Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அல்ப்ஸ் கூத்தாடிகள் - விவரணப் படம்
#1
அல்ப்ஸ் கூத்தாடிகள் - விவரணப் படம்
-----------------------------------------------------------
அருண்குமார், கேடிஸ்ரீ

1985ஆம் ஆண்டு அகதிகளாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்ற ஈழத்தமிழர்கள், அந்நாட்டினருடன் இணைந்து நாடகங்களை மேடையேற்றத் தொடங்கினர். நாடகங்களின் உள்ளடக்கம், அகதிகள் பிரச்னைகளை, குறிப்பாக ஈழத்தமிழர்களின் பிரச்னைகளைப் பேசுவதாக இருந்தது. இவை பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நிகழ்த்தப்பட்டன. அவ்வாறு மேடையேற்றப்பட்ட நாடகங்கள் சுவிட்சர்லாந்து மக்களிடையே ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்தியது.

நாடகங்கள் மூலம் நடந்த இம்மாற்றத்தை பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம் போன்ற ஊடகங்கள் முக்கிய இடம் தந்து பதிவு செய்தன. தொடர்பானவர்களைப் பேட்டி கண்டன. இதன் மூலம் ஈழத்தமிழர்களின் நாடகச் செயல்பாடுகள் முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்பட்டது.

மறளம், ஐயோ, ஸ்ரீசலாமி, பாண்டவர்களும் கிளவுஸ் முனிவரும், கடலம்மா, மலையப்பா போன்ற நாடகங்கள் தமிழ் மற்றும் டொய்ச் மொழிகளில் மேடையேறிய நாடகங்களாகும். இருமொழிக் கலைஞர்களும் பங்கேற்ற நாடகங்களாகும்.

நாடகம், சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்பதைக் கண்ட சிலர் முறையான நாடகப் பயிற்சி பற்றி யோசிக்கத் தொடங்கினர். தாங்கள் முன்பு பயிற்சியின்றி நாடகப் புரிதலின்றி மேற்கொண்ட நாடகச் செயல்பாடுகளை பரிசீலிக்கத் தொடங்கினர். இதன் காரணமாகத் தோன்றியது 'சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி'.

வேலை செய்து கொண்டே மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் பல்வேறு சிரமங்களோடு நாடகப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். கவிஸ் நாட்டு நாடகக் கலைஞர்கள், தமிழ்நாடகக் கலைஞர்களோடு மொழியறிஞர்கள், எழுத்தாளர்கள், நடன- நாட்டுப்புறக் கலைஞர்களைப் போன்று பலரிடமிருந்தும் கற்றவை ஒரு நல்ல அடித்தளத்தைத் தந்தது. இப்படி மூன்றாண்டுகளில் கவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியில் படித்து 'கலைவளரி' என்ற பட்டத்தைப் பெற்ற மாணவர்கள், இன்று பல டொய் நாடகங்களில், தொலைகாட்சி தொடர்களில், வானொலி நாடகங்களில் பங்கேற்று வருகிறார்கள். இரு மொழிக் கலைஞர்கள் கூடிச் செயலாற்றுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் - இந்தப் பின்னணியில் 'அல்ப்ஸ் கூத்தாடிகள்' என்ற விவரணப்படம் ஒன்றை சி. அண்ணாமலை எழுதி இயக்கியுள்ளார். இவர் கூத்துப்பட்டறையில் முழு நேர நடிகராக இருந்தவர். அதுமட்டுமல்லாமல் 'சுபமங்களா', கணையாழி', 'குமுதம்' இதழ்களில் பணியாற்றியவர். நாடகம் தொடர்பாகவும் தொடர்ந்து நிறைய எழுதி வருகிறார்.

கிட்டத்தட்ட 35 நிமிடம் ஓடுகிறது இக்குறும்படம். அகதிகளாக புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலைப்பற்றியும், கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் பல இடங்களுக்கு, பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததையும், அகதிகளாய் வாழும் அவர்களின் நிலைமைகளை நாடக வடிவில் சுவிட்சர்லாந்து நாட்டு நாடகக்கலைஞர்களுடன் இணைந்து மிகவும் தத்ரூபமாக சொல்கிறது படம்.

''சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி' மாணவர்களை சந்தித்து அவர்களின் நாடக பயிற்சித் தன்மைப் பற்றி அறிந்துக் கொள்வதற்காக சுவிட்சர்லாந்து நாட்டிற்குச் சென்றேன். அங்கு நான் அவர்களுடன் உரையாடும் போது எங்களது உரையாடல்களை அவர்கள் பதிவு செய்துக்கொண்டதைப் பார்த்தேன். அது மட்டுமல்லாமல் அங்கு வாழும் தமிழர்கள் சுவிஸ் நாட்டு நாடகக்கலைஞர்களுடன் இணைந்து தயாரித்த நாடகங்களை காண சந்தர்ப்பம் ஏற்பட்டது. என்னுடைய பேட்டி மற்றும் அவர்களின் நாடகங்கள் அனைத்தையும் 40 மணிநேரம் வரக்கூடிய அளவில் பதிவு செய்திருந்தார்கள். அதிலிருந்து பலவற்றை நீக்கி கிட்டத்தட்ட 35 நிமிடத்திற்கு ஓடும் குறும்படமாக உருவாக்கப்படடது ஆல்ப்ஸ் கூத்தாடிகள்.'' என்கிறார் இக்குறும் படத்தின் இயக்குனர், எழுத்தாளர் சி. அண்ணாமலை.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் வசித்தாலும், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தமிழர்கள் சற்று வித்தியாசப்பட்டு காணப்பட்டார்கள்.
ஆம். அங்குள்ள மக்கள் தங்கள் நாட்டிற்கு அகதிகளாக வந்த தமிழர்களைப் பற்றி, அவர்களின் நிலைமை, அவர்களுடைய சமூக பொருளதாரம் போன்ற எல்லாவற்றிலும் அதிக அளவில் அக்கறை செலுத்துகிறார்கள். அங்கு தமிழ்நாடகக்கலைஞர்களால் நடத்தப்பட்ட நாடகங்களில் காணப்படும் யதார்த்தம் அவர்களின் இதயத்தை தொட்டது. இதுவே அம்மக்கள் இவர்களுடன் ஒன்றிணைந்ததற்கான காரணங்களாகின எனலாம். நாளாவட்டத்தில் சுவிஸ் மக்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து நாடகங்கள் பல உருவாக்கினர்.

சுவிட்சர்லாந்து நாட்டு மக்கள் நாடகங்கள் அதிகஅளவில் நடத்துகிறார்கள். அதிகளவில் நாடகங்களுக்கான அரங்குகள் அங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


வெறும் தமிழில் மட்டும் நாடகங்கள் அமைத்தால் சுவிஸ் மக்களுக்கு தமிழர்களின் நிலைமை தெளிவாக புரியாது என்பது புரிப்பட்டதனால், அந்நாட்டு மக்களோடு இணைந்து இருமொழி நாடகங்களை தமிழர்களும், சுவிஸ் மக்களும் உருவாக்கினர். இந்நாடகங்கள் மூலம் தமிழர்கள் தங்கள் நிலையை வெளியுலகத்திற்கு அறிய வைத்தனர்.

ஸ்ரீ சாலமி, பாண்டவர்களும் கிளவுஸ் முனிவரும் போன்ற நாடகங்கள் அங்கு பிரபலமாயின. இந்நாடகங்களில் சுவிஸ் நாடக கலைஞர்களும் பங்கேற்றனர். இருமொழிகளும் இணைந்து இந்நாடகங்கள உருவாயின.

அங்குள்ள சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி மாணவர்களுடன் அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து 9 நாட்கள் பேட்டிகள் பல எடுத்தார்.

இந்நாடகங்களை நாம் ஏன் வெளியுலகத்திற்கு அறியச் செய்யக்கூடாது என்கிற எண்ணம் ஆன்டன் பொன்ராசா மற்றும் சி. அண்ணாமலைக்கு ஏற்பட அவர்களின் முயற்சியின் விளைவே 'ஆல்ப்ஸ் கூத்தாடிகள்' . இவர்களுடன் A.S. பத்மாவதி அவர்களும் இணைந்து செயல்பட்டார். லண்டன், சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இக்குறும்படம் வெளியிடப்பட்டது.

''உலகளவில் இப்படத்தின் மூலம் தமிழர்களின் குறிப்பாக புலம்பெயர்ந்த அகதிகளின் நிலைமையை எடுத்துச் சென்று பலர் அறிய செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என்கிறார் அண்ணாமலை.

மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டி முகவரி

சி.அண்ணாமலை
3, நாதன்ஸ் ஆற்காடு
21, மாளவியா அவென்யூ
எல்.பி. சாலை
சென்னை 600 041.
தொலைபேசி எண் 24455383 (வீடு) 24462726 (அலுவலகம்)
மின்னஞ்சல் : c.annamalai@indiatimes.com

ஆறாம்திணை
<b>
?

?</b>-
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)