குண்டுகள் வெடித்ததும், ரயில் நிலையங்களில் நின்றுக்கொண்டிருந்த மற்ற பயணிகளை அதிவேகமாக வெளியேற்றிய காவல்துறையினர், சில நிமிடங்களில் ரயில் நிலையங்களில் இருந்து வெளிக்கொணர்ந்தனர்.

ஸ்பெயின் அனைத்து ரயில்களிலும் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஸ்பெயின் அரசிற்கு எதிராக போராடிவரும் பிரிவினைவாத இயக்கமான ஈ.டி.ஏ. கடந்த 30 ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் இதுவரை 850-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

webulagam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)