Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிந்தனை வட்டம் குறும்பட விழா
#1
<b>சிந்தனை வட்டம் குறும்பட விழா</b>

நியூஜெர்சியில் சிந்தனை வட்டம் சார்பில் குறும்பட விழா இனிதே நடந்து முடிந்தது. பதின்மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன, அவற்றில் பல விவரணப் படங்கள், சில கதையோடு கூடிய குறும்படங்கள் மற்றும் ஒருத்தி என்ற முழுநீளத் திரைப்படம் வரிசையாய் இடம் பெற்றது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் செம்மையாகச் செய்திருந்தனர். தமிழ்க் குறும்படங்கள் திரையிட வேண்டும் என்ற அவர்களது முயற்சி மற்றும் நோக்கம், வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். திரையிட்ட எந்தப் படத்திலும் வர்த்தகத் தன்மைக்காக விட்டுக் கொடுத்துப் போகும் தேவைகள் இல்லாமல், சொல்ல வந்ததை அழகாகவும், தெளிவாகவும் சொல்லின. நான் சில தனிப்பட்ட அலுவல்கள் காரணமாக சில படங்களைக் காண இயலவில்லை, எனவே அவை தவிர்த்து, நான் ரசித்தவைகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!

<b><span style='color:red'>மனிதநேயம் என்றோரு ஐந்து நிமிடக் குறும்படத்தில், ஒரு ஊனமுற்ற மாணவனுக்காகப் பரிந்து பேசி, வாத்தியாரிடம் 'சீக்கிரம் போக வேண்டும்' என்று அனுமதி கேட்கும் மாணவனைப் பற்றிய படம். அந்த ஊனமுற்ற மாணவனைத் தோளில் தூக்கிக் கொண்டு, கதவைத் தொடுவதில் ஜெயித்துக் காட்டுவதன் மூலம் மனித நேயத்தை உணர்த்துகிறான் சிறுவன். , ஒரு வர்த்தக ரீதியானப் படத்தில் இருக்கும் அம்சமான பாடல் மற்றும் பிரச்சார தொனியும் நெருடலாய் இருந்தது. நீளத்தைக் குறைத்திருக்கலாம்...இருப்பினும் நேர்த்தியாய் இருந்த படங்களில் இதுவும் ஒன்று!

[b]ஜல்லிக்கட்டு</b> என்ற விவரணப்படம், ஜல்லிக்கட்டு என்று மாட்டை அடக்குவது வீர விளையாட்டா என்ற ஒரு அற்புதமான கேள்வியை எழுப்பியது. ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற இரண்டு பிரிவினரையும் பேட்டிகள் கண்டு, முடிவைப் பார்வையாளர்களிடமே புத்திசாலித்தனமாக விட்டது. "ஒரு மாட்டை அம்பது பேர் சேர்ந்து அடக்கறது வீரம்னு சொல்லிக்கறது கேவலமா இல்லை? இது தமிழர்களின் வீர விளையாட்டுன்னு சொல்றதை விட, உயிரை விடுவதற்காகத் தானே முன் வந்து செய்து கொள்கிற ஏற்பாடு என்று தான் சொல்ல வேண்டும்" என்று ஒருவர் கூறினார். ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்களில் ஒருவர்," எங்க ஊரு சாமிக்கு ரத்தம் கொடுக்கணும். சும்மாப் போய்க் கேட்டா யாராவது கொடுப்பாங்களா? அதுனால தான் ஜல்லிக்கட்டு நடத்தி, அது மூலமாக் கிடைக்கற ரத்தத்தை சாமிக்குப் படைக்கிறோம்!" சர்வசாதாரணமாக ஒரு அம்சமான தோரணையோடு சொன்னார். ஜல்லிக்கட்டு மூலம் மனிதர்கள் கிழிபடுவதையும், கதறுவதையும் பார்க்கும் போது, ஜல்லிக்கட்டுத் தேவையில்லாத சமாச்சாரம் என்று தான் எனக்கும் தோன்றியது. பீரோ, சைக்கிள், தட்டு போன்ற பரிசுகளுக்காக உயிரோடு விளையாட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

