04-26-2006, 12:30 AM
[size=18]திருகோணமலையில் தமிழர்களைப் பாதுகாக்க தவறியது சிறிலங்கா அரசு: மனித உரிமை அமைப்பு சாடல்!
திருகோணமலையில் தமிழர்களைப் பாதுகாக்க சிறிலங்கா அரசு தவறிவிட்டது என்று Human Rights Watch எனும் மனித உரிமை அமைப்பு கடுமையாகச் சாடியுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் Human Rights Watch அமைப்பின் ஆசியப் பிராந்திய இயக்குநர் பிராட் அடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருகோணமலையில் குண்டு வெடிக்க வைக்கப்பட்ட பிறகு ஆயுதக் குழுவினரால் தமிழ் மக்களது வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் தாக்கப்பட்டபோது சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள
சிறிலங்கா அரச படையினர் தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர்.
விடுதலைப் புலிகளால் குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிற ஏப்ரல் 12 ஆம் நாளன்று தமிழ் மக்கள் மீதான தாக்குதலின் போது சிறிலங்கா காவல்துறையினரும் படைத்தரப்பினரும் அங்கேயே நின்று கொண்டிருந்துள்ளனர்.
இக்குண்டுவெடிப்பையடுத்து 15 நிமிடத்துக்குள்ளாகவே திருகோணமலையில் 100 முதல் 150 சிங்கள ஆயுததாரிகள் கத்திகளுடனும் தடிகளுடனும் வந்து தமிழர் வர்த்தக நிலையங்களையும் வீடுகளையும் தாக்கியுள்ளனர்.
ஏப்ரல் 12 முதல் 16 ஆம் நாள் வரையில் 7 பெண்கள் உட்பட 20 தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சிறிலங்கா மனித உரிமைகள் அமைப்பினது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் தமிழ் மக்களைப் பாதுகாக்க சிறிலங்கா அரசாங்கம் தவைறிவ்ட்டது.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என அனைத்து இலங்கையர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
திருகோணமலை வன்முறை மற்றும் சிறிலங்கா அரசபடைகளினது பொறுப்புக்கள் தொடர்பாக நேர்மையான, சுயாதீனமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கான ஆணைக் குழுவை சிறிலங்கா அரசாங்கம் அமைக்க வேண்டும். உரிய விசாரணைகள் மற்றும் நட்ட ஈட்டை வழங்குவதற்கான பரிந்துரைகளை அளிக்கும் அதிகாரமும் அக்குழுவுக்கு அளிக்கப்பட வேண்டும்.
திருமலைத் தாக்குதலில் 100 வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டு மொத்தம் 3 ஆயிரம் பேர் வீடிழந்துள்ளனர். திருகோணமலை தொழில் வர்த்தக சம்மேளனத்தினரது தகவலின்படி 32 வர்த்தக நிறுவனங்கள், கடைகள் நிர்மூலமாக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன.
தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் எரிக்கப்பட்டபோதும் சிறிலங்கா காவல்துறையினரும் படைத்தரப்பினரும் சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர். 45 முதல் 90 நிமிடம் வரையில் அவர்கள் காத்திருந்துவிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஹட்டன் நஷனல் வங்கியின் எச்சரிக்கை மணி 2 மணிநேரம் ஒலித்த பின்னரும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கை வங்கியின் பாதுகாப்புக்காக நின்றிருந்த ஊர்க்காவல் படையினர் வன்முறையாளர்களைத் தடுக்கவில்லை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினது செயற்பாடானது முழுவதும் போதுமானது அல்ல. சிறிலங்கா படையினரது உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் எதுவித காத்திரமான கண்டன அறிக்கைகளையோ மாவட்டத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நேரடி நடவடிக்கையையோ மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளவில்லை.
இச்சம்பவத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தின் அவசர நிவாரண உதவிகள் எதுவும் 4 நாட்களாக கிடைக்கப்பெறாமல் இருந்துள்ளது.
தொடரும் யுத்த நிறுத்த மீறல்கள், அதிகரிக்கும் இனங்களுக்கிடையே பதற்றம் மற்றும் மோதல் ஆகியவற்றை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில் துரிதமான மற்றும் காத்திரமான அரசாங்கத்தின் செயற்பாடு இருக்க வேண்டும்.
திருகோணமலையில் காடையர்களால் தமிழர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னரும் மகிந்த ராஜபக்ச குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.
தமிழர்களும் இதர இனத்தவர்களும் சட்டத்தின் கீழ் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இச்சம்பவத்தின் போதும் சம்பவத்துக்கு முன்னரும் அதன் பின்னரும் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் அரச படையினரது நடவடிக்கைகள் தொடர்பாக சுயாதீனமான, பாரபட்சமற்ற விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர் ஒருவரும் இடம்பெறுவதன் மூலம் அதன் பாரபட்சமற்ற தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
திருகோணமலை வன்முறைக்குப் பின்னராவது சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணையத்தை மீள உருவாக்கி கண்காணிப்புக்கான தலைவரை நியமிக்க வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகளை அதிகரிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரச தரப்பினரை எமது அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய பொதுமக்கள் அமைப்புகளுக்கும் அரசாஙக்த்துக்கும் இடையே தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொதுமக்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளை Human Rights Watch அமைப்பு கேட்டுக்கொள்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-புதினம்

! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.