07-13-2004, 04:35 PM
<b>'தொடரும் தவிப்பு'</b>
இது பாதிக்கப்பட்ட பெண்களின் வலி..
<b>'தொடரும் தவிப்பு'</b> என்றொரு நாவல் மூலம் தமிழ் எழுத்துலகில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் பூங்குழலி. பிரபல அரசியல்வாதி பழ. நெடுமாறனின் மகள்.
[b]<span style='color:red'>ராஜீவ்காந்தி கொலைவழக்கில்
உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியபடி
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட
நான்கு பேரில் ஒருவரான
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின்
உணர்வுகள்தான்.........
நாவலின் களம்!
அப்பாவைப் போலவே ஒடிசலான தேகம்.. சாந்தம் தவழும் கண்கள்.. எப்போதும் புன்னகை வழியும் இதழ்கள்.. வீணையிலிருந்து தெறித்து வந்தது போன்ற மிக மெல்லிய குரல்.. எம்.சி.ஏ. பட்டதாரி. எம்.ஃபில் படிக்கிறார். படிப்பின் மேன்மை தெரிகிறது பேச்சில். இதுதான் பூங்குழலி!
ஒரு மாலைநேரத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்..
"அதென்ன பூங்குழலி.. புனைபெயரா?"
"அப்பா வெச்ச பெயர். ஆனா, பள்ளி ஆவணங்கள்லயும் தோழிகளுக்கும் நான் உமாதான். இப்போ இந்தப் புத்தகம் மூலமா, மீண்டும் 'பூங்குழலி' பிறந்திருக்கா.." சிநேகமாக சிரிக்கிறார்.
தந்தை தீவிர அரசியலில் இருந்தாலும், பூங்குழலியை அதிகம் ஈர்த்தது அவரது தீவிர எழுத்துதானாம். அந்த உத்வேகத்தோடு இவர் எழுதிய பல கட்டுரைகளும், கவிதைகளும் சிறுபத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
"பத்திரிகையாளராகறதுதான் என்னோட ஆசை. அது நிறைவேறல. ஆனாலும், எழுத்துல ஆர்வம் இருந்ததால எழுத்தாளராகணும்னு முடிவு செய்தேன். அப்பா எனக்கு பெரிய பலம். என்னோட பார்வை, சிந்தனை, செயல்பாடு எல்லாத்துலயும் அப்பாவின் பாதிப்பு இருக்கும். எழுதியதை வெளியிட நான் தயங்கினப்போ, 'உன்கிட்ட ஒரு திறமை இருந்தா, அது சமுதாயத்துக்கு பயன்படணும். அதுதான் நேர்மை. இல்லேன்னா அது துரோகம்'னு சொல்லி, நாலு சுவர்களுக்குள்ள இருந்த என் எழுத்துக்களை வெளிக்கொண்டு வந்தவர் அப்பாதான்.." 'தொடரும் தவிப்பு' நூலிலிருந்து..
"எட்டு ஆண்டுகளாக சிறைச் சுவர்கள் மட்டுமே என்பது வெறும் சொல்லுக்காகச் சொன்னதல்ல. மிகையுமல்ல. ஏனெனில் பூந்தமல்லியில் நீதிமன்றமும் சிறையும் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தபடியால் நீதிமன்ற விசாரணை நாட்களில்கூட வெளி உலகைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.
சிறை, நீதிமன்றம், வழக்கு சார்ந்த மனிதர்கள் மற்றும் காண வரும் உறவினர்கள், நண்பர்கள் தவிர வேறு மனித முகங்களே காணாது ஓடிவிட்டது 8 ஆண்டுகள். பகலிலாவது பரவாயில்லை. மாலை 6 மணிக்கு மேல்தான் இன்னும் கொடுமை. தனி அறையில் பூட்டிவிட்ட பிறகு தனிமை, தனிமை, தனிமை.. மட்டுமே துணை.
இப்படி ஒரு வாழ்வை மகன் வாழும்போது, எத்தகு வாழ்க்கையுமே கசந்துவிடுமே ஒரு தாய்க்கு. அந்த நிலையில்தான் இருந்தார் அற்புதம். அறிவின் நெற்றியில் கம்பி பதிந்த தடத்தை காணும்போதெல்லாம் தன் மகன் சிறைக் கம்பிகளூடே வெளியே பார்த்துக்கொண்டிருப்பான் என்பது புரிந்தது.