<b>'The Untouchable Country'</b> என்ற குறும்படம், 'இதன் மூலம் யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல' என்ற Disclaimerஓடு போடப்பட்டது. தலித்துகளின் குரல் கேட்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பல விஷயங்கள் அலசப்பட்டன. மனிதர்களை சாதியின் மூலம் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பார்க்கும் போது, வெட்கம் பிடுங்கித் தின்கிறது. மனதைப் பிசைந்த காட்சிகள் பல வந்த போதும், அவைத் தொகுக்கப்பட்ட விதத்தில் நேர்த்தியும் நேர்மையும் இல்லை! பல இடங்களில் உயர்வகுப்பினர் என்று பம்மாத்துப் பண்ணி சாதியின் பெயர்களைத் தவிர்த்தவர்கள், (எப்போதும் போல) பிராமணர்களின் பெயரைச் சொல்வதிலும், அவர்களின் குறியீடுகளைக் காட்டுவதிலும் எந்த விதத் தயக்கமும் காட்டவில்லை! (தேவர்கள் என்ற பெயர் இரு முறை சொல்லப்பட்டது ஆச்சர்யமாகத் தான் இருந்தது). இது போக, சாதிக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க மதமாற்றம் தான் ஒரே வழி என்ற தொனியில் சில கருத்துக்களும் இடம் பெற்றது. தலித்துகள் என்று பெயரிட்டு, இறந்த பன்றிகளைத் தூக்கிப் போடவும், மலம் வாரவும் மனிதர்களை ஒதுக்கி வேற்றுமை பாராட்டும் எவரும் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக வேண்டுமானால் இருக்கட்டும், அவர்கள் மனிதர்களில்லை!

<b>'சென்னப் பட்டணம்'</b> என்ற குறும்படம் நகைச்சுவையாகவும், அதே சமயம்யதார்த்தமாகவும் இருந்தது. மூர்த்தி என்பவர் அசத்தலாய் நடித்திருந்தார். சென்னை நகரமானது சுலபமாய் ஏமாற்றும் நபர்களைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், சில நல்லவர்களையும் கொண்ட ஒரு நகரம் என்பதைப் படு நேர்த்தியாகச் சொல்லியிருந்தார். இந்தப் படத்தைத் தொகுத்தவர் பிரபலமான சுரேஷ் அர்ஸ். ஒரு சில இடங்களில் காட்சியின் நீளத்தைக் குறைப்பதற்காக 'FADE IN' உபயோகப்படுத்தி,சடாரென்று அடுத்தக் காட்சிக்கு விரைவாய்ப் படத்தை செலுத்தியிருக்கிறார். படம் சற்று கூட போரடிக்காமல், சுவையாய் இருந்தது. இயக்குனர் பி.ஜே. ஜெயபாஸ்கருக்கு வாழ்த்துக்கள்!

<b>நிழல் யுத்தம்</b> என்று அஜீவன் இயக்கத்தில் ஒரு படம் திரையிடப்பட்டது. அற்புதமான ஒளிப்பதிவு..பல காட்சிகளில் 'லைட்டிங்' பிரமாதமாய் இருந்தது. ஆனால் படத்தொகுப்பு சுமாராய்த் தான் இருந்தது. இலங்கைத் தமிழ் வசனங்கள் படம் முழுதும் நிரம்பியிருந்ததால்..ஒன்றுமே புரியவில்லை (?!) அதற்கான சப்டைட்டில்களும் சுவிஸ் மொழியில் போட்டதால், போச்ச்ச்ச்! எனினும், இவரின் முயற்சி பாராட்டப் பட வேண்டியது. வேகமானப் படத்தொகுப்பு மற்றும் கதையில் கவனம் இன்னும் செலுத்த வேண்டும். 'There are signs of great talent'!

<b>தேடல்</b> என்றொரு குறும்படம்..ஊர்வசி அர்ச்சனா நடித்தது என்றவுடன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், நாடக தொனியை ஏற்படுத்தியது. உதாரணத்திற்கு, 'அதோ அங்கே ரெண்டு பசங்க உட்கார்ந்திருக்காங்களே...போய் என்னன்னு கேட்போம் வாங்க!' என்பது போன்ற வசனங்கள் படங்களில் தவிர்க்கப்பட வேண்டியவை. ஆனால், படத்தின் கருவானது இயந்திரத்தனமான உலகில் குழந்தைகள் எங்ஙனம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதன் அலசல். அதனால், பலரின் இதயத்தைத் தொட்டது!

