உலகின் ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்று அறிமுகப்படுத்தியவர்களே தங்களின் கொள்கைகள் தவறோ சரியோ என்பதை அலசி ஆராய்ந்து சிந்திக்கும் வகையில் மக்களுக்குச் செய்தி வழங்கியதாக வரலாறு இன்று வரை சொல்லவில்லை...அவர்கள் தங்களின் சிந்தனைகளுக்கு வடிகட்டல்கள் மூலமான செய்தி வடிவம் தந்து நியாயம் கற்பித்து மக்களிடம் திணிப்புச் செய்துள்ளனர்...!
ஆனால் ஈழத்தில் தமிழ் தேசியமும் தமிழ் தேசத்தின் தேவையும் யார்த்தத்தில் வாழ்ந்த வாழும் சூழல் நிகழ்வுகள் மூலம் தெளிவாக மக்களால் தலைவர்களால் உணரப்பட்டு அவற்றின் மூலமான மக்களின் விடிவுக்காக அவை பல்லாயிரம் இன்னுயிர்களை பல கோடி சொத்துக்களை இழந்து பல்வேறுபட்ட துன்பங்களைச் சுமந்து கொண்டு.... இன்றும் சிதைவுகள் இன்றி கனவுகளோடு கருக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சுயநலவாத சந்தர்ப்பவாத பேரினவாத ஏகாதபத்தியவாத சக்திகளுக்காக விலை போனவர்களினால் தர்மத்தின் வழி நிற்கும் மக்களின் அக் கரு சிலாகித்து சின்னாபின்னப்பட எவருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு....!
பல இலட்சம் மக்களின் ஒரு தெளிவான சிந்தனையோடு ஒன்றிப்போக முடியாதவர்களால் ஒரு வளமான கருத்தியல் செய்தியை தேர்ந்தெடுத்து எப்படி வழங்க முடியும்....???!
இங்கு நடுநிலைமை கருத்தியல் அலசல் என்ற போர்வையில் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் ஏன் விதைக்கப்படுகின்றன....??!
அதுவும் தெளிவாக அக்கருத்துக்கள் தமிழ் தேசியத்திற்கும் தேசத்திற்கும் எதிரானது என்பதை அறிந்திருந்தும்....அதை ஏன் செய்கிறார்கள்...அப்படி என்றால் இவர்கள் தமிழ் தேசியத்திற்கு தேசத்திற்கு எதிரானவர்களா....???!
அப்படி எதிரானவர்கள் என்றால் இவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது.....??!
தமிழ் தேசியத்தின் தேசத்தின் விரோத சக்திகளின் அருவருடிகளாக தமிழ் மக்களின் விதிவிலக்குகளாகத் தான் இருக்க முடியும்...!!!
இப்படியானவர்களின் சிந்தனைகளும் பார்வைகளும் எமக்குத் தேவையா.....???! அதனால் தமிழ் மக்களாகிய நாம் இத்தனை துன்பங்களுடனும் சுமக்கும் இனிய கனவு நனவாகும் நாளை விரைவு படுத்தத்தான் முடியுமா....???!
<span style='color:red'><b>எமக்குத் தேவை 500 பேரின் அற்ப சிந்தனைகள் அல்ல 5 இலட்சம் பேரின் இலட்சியத்தின் வாழ்வுக்கான வழியே.....!</b>
யார் எதைச் சொன்னாலும் செய்தாலும் எமது இலக்கு என்பது....எமக்கு இக்கருத்துக்களத்தில் உள்ள விதிகளுக்குள் நின்று தமிழ் மக்களாகிய நாம் சுமக்கும் கனவை நனவாக்கும் நாளை விரைவுபடுத்தும் வகையிலும்
மக்கள் தாம் இத்தனை இடர்களின் மத்தியிலும் சுமந்து கொண்டிருக்கும் இலட்சியத்தின் உறுதியையும் வலிமையையும் அதிகரிக்கச் செய்து மாபெரும் மக்கள் சக்தியின் மூலமாக அவ்விலட்சியத்தை விரைந்து எட்ட முனையும் அனைத்துத் தரப்புடனும் கருத்துக்களாலேனும் கைகோர்த்து நிற்பதே ஆகும்....!
எம்மைப் பொறுத்தவரை எமது கருத்துக்களுக்குள் சுயநலத்துக்கோ சுய விளம்பரத்துக்கோ இடமில்லை...தர்மத்தின் பாலான உயரிய இலட்சியத்தின் வழி நிற்போரை பின்பற்றி அவர் வழி செல்வதே எமது இலக்கு....! அதேவேளை அதர்மத்தின் பக்கம் நிற்போருக்கும் அவர்களின் நிலையின் தவறை உணர்த்த முயலுவோம்.....ஆனால் திணிக்க மாட்டோம்....! அவர்கள் உணர்வதும் உணராமல் விடுவதும் அவரவர் விருப்பம்....!
ஆனால் --Breaking News--- Breaking News part 2... இத்தலைப்புகளின் கீழான கருத்துக்கள் செய்திகள் யாவும் யாருக்கும் தனித்துச் சொந்தமானதல்ல....என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...அப்படி..Breaking news... இத்தலைப்பை ஒரு குறிப்பிட்ட தனி நபரின் முயற்சியாக தனித்துக் காட்ட விரும்பினால்...Breaking News பகுதியில் நமது முயற்சிகளால் கொண்டுவரப்பட்ட அனைத்துச் செய்திகளையும் கள நிர்வாகம் அகற்ற வேண்டும்...அதுதான் நீதியும் கூட...அப்போதான் குறிப்பிட்ட தனிநபரின் தனிச் செல்வாக்கை, முயற்சியை பறை சாற்ற உதவ முடியும்....! அதற்கு நாம் ஒரு போதும் தடையாக இருக்க மாட்டோம்....!
அது மட்டுமன்றி Breaking News பூட்டப்படாத நிலையிலும் Breaking News part 2 (Created by Kanthar) வந்து தமிழ் தேசியம் தமிழ் தேச விரோதக் கருத்துக்களை சாடைமாடையாக நிலை நிறுத்த முயலும் வரை மெளனமாக இருந்தவர்கள் Flash News வந்ததும் பொங்கி எழுந்ததன் மர்மம் என்ன...????!
Flash News களவிதிகளுக்குட்டப்பட்ட காரணங்களுடன் கள நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டால் அன்றி அது தன் வரையப்பட்ட இலக்கு நோக்கி தொடரும்....எமது கருத்தை, விருப்பச் செய்திகளை எமது வடிவத்தில் களவிதிக்குள் நின்று சொல்ல எமக்கு உரிமை உண்டு...அதை யாரின் கொக்கரிப்புகளும் எதுவும் செய்துவிட முடியாது...!</span>
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>