Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வரும் தேர்தலில் தமிழீழ மக்களின் கடமை....!
#1
[b]<span style='color:red'>வரும் தேர்தலில் தமிழீழ மக்களின் கடமை....!

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/Home_Symbol_23482_140.JPG' border='0' alt='user posted image'>

[b][size=16] வட-கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் கருணா என்கின்ற முரளிதரனின் நடவடிக்கையானது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இன்று பரவலாகப் பேசப்படும் விடயங்களில் ஒன்றாகவுள்ளது. அதாவது மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? அவர்கள் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இவ்விவகாரம் முதன்மைபெறக் காரணமாகும்.

கருணா என்கின்ற முரளிதரனின் நடவடிக்கையானது மட்டு-அம்பாறை மாவட்டங்களில் பிரதேசவாதத்திற்கு தூண்டுகோளாக இருக்கையில் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றை வலியுறுத்தி தேர்தலில் போட்டியிடுதல் என்பது எத்தனை து}ரம் சாத்தியமானது என்பதே இது குறித்த கேள்விக்கும், நெருக்கடிக்கும் காரணமாகும்.

ஏனெனில், இத்தேர்தலைத் தமிழர் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளத் தயாரானபோது கூறப்பட்டது போன்று தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமை, தமிழ் மக்களின் ஏகபிரதிநிதித்துவம் என்பனவற்றை வலியுறுத்துவதற்கான செயற்பாட்டிற்கு கருணாவின் நடவடிக்கைகள் குந்தகமாகியுள்ளது.

கருணாவின் தற்போதைய நடவடிக்கையானது எதிரிக்குச் சகுனப்பிழையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தனது மூக்கை அறுத்துக் கொண்டது போன்றதாகும். அதாவது தனது தனிப்பட்ட அபிலாசைகளுக்காக மட்டு-அம்பாறை மக்களின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எனலாம்.

இதன்காரணமாக இன்று மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகள் ஒருவகை குழப்பத்திற்குள்ளாகியுள்ளதெனலாம். அதாவது தமிழர் தாயகம், தேசியம் என்பனவற்றையும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகளே என்பனவற்றையும் வலியுறுத்தித் தேர்தலில் களமிறங்கத் தயாரான மட்டு-அம்பாறை மாவட்ட கூட்டமைப்பினர் இன்று கருணாவின் செயற்பாட்டால் குழப்பத்திற்கும், குறுகிய சிந்தனைக்கும் உட்பட வேண்டியவர்களாகியுள்ளனர்.

இந்நிலையில் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தேர்தலானது தமிழர் தேசியக் கூட்டமைப்பினருக்கு சில பின்னடைவுகளைச் சிலவேளைகளில் ஏற்படுத்தக்கூடும். இதனால் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் சிலவும் மகிழ்ச்சியும் அடையக்கூடும்.

அதாவது, தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவை வலுவிழந்து போவதாக அவர்கள் கற்பனை செய்து கொள்ளக்கூடும். ஆனால் இவை தற்காலிகமானவை மட்டுமே. கருணாவின் துரோகச் செயலினால் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவை சிதைக்கப்படவோ பலவீனப்பட்டுவிடவோ போவதில்லை. தற்போதைய சூழ்நிலையில் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் எதிர்வரும் தேர்தலில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பினும் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பன சிதைவுறப் போவதில்லை.
சில தீய சக்திகளின் தூண்டுதலினால் ஒரு சில தனி நபர்களின் நடவடிக்கையினால் தமிழ் மக்களின் உறவையும், உணர்வையும் பிரித்துவிட முடியாது. அத்தோடு, யாழ். மாவட்டத்திலும், வன்னிப்பெரு நிலப்பரப்பிலும், கிழக்கில் திருமலையிலும்; தமிழ் மக்கள் ஏகோபித்த ரீதியில் இவற்றை வலியுறுத்தி முற்பட்டு நிற்பதன்மூலம் கருணாவின் துரோகத்திற்கு பதிலடிகொடுக்க முடியும்.

கருணாவின் செயற்பாடானது மட்டு-அம்பாறை மாவட்டங்களில் பிரதேசவாதத்திற்கு வித்திடுவதாக இருப்பினும் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் கருணாவின் செயற்பாட்டினால் ஓர் இக்கட்டிற்குள் தள்ளப்பட்டிருப்பினும் அதன் வேட்பாளர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் என்பதையும் தாயகம் பிளவுபடுவதையும் ஆதரிப்பதாக இல்லை. இதனை தேசியக் கூட்டமைப்பு தலைமை வேட்பாளர் ஜோசப் பரராஐசிங்கம் அவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, யாழ், வன்னி, திருமலை தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் தமிழர் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதும் வலியுறுத்தப்படுவதாக இருக்கும். மேலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமும் வலுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

ஆகையினால், கருணாவின் துரோகச் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் செயற்படும் சக்திகளுக்கும், கருணாவின் துரோகச் செயலினால் பெரும் மகிழ்விற்குள்ளாகியிருக்கும் பேரினவாத சக்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையிலும், தமிழ் மக்களின் உணர்வுகளைச் சர்வதேசத்திற்கு முன் வெளிப்படுத்தும் முகமாகவும் இத் தேர்தலைத் தமிழ் மக்கள் கையாள வேண்டும். அதற்காக தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து மக்கள் வாக்களிப்பது அவர்களின் கடப்பாடாகிறது.</span>

கருத்துப் பகிர்வது ஈழநாதமும் தமிழ்நாதமும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
மட்டக்களப்பில் அவர்களும் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றுதானே பிரச்சாரம் செய்கிறார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
Mathivathanan Wrote:மட்டக்களப்பில் அவர்களும் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றுதானே பிரச்சாரம் செய்கிறார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


வேற வேட்பாளர்களை நிறுத்த சந்தர்ப்பம் கிடைக்காததால் அப்படி செய்கின்றார் என்று நினைக்கின்றேன். வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி முடிந்திருக்காவிடின் அவர் வேறு யாரையாவது நிறூத்தியிருப்பார் என நினைக்கின்றேன். இப்போதுள்ள சூழ்நிலையில் அவர் வீட்டை தான் ஆதரிக்கமுடியும் மற்ற கட்சி எதையாவது ஆதரித்தால் அது கருணா மேல் சந்தேகத்தையும் மக்கள் எதிர்ப்பையும் உண்டாக்கலாம். தானே தன் தலையில் மண்ணை அள்ளி போட மாட்டார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)