<b>ஒருத்தி </b>என்றொரு முழுநீளத் திரைப்படம் கடைசியாகத் திரையிடப்பட்டது. அன்றைய தினத்தில் தயாரிப்பு நேர்த்தி (Production Values) மற்றும் இயக்க உத்திகளில் அற்புதமாகவும், கி.ராஜநாராயணின் கதையைத் தழுவியும் எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம். இதன் இயக்குனர் அம்ஷன் குமாருக்கு மனமார்ந்தப் பாராட்டுக்கள். இதைத் தயாரித்தது திண்ணை ஆசிரியர் கோ.ராஜாராம் என்பதும், இணைத்தயாரிப்பு செய்தது காஞ்சனா தாமோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு தாழ்த்தப்பட்ட இளம் பெண், தனது புத்தி சாதுர்யத்தால் கிராமத்தைக் காப்பாற்றிய போதும், உயர்சாதிப் பையனோடு அவளுக்கேற்பட்டக் காதலைப் பெரியவர்கள் மறுக்கின்றனர். 'வேண்டுமென்றால் வேறு ஊரில் போய் கல்யாணம் செய்து கொள்' என்று பெருந்தன்மையாய் (?!) அனுமதியும் வழங்குகின்றனர். அவள் அதனைப் புறக்கணித்து, தன் மக்களுக்காகக் காதலைத் துறந்து ஊரோடு வாழ்வதில் மகிழ்ச்சி அடைகிறாள்.

படம் 1800ல் நடப்பது போல் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒரு காட்சிக் கூட தற்காலத்தைக் காட்டும் விதமாய் இல்லாமல், நன்றாக செய்திருந்தனர். செவனி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தவர் நல்ல தேர்வு. படத்தில் பாலாசிங் போன்ற தெரிந்த முகங்களும் இருந்தது (நன்றாகச் செய்திருந்தார்) நல்ல பலம்! எல். வைத்தியநாதனின் பின்னணி இசை, காதல் காட்சிகளின் போது ரீங்காரமிட்டது. அந்தக் காலத்தில், இரு தார மணத்தை சர்வசாதாரணமாய்ப் பெண்கள் எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதை செவனிக் கதாபாத்திரம் மூலம் இயக்குனர் சொல்லும் போது, வருத்தமாகத் தான் இருந்தது. ஆங்கிலத் துரை சம்பந்தப்பட்டக் காட்சிகளில் எல்லாம், கொஞ்சம் பிசகியிருந்தாலும், மக்கள் பொசுக்கென சிரித்திருப்பார்கள். ஆனால், இயக்குனர் புத்திசாதுர்யமாக அவற்றைக் கையாண்டிருக்கிறார்.

செவனி, ஆடு மேய்க்கும் கம்பின் மூலம் நிலப்பரப்பை துரைக்கு விளக்கும் போது, கை தட்ட வேண்டும் போல் இருந்தது. (நல்ல உத்தி). படத்தில் மிக மிக யதார்த்தமான காட்சிகள், மெல்லிய நகைச்சுவை, அற்புதமான களம் என்று சகலமும் சரியாய் இருந்ததோடு, கல்வியறிவு தான் ஒடுக்கப்பட்டவர்களை மீட்க முடியும் என்ற நல்லக் கருத்தோடு (பிரச்சார நெடி இல்லாமல்) குறிப்பால் உணர்த்திய வண்ணம், படத்தை தூக்கி நிறுத்தியது.

இந்தப் படமானது அன்பே சிவத்தோடு போட்டியிட்டு இந்தியன் பனோரமாவில் விருது பெற்றது (?!) என்று அறிவிக்கும் போது சொன்னதாய் ஞாபகம், அப்படி நடந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இயக்கிய அம்ஷன் குமாருக்கும், தயாரித்த ராஜாராமுக்கும், பங்குபெற்ற அத்தனைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்தப் பாராட்டுக்கள். நல்ல படம் வேண்டும் என்று நினைப்பவர்கள், இது போன்ற படங்களைக் கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

படங்கள் முடிந்தவுடன் கலந்துரையாடல் நடந்தது. அதில் படத்தைப் பற்றி அலசியதை விட, கருத்துக்களைப் பற்றியே..அதுவும் தலித், சாதிக் கொடுமைகளைக் கண்டிக்கும் விதமாகவேப் பல நேரங்களில் அமைந்ததைத் தவிர்த்திருக்கலாம். இருப்பினும், சிலர் படங்களை அக்கு வேறு ஆணி வேறாக விமர்சித்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கினார்கள். இது போன்ற விழாக்கள் மிகுந்த நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. வந்திருந்த கூட்டத்தில் முக்கால்வாசி பேர், கடைசி வரை ஆர்வத்தோடு கலந்து கொண்டதே, விழா அமைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மதிய உணவு, மாலை தரப்பட்ட அதிரசம் மற்றும் முறுக்கு..இவை கண்ணும் செவியும் ஓய்வெடுத்த நேரத்தில், வயிற்றுக்கு ஈயப்பட்டது. நாக்கும் நன்றி சொல்லும் விதமாய், அவை அமைந்தது சொல்லப்பட வேண்டிய விஷயம். ஒரு நல்ல நாளை ஏற்படுத்திக் கொடுத்த சிந்தனை வட்டத்திற்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!


- அருண் வைத்யநாதன்

பின்குறிப்பு:- பாஸ்டனிலிருந்து பாலாஜி, ஜெர்சி சிட்டியிலிருந்து சுதர்ஷன் கிருஷ்ணமாச்சாரி, வாஷிங்க்டனிலிருந்து ஸ்ரீகாந்த் (இசை அமைப்பாளர்), கனெக்டிக்கட்டிலிருந்து ஒரு நண்பர் என்று பல இடங்களிலிருந்து வலைப்பதிவாளர்கள், மரத்தடிக் குழும நண்பர்கள் வந்து விழாவை சிறப்பித்தார்கள். இவர்கள் அனைவரையும் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி! நண்பர். சுந்தரவடிவேல் வந்தாலும் வருவேன் என்று சொல்லியிருந்தார், வரமுடியவில்லைப் போலிருக்கிறது! நிகழ்ச்சியில் எடுத்தப் புகைப்படங்களை நண்பர் பி.கே.சிவக்குமார் வலையேற்றியிருக்கிறார். எனது படமான BR(A)ILLIANT திரையிடப்பட்டது. அது குறித்து, நண்பர் சுதர்ஷன் வலைப்பதிந்திருக்கிறார்.



# posted by Arun Vaidyanathan @ 10:49 AM</span>
Reply
#2
<span style='font-size:22pt;line-height:100%'> <b>சனிக்கிழமை... சிந்தனை வட்டம்... சீரிய படங்கள் </b>

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நாலு மணி நேரம் ஓட்டிச் சென்று பார்த்த நிகழ்ச்சி. நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததை தமிழில் அருணும், ஆங்கிலத்தில் சுதரும் எழுதியிருக்கிறார்கள். மிகமிஞ்சிய எதிர்ப்பார்ப்பில் வந்திருந்த என் போன்றோரையும் திருப்தி செய்த நிகழ்வு.

பதினைந்து ரூபாய் நுழைவு கட்டணம். ஒரு நாள் முழுக்க பலதரப்பட்ட விஷயங்களையும் சொல்லும் படங்கள். ஜாங்கிரி, அவியல், சென்னா என்று பஃபே போன்ற வீட்டுச் சாப்பாடு. அனைவருக்கும் பெயர்களைத் தாங்கிய அட்டைகள், உணவை ரெடியாகத் தட்டிலேயே போட்டு வைத்து பெரிய க்யூவை தவித்த லாவகம், தேவையான நேரத்தில் போதுமான இடைவேளைகள், கனகச்சிதமான பேச்சு, spoilers இல்லாத பட அறிமுகங்கள், BR(A)ILLIANT அருணின் தன்னடக்கத்துடன் கூடிய முன்னுரை, என்று பார்த்து பார்த்து ஏற்பாடு செய்திருந்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

(Disclaimer :-) இனி வரும் எண்ணங்கள் அனைத்தும் ஒரு வெகுஜன திரைப்பட ரசிகனாகிய எனக்குத் தோன்றியவை.

<b>மனித நேயம்:</b> ரொம்ப 'சத்தமாக' மனித நேயத்தை சொல்லியிருந்தார். கதைகளில் கூட சொல்லாதது முக்கியம் என்னும் கருத்து நிலவுகிறது. இங்கு எல்லாவற்றையும் உடைத்து காட்டியிருந்ததால், கொஞ்சம் அஜீரணம்.