ஒருவேளை, விசாரணையின் முடிவில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமாகி விடுதலையானால் கூட, இழந்துவிட்ட இந்த எட்டு வருட வாழ்க்கையை யார் மீட்டுத் தருவார்கள்? இந்த அரசாங்கமா, காவல்துறையா, சிறை அதிகாரிகளா அல்லது இத்தனைக்கும் காரணமான சி.பி.ஐ.யா?
இந்தக் கேள்வி அற்புதத்தின் மனதில் எழும்பாத நாளே இல்லை எனலாம். ஒவ்வொரு நாள் கழியும்போதும் 'இதோ என் மகன் வாழ்வில் பாதிக்கப்பட்ட மற்றொரு நாள் முடிந்தது' என்ற எண்ணம்தான் ஏற்படும். ஒவ்வொரு மகிழ்ச்சியான நொடிகளின்போதும், 'என் மகன் இதை அனுபவிக்காது வாடுகிறானே' என்ற வருத்தமே மேலோங்கும்.."
"இந்த நாவலை சமீபத்துல தான் எழுதினீங்களா?"
"இல்ல.. 2001ம் வருஷம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர்ல முடிச்சேன். நாவலோட கரு ரொம்ப சென்சிடிவானதுங்கிறதால கொஞ்சம் பொறுத்து வெளியிடலாம்னு இருந்தோம். அதுக்குள்ளே அப்பாவை கைது பண்ணி உள்ளே வச்சுட்டாங்க. அப்பா வெளிவந்ததும் நூலும் வெளிவந்திருக்கு.." என்று நகைச்சுவையோடு பேசிக்கொண்டிருந்தவர், நூலின் மையக்கருவைப் பற்றிக் கேட்டதும் முகம் மாறினார். எங்கிருந்தோ ஒரு தீவிரமும், சோகமும் வந்து அப்பிக்கொள்ள வேகமாக, ஆனால் அழுத்தமாகக் கொட்டத் தொடங்கினார்.
"அற்புதம்மாள்தான் என் புத்தகத்தோட கரு, உரு, கதாநாயகி எல்லாமே! ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 26 பேர்ல ஒருத்தரான அறிவு என்கிற பேரறிவாளனின் தாய். தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி, தனிமைச் சிறையில் வாடும் அறிவு, சிறை செல்லும்போது 19 வயசு இளைஞன்.
அவர் உள்பட 26 பேருக்கு தூக்குங்கிற விஷயம் என்னை ரொம்பவே உலுக்கிடுச்சு. அப்பாதான் அந்த கேஸை நடத்தியதால, எல்லா சம்பவங்களையும் அருகே இருந்து பார்க்க வாய்ப்பு கிடைச்சுது.. அப்போதான், தண்டனை விதிக்கப்பட்டவங்களைவிட, அவங்களைச் சுத்தி இருக்கறவங்க எவ்வளவு மோசமா பாதிக்கப்படறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
அவ்வளவு பேரோட ஒட்டுமொத்த வேதனையை அற்புதம்மாள்கிட்ட பார்த்தேன். பன்னிரண்டு வருஷமா மகனை மீட்டெடுக்கணும்னு தனியரு மனுஷியா போராடுற அற்புதத் தாய் அவங்க..." சிறிய இடைவெளி விட்டார் பூங்குழலி. அவரே தொடரட்டும் எனக் காத்திருந்தோம்.
"அப்பா சொல்ற மாதிரி, நமக்குத் தெரிஞ்ச விஷயங்களை எல்லோருக்கும் தெரியப்படுத்தறது என் கடமைனு நினைச்சேன். அப்பாகிட்டே கேட்டேன்.. 'நல்ல விஷயம்மா. செய்'னு தட்டிக்கொடுத்தார். அற்புதம்மாளை சந்திச்சு, பன்னிரண்டு வருஷக் கதையைச் சொல்லணும்னு கேட்டப்ப, தயக்கத்தோட சம்மதிச்சாங்க. தன் பிள்ளைக்கு எதுவும் ஆயிடக்கூடாதேனு பயந்தாங்க. அப்பாவின் மேற்பார்வையில்தான் நூல் வெளிவரும் என்பதால் சம்மதிச்சாங்க.
