08-12-2004, 06:48 PM
பிழைப்பு
எல்லோரும் வேலைக்குப் போய் விட்டார்கள். மயான அமைதி. ஹீட்டர் மட்டும் உறுமிக் கொண்டிருந்தது. திரைச் சீலையை விலக்கி, கண்ணாடிக்கு வெளியே பார்த்தபோது - வெள்ளை வெளேரென்று நாலு இஞ்ச்சுக்கு பனி. ஒரு ஈ காக்காய் இல்லை. சை, இதுதான் அமெரிக்காவா?
மூன்று வாரங்களாக பகல் பொழுதுகள் இப்படித்தான் ஆயுள் தண்டனை போல் கழிகிறது. கார் இல்லாமல் வெளியே எங்கும் போக முடியாது. இன்னும் லைசன்ஸ் எடுக்கவில்லை. அதற்கு முன்னால் சோஷியல் செக்யூரிட்டி எண் வர வேண்டும் என்றார்கள். அந்த ஒன்பது இலக்கங்கள்தான் இந்த நாட்டில் உன் அடையாளம். அதைத் தொலைத்தால் நீ தொலைந்தாய் என்று பயம் வேறு உறுத்தினார்கள். அது மட்டுமா, ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் வேறு எடுக்க வேண்டும். அது வரைக்கும் ஷேவிங் கூடப் பண்ண வேண்டாம். பிளேடால் நீ கன்னத்தைக் கொஞ்சம் அறுத்துக் கொண்டால் இங்கே நாங்கள் யாரும் பொறுப்பல்ல என்று எச்சரிக்கை விடுத்தார்கள். இந்த சம்பிரதாயங்கள் முடிந்த பின் என் கழுத்தில் மணிக்கு இத்தனை டாலர்கள் என்று விலைப்பட்டியல் மாட்டப்பட்டு நான் சந்தையில் நிறுத்தப்படுவேன். பலரும் டெலிபோனில் என் பல்லைப் பிடித்துப் பார்த்து விட்டு - துண்டு போட்டு என் விற்பனைப் பிரதிநிதிகளிடம் பேரம் பேசிப் பார்ப்பார்கள். பேரம் படிந்தால் நான் நல்ல விலைக்கோ, அடிமாட்டு விலைக்கோ விலை போவேன்.
டெலிபோன் அலறியது. எடுக்கத் தயங்கினேன். கொஞ்ச நாளாய் எனக்கு போன் போபியா வேறு வந்து தொலைத்திருக்கிறது. ரிசிவரை எடுத்தால் வந்து விழும் அமெரிக்க அக்சென்ட் ஒரு சுக்கும் புரிவதில்லை.
" டிவி நிறைய பாருங்க. சரியாய்டும். " என்று நியுயார்க்கில் வேலை பார்க்கும் சுப்பு யோசனை சொல்லியிருந்தார்.
" பகல்ல நிறைய மார்க்கெட்டிங் கால்ஸ் வரும். அதை எடுத்துப் பேசுங்க. கால் வரலைன்னாலும் பரவாயில்லை. நீங்களா 1-800 நம்பர்களுக்கு டயல் பண்ணிப் பேசுங்க. " - இது கார்த்திக்கின் அட்வைஸ்.
நானும் இங்கே வந்ததிலிருந்து பார்க்கிறேன். இலவச அறிவுரைகள் ஏராளமாய்க் கிடைக்கிறது. சிலது உபயோகமானவை. பலதும் உப்புச்சப்பில்லாதவை. ரிசிவரை எடுத்து விட்டேன். " ஹலோ. "
மார்க்கெட்டிங் கால்தான். நல்ல வேளை மறுமுனையில் அந்த ஆள் பேசிய ஆங்கிலம் எனக்கு அட்சர சுத்தமாய்ப் புரிந்தது. " நீங்க நூறு அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிங்க. அறுபது டாலர் மதிப்புள்ள எங்க கம்பெனி தயாரிக்கும் டெலிபோன் உங்களுக்காக இன்ஸ்டன்ட் தள்ளுபடி இருபது டாலர் போக நாப்பது டாலருக்குத் தரப் போறோம். அந்த நாப்பது டாலரும் மெயில் அண்ட் ரிபேட்டில் உங்களுக்குத் திரும்பக் கிடைச்சிரும். ஆக ஒரு அருமையான போன் உங்களுக்கு இலவசமாக் கிடைக்கிறது. "
அட, அமெரிக்கா வந்த பின் முதல் முதலாய் ஒரு டெலிபோன் உரை வார்த்தைக்கு வார்த்தை தெளிவாய் காதில் விழுந்திருக்கிறது. ஆனால் அவன் சொன்னதின் சாராம்சம் எனக்கு விளங்கவில்லை.
" மெயில் அண்ட் ரிபேட்ன்னா என்ன? "
இப்படிக் கேட்கும் ஒரு ஜந்து கூட அமெரிக்காவில் வசிக்கிறதா என்கிற மாதிரி மறுமுனை கொஞ்ச நேரத்துக்கு எதுவுமே பேசவில்லை. " உங்க பேர் என்ன? " பேரைச் சொன்னதும், " நீங்க இந்தியரா? புதுசா அமெரிக்கா வந்திருக்கிங்களா? "
" ஆமா. "
" நானும் ஒரு இந்தியன்தான். விச் பார்ட் ஆஃப் இண்டியா? "
" மெட்ராஸ். "
" அட தமிழா? நான் செங்கல்பட்டு ஸார். என்ன படிச்சிருக்கிங்க? "
" பிஈ. "
" நம்ம கேஸ்தான். நான் அருள்மிகு அற்புதகுஜாம்பாள் சுயநிதிக் கல்லூரிலதான் படிச்சேன். ரொம்ப சந்தோஷம் ஸார். ஒரு இந்தியர், அதிலும் ஒரு தமிழர், அதிலும் ஒரு என்ஜினியர் கிட்டே பிசினஸ் பண்ண வாய்ப்புக் கிடைச்சிருக்கே. சந்தோஷமா இருக்கு. மெயில் அண்ட் ரிபேட்ன்னா நீங்க நாப்பது டாலர் கட்டி எங்க ஃபோனை வாங்கினதும் ஒரு ரிபேட் படிவமும் கூட அனுப்புவோம். அந்த படிவத்தை நிரப்பி, பாக்கெட்டின் மேலிருக்கும் பார் கோடையும், பில்லையும் கூட வெச்சு அனுப்பினா மூணு மாசத்துக்குள்ளே நீங்க குடுத்த நாப்பது டாலரை உங்களுக்கு திரும்பக் குடுத்துருவோம். போன் ஃப்ரீ. "
" இதில் உங்களுக்கென்ன லாபம்? "
" அதெல்லாம் கேக்காதிங்க ஸார். இங்க அப்படித்தான். உங்க கிரெடிட் கார்டு நம்பர் மட்டும் சொல்லுங்க. எக்ஸ்ப்ரஸ் டெலிவரில சாயந்தரம் போன் உங்க வீட்டுக்கு வந்துரும். "
" எனக்கு இன்னும் எஸ்எஸ்என் கூட வரலைங்க. இனிமேதான் நான் வேலையே தேடிப் பிடிக்கணும். அவசர ஆத்திரத்துக்காக ஐசிஐசிஐ க்ரெடிட் கார்டுதான் வெச்சிருக்கேன். "
" விசா கார்டுதானே. அது போதும். நம்பரைச் சொல்லுங்க. உங்க நல்ல மனசுக்கு சீக்கிரமே வேலை கிடைச்சிரும் ஸார். இல்லேன்னா இருக்கவே இருக்கு. ரெஸ்டரென்ட்டிலோ, கேஸ் ஸ்டேஷனிலோ... அதான் ஸார், பெட்ரோல் பங்க்... இங்க எங்கனாச்சும் போய் ஒட்டிக்கங்க. இல்லை என்னை மாதிரி ஸேல்ஸ் ரெப்பா கூட ஆயிருங்களேன். இல்லீகல்தான். ஆனா வயத்தைக் கழுவணுமே. எல்லாரும் கம்ப்யூட்டர் மேலயே போய் விழுந்தா அது தாங்குமா? க்ரெடிட் கார்டு நம்பர் என்ன சொன்னிங்க? "
" நான் இன்னும் சொல்லவே இல்லே. எனக்கு எதுக்கு போன்? ஏற்கெனவே இங்க ஒரு போன் இருக்கே. "
" ஃப்ரீ ஸார். இதுல காலர் ஐடி, ஆன்சரிங் மெஷின் வேற இருக்கு. நீங்க ஒத்தைப் பைசா செலவு பண்ணப் போறதில்லை. சும்மா கிடைக்கற பொருளை வேண்டாம்ன்னு சொல்றிங்க. "
" நான் நாப்பது டாலர் தரணுமில்லையா? "
" அதான் திருப்பி அனுப்பிருவமே. "
" இருந்தாலும்... "
" நாளைக்கே உங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைச்சு வெளியூர் போனா அபார்ட்மென்ட் எடுக்கணும். போன் வாங்கணும். அப்போ உங்களுக்கு இந்த ஆஃபர் கிடைக்காது. நீங்க அமெரிக்காவுக்கு புதுசு. புத்திசாலித்தனமா ஷாப்பிங் செய்யறதைப் பத்தி நாலு பேர் கிட்டே கேட்டுப் பாருங்களேன். "
நான் தயங்கினதைப் பார்த்து, அவன் சட்டென அழுகிற மாதிரிப் பேசினான். " ஸார், உங்க கிட்டே ஒரு உண்மையைச் சொல்றேன். எனக்கு சாஃப்ட்வேர் வரலை. அற்புதகுஜாம்பாளில் படிச்சதை வெச்சு இங்க தாக்குப் பிடிக்க முடியலை. கொஞ்ச நாள் கேஸ் ஸ்டேஷனில் இருந்தேன். ஒரு காப் பிடிச்சிட்டான். நல்ல வேளை இரக்கப்பட்டு எச்சரிக்கை குடுத்து அனுப்பிட்டான். அப்புறம் இண்டியன் ரெஸ்ட்டரென்ட் கிச்சனுக்குள்ளே தோசை வார்த்துட்டிருந்தேன். ஓனர் ரொம்ப கேவலமா ட்ரீட் பண்றார் ஸார். நமக்குக் கொஞ்ச நஞ்சம் ரோஷம் இன்னும் இருக்கே. அதையும் விட்டுட்டு இந்த கம்பெனில ஒரு டீஸன்ட்டான பிழைப்புக்கு வந்திருக்கேன். இந்த வாரம் பூரா நான் ஒரு போன் கூட விக்கலை. இன்னிக்கு ஒண்ணாவது விக்கலைன்னா வெள்ளைக்காரன் என்னை ஃபயர் பண்ணிருவான். ஒரு தமிழனை, ஒரு என்ஜினியரை காப்பாