Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஹாச்ச்ச்...சில் ஆண்கள் தான் முதலிடம்* பெண்களிடம் எதிர்ப்புச்
#1
அடிக்கடி மூக்கை உறிஞ்சுவது, ஹாச்... என்று தும்முவது, தலையை பிடித்துக் கொள்வது எல்லாம் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. காரணம், ஏதோ வேலை பளு, குடும்ப பிரச்னை என்று எண்ணி, ஆண்களே, நீங்கள் புளகாங்கிதம் அடைய வேண்டாம். உண்மையில் ஆண்களுக்கு எதிர்ப்புச்சக்தி வெகுவாக குறைவாம்.

அதுபற்றி லண்டன் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தாலும் குறிப்பாக எதிர்ப்பு சக்தி விஷயத்தில் புது தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிறிய வயதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகத் தான் எதிர்ப்புச்சக்தி உள்ளது. ஆனால், வயது அதிகமாக அதிகமாக, ஆண்களிடம் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களை விட அவர்களுக்கு குறைவாகவே உள்ளது.

அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாக ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் போன்ற பாக்டீரியா, வைரஸ் சார்ந்த பாதிப்பு வருகிறது. பெண்களுக்கு வருவது அவர்களை விட குறைவு தான். இதற்கு காரணம், பாக்டீரியா, வைரசை எதிர்த்து போராடும் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதே.

நம் உடலில் எதிர்ப்பு சக்தி முக்கியம். எந்த நோய் வந்தாலும், உடல் பலவீனமானாலும், பொதுவாக சிலரை பார்த்து, "என்ன உடலில் எதிர்ப்புச்சக்தியே இல்லையே' என்பது தானே. டாக்டரை பார்த்தால் கூட, "உங்கள் உடலில் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளது. முதலில் நல்ல சத்துள்ள உணவு, உடற்பயிற்சி எல்லாம் செய்யுங்கள். மருந்தும் எழுதித் தருகிறேன்' என்பது தான்.

நிபுணர்கள் ஆய்வு குறித்த ஹெல்த் ஜர்னலில் கூறிய தகவல்கள்: நம் உடலில் மொத்தம் 1200 ஜீன்கள் என்ற மரபுக்கூறுகள் உள்ளன. மரபணுக் கூறுகளான இவை தான், நம் உடலில் எதிர்ப்புச்சக்தியை பராமரிக்கிறது. எதையும் தாங்குவதற்கு நம் உடலில் போதுமான அளவில் சுரப்பிகள், ரசாயன மாற்றங்கள், எனர்ஜிகள் எல்லாம் உள்ளன. அவற்றை தகுந்த அளவில் குறையாமல் பாதுகாப்பது இந்த எதிர்ப்புச்சக்திகள் தான்.

இந்த எதிர்ப்புச்சக்தியை சீராக பராமரித்து வரும் இந்த 1200 மரபணுக்கூறுகளில் ஏதாவது பாதிப்பு வந்தால் தான் ஜலதோஷம், இருமல், ப்ளூ காய்ச்சல் என்று வருகின்றன. பாக்டீரியா, வைரஸ் ஆகியவை ஒருவரின் உடலில் தொற்றுவதற்கு காரணம் அவர் உடல் பலவீனம் தான். பலவீனம் ஆக காரணம் எதிர்ப்புச்சக்தி இல்லாதது தான்.

முப்பது வயதை தாண்டியதும் பெண் களை விட, ஆண்களுக்கு, அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் என்று பல காரணங்களால் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களும் தான் இப்போது ஆண்களை போல செயல்படுகின்றனர் என்றாலும், எதிர்ப்புச்சக்தியை அவர்கள் இழக்க விடுவதில்லை. அதற்கு காரணம், அவர்களின் பழக்க வழக்கம் மாறாமை தான். பெண்களுக்கு பருவம் மாறும் போது வேண்டுமானால், எதிர்ப்புச்சக்தி சற்று குறைய வாய்ப்புண்டு. அப்போது அவர்கள் தங்கள் எதிர்ப்புச்சக்தியை இழக்காமல் இருக்க டாக்டர்கள், மருந்து மாத்திரைகளால் சீராக வைக்கின்றனர்.

எதிர்ப்புச்சக்திகளில் இரண்டு வகை உள்ளன. தொற்று கிருமிகளை அண்ட விடாமல், உடலில் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் "ஆண்டிபாடிஸ்' உற்பத்தியை தொடர்ந்து செய்யும் ஒரு வகை எதிர்ப்புச்சக்தி. அது பெண்களிடம் அதிகம் உள்ளது. அது ஆண்களுக்கு குறைவு தான். அதனால் தான் பாக்டீரியா, வைரஸ், தொற்றுகிருமிகள் தொற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இவ்வாறு நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ThanksBig Grininamalar...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)