<b>The Untouchable Country:</b> Crisp எடிட்டிங் இல்லாமல் தத்தளித்தது. நிறைய கருத்துக்களை சொல்லும் ஆசையில், ஒரு செய்தித்தாள் படிக்கும் உணர்வைக் கொடுத்தது. முதல் பக்கத்தில் பத்து தலைப்புகள் இருக்கும். ஆர்வமாக ஒன்றை ஆழ்ந்து படிக்கும்போது, எட்டாம் பக்கம், ஒன்பதாவது பத்தி பார்க்க என்பார்கள். அங்கே செல்லாமல், அடுத்த தலைப்புக்குத் தாவி விடுவோம். பாதிக்கப்பட்டவர்களின் பேச்சு முகத்தில் அறைவதால், மனதில் பதிகிறது.

<b>ஜல்லிக்கட்டு:</b> இந்த மாதிரி விவரணப் படங்கள் சன் டிவி 'பொங்கல் ஸ்பெஷல்' நிகழ்ச்சிகளில் இடம்பெற வேண்டும். வெகுஜன மக்களை ஈர்த்து, அவர்களின் சிந்தனைகளை மாற்றக் கூடிய படம்.

<b>வாஸ்து மரபு: </b>ரொம்ப சென்சிடிவான சப்ஜெக்ட். கடவுள் சிலைகளை கைகூப்பித் தொழ மட்டுமே மனம் செல்லும். அவை எவ்வாறு உயிர் பெறுகின்றன, செய்பவரின் சிரத்தை போன்றவற்றை, வெண்கல சிலைகள் முதல் கற்சிலைகள் வரை அனைத்தின் செய்முறைகளின் பிண்ணனியில் கொஞ்சம் ஆற அமர சொன்னார்கள். இளையராஜாவின் இசையில் திடீரென்று 'குனித்த புருவமும்' என்று தேவாரம் முதல் பிரபந்தம் வரை திரைப்படலில் ஊடாடும். இங்கு சம்ஸ்கிருத ஸ்லோகம் எல்லாம் நடுவே வந்தது, தேவையில்லாமல் அதை நினைவுக்குக் கொண்டு வந்தது. இன்னொரு முறை பார்த்தால் படத்தின் மற்ற கூறுகள் புலப்படலாம். முதல் பார்வையில் மயங்கடிக்க வைக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் நடையில் சுஜாதாவின் 'ஏன்... எதற்கு... எப்படி'யில் வரும் அளவு விஷயங்களை மண்டையில் ஏற்றிக் கொள்ளலாம்.

<b>லன்ச்:</b> மணி சுவாமிநாதன், 'பொன்னியின் செல்வன்' குழு நண்பர்கள் கமலக்கண்ணன், சத்யாவை பிகேஎஸ் அறிமுகம் செய்தார். போஸ்டர்களைப் படித்து பார்ப்பதற்குள் மதிய இடைவேளை முடிந்திருந்தது.

<b>சைக்கிள்: </b>இலங்கைத் தமிழ் என்றாலும் தெளிவான உச்சரிப்பினால் சென்ன பட்டணவாசிகளுக்கும் புரியும் வசனங்கள். நல்ல குறும்படம் இப்படித்தான் இருக்கும்.

<b>ஒரு நாள்: </b>பிண்ணனி இசை வசனத்தை மூழ்கடித்திருந்தது. அம்மாவாக நடித்தவர், தான் நடிப்புக்குப் புதுசு என்று காட்டியிருந்தார். இது போன்று வெற்றியடைந்த சில கம்ர்ஷியல் படங்களை பார்த்த நினைவும் வந்து போனது. லஞ்சம் வாங்காத மேஜர் சுந்தர்ராஜனுக்கு அலுவலகத்தின் கடைசி தினம். நாள் முழுக்க நடக்கும் நிகழ்வுகள்; லஞ்சம் வாங்குவதற்குத் தள்ளப்படும் நிலை. கடைசியில் தன் இருக்கையிலையே இறந்து போய்விடுவார் என்று நினைக்கிறேன்.