மகனைச் சிறையில் பார்க்கப் போனப்போ அனுபவித்த மனப் போராட்டங்களை விவரிக்கும்போது அந்தத் தாய் அப்படியே இறந்த காலத்தில் உறைஞ்சுடுவாங்க. சில சமயம் ஒரு வெற்றுப் பார்வை மட்டும்.. பல சமயம் கதறல்.. வேதனையை மறைத்தபடி பிசிறடிக்காத குரலில் சொல்வாங்க. ஒரு தாயை இப்படி கஷ்டப்படுத்தி ஒரு புத்தகம் எழுதணுமானுகூட ஒவ்வொரு சமயம் தோணும். யப்பா.." அந்த பயங்கரத்தை நினைத்து தோள் குலுக்கி சிலிர்க்கிறார் பூங்குழலி.
"உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் விடுதலையாகி வெளியே வந்தவர்களில், பத்மா, செல்வி, சாந்தி மூணு பேரையும் சந்திச்சேன். அவங்கள்ல ரெண்டு பேர் கைக்குழந்தைகளுடன் உள்ளே போனவங்க. அவங்களைப் பார்த்தபின், பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்தப் பெண்களின் வலியையும் பதிவு செய்தேன்.
சில சித்ரவதை சம்பவங்களை எழுதும்போது, உணர்வுகள் மரத்துப்போன நிலையில், பேனாவைக் கீழே போட்டுட்டு அப்படியே படுத்துடுவேன்.." & கலங்கிய கண்களோடு கூறுகிறார்.
"நூலுக்கான விமரிசனங்கள் வரத் தொடங்கியிருக்குமே?"
"இன்னும் முழு வீச்சில் வரலை. நண்பர்கள், உறவினர்கள் படிச்சுட்டுப் பாராட்டினாங்க. ஆனா, அது மட்டும் எனக்குப் போதாது.." என்றவர், தனக்குக் கிடைத்த பெரிய விருதாக எண்ணிப் பூரிப்பது தந்தையின் பாராட்டைத்தான்.
"நூலில் நீதிமன்றக் காட்சியைப் படிச்சிட்டு, உதடு பிதுங்க அழுதார் அப்பா. வார்த்தைகள் இல்லாத பெரிய பாராட்டு அது. நல்லாயிருக்குன்னு சொல்லியிருந்தாக்கூட அந்த திருப்தி இருந்திருக்காது. இந்தப் புத்தகத்தைப் படிச்சுட்டு, அரசியல் கலப்பில்லாத இளைஞர்கள் அந்தத் தாய்க்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டா, அதுவே போதும். முக்கியமா, பெண்கள் கட்டாயம் இதைப் படிக்கணும்.." என்று உணர்ச்சிவசப்படுகிற பூங்குழலி, அடுத்த நாவலுக்கு தயாராகிவிட்டார். வீரப்பனைத் தேடும் வேட்டையில் அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட பெண்கள்தான் கதைக் கருவாம்.
பெண் எழுத்தாளர்கள் நிறைய வரவேண்டும் என்கிற தாகம் இருக்கிறது இவருக்கு.
"பொதுவா, பெண்கள்னாலே வம்பு பேசுற வங்கனு நினைக்கிறாங்க. வம்புங்கிறதை தன்னைச் சுத்தி நடப்பதை உற்றுநோக்கி கிரகித்துக் கொள்ளும் திறனாத்தான் நான் பார்க்கிறேன். ஆணைவிட பெண்ணுக்கு இயல்பிலேயே இது அதிகம். அதை ஏன் எழுதுறது போன்ற விஷயங்களில் ஆக்கபூர்வமா பயன்படுத்தக்கூடாது? அதைத்தான் நான் செய்றேன்" என்கிறார் அழகாக.
-மித்ரா </span>
Thanks:
http://www.vikatan.com/aval/2004/jul/02072.../aval0107.shtml