<b>அப்பா:</b> சீரியல் தலைப்பு என்று மட்டும் சந்தேகிக்காதீர்கள். தொலைக்காட்சி தொடர் போன்றே எடுத்தும் இருந்தார்கள். எவ்வளவு தூரம் எதிர்ப்பார்க்கக் கூடிய காட்சியமைப்புகள் நிறைந்திருந்தது என்பதை பக்கத்து இருக்கையில் இருந்த கணேஷ் சந்திரா, இவ்வொரு வசனத்தையும் முன்கூட்டியே சொல்லி சினிமாத்தனத்தை காட்டினார்.

<b>தப்பு கட்டை: </b>நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறே சொன்ன படம். முக்கிய வசனங்களை இன்னும் கொஞ்சம் தெளிவாக பதிவாக்கியிருக்கலாம். படிப்பது வேறு... பார்ப்பது வேறு... இங்கு சில இடங்களில் நிகழ்பவற்றை பார்ப்பதால் வரும் தாக்கமே தனி.

<b>Shadow fight:</b> நிறைய வசனம் புரிய வில்லை. புரிந்த வசனங்கள் படு ஜோர். காட்சியமைப்பு, எடிட்டிங், ஓளிப்பதிவு எல்லாமே ப்ரொபெஷனல் ரகம். இயக்குநர் அஜீவன் குறித்து அதிகம் அறியேன். ஆனால், நிச்சயம் நிறையப் பேசப்படுவார். கணவன் - மனைவி உறவில் ஓடும் மெல்லிய இழைகளை ஆர்பாட்டமில்லாமல் மனதில் தைக்கிறார்.

<b>சென்னப் பட்டணம்:</b> சென்னையில் ஒரு நாளாவது கால் பதித்த எவரும் ரசிப்பார்கள். எதார்த்தம்.

<b>தேடல்:</b> தூர்தர்ஷன் டிராமா வாசம். இருந்தாலும் எடித்துக் கொண்ட டாபிக் மனதிற்கு மிகவும் அருகில் இருப்பதால், தாக்கங்களை உண்டு செய்தது. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லலாமா, வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும் நம் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

<b>BR(A)ILLIANT: </b>BRILLIANT & enjoyable <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தேநீர் இடைவேளை: அதிரசம், முறுக்கு, இன்னும் கொஞ்சம் திண்ணை, தமிழோவியம் ஆசிரியர்கள், மரத்தடி நண்பர்கள், புது அறிமுகங்களுடன் அரட்டை.

<b>ஒருத்தி:</b> மாலை வரை காத்திருந்ததற்குக் கொடுக்கப்பட்ட பரிசு. ஆர்ட் ·பிலிம் என்று பயமுறுத்தாமல், ஆடல்/பாடல் எல்லாம் இல்லாமலும் வெகுஜன ரசிகனைக் கட்டிப் போடலாம் என்பதை நிரூபிக்கும் திரைப்படம்.

சில ஒட்டக்கூத்தர் பார்வைகள்:
பவர்பாயிண்ட் ஸ்லைடுகள் ஏன் தமிழில் எழுதப்படவில்லை?
ஒருத்தி 'செவனி'க்குக் கூட மேல்ஜாதி கணவன் என்பது மதிக்கத்தக்கதாக பட்டது. அது வேண்டுமென்றே irnoy-ஐ காண்பிப்பதற்காக பயன்படுத்தபட்டதா?
லேட்டாக வந்தவர்களுக்காக மறு-ஒளிபரப்பான 'மனித நேய'த்தை நிகழ்ச்சியின் இறுதியில் காண்பித்திருக்கலாம்.
பல படங்களில் சப்-டைட்டில் பயமுறுத்தியது. கன்னா-பின்னா பலுக்கப் பிழைகள், கருத்துப் பிழைகள். 'ஒருத்தி'யுடன் லயித்துவிட்டதால், அதில் மட்டும் என்னால் ஏனோ 'துணையெழுத்து' வந்ததா.... எப்படி இருந்தது என்பதை கவனிக்க முடியவில்லை. பிறிதொரு முறை வாய்ப்பு கிடைத்தால், அவற்றை மட்டும் மனதில் நிறுத்தி விமர்சிக்கிறேன். பிற மொழி மக்களை சென்றடைய பெரிது உதவுவது சப்-டைட்டில்களே. அவை ஒரிஜினல் வசனங்களைப் போல் (if not better )சிறப்பாக இருந்தால் குறும்படங்களை நிலைநாட்டும்.</span>

http://etamil.blogspot.com/2004/06/blog-po...3808935000.html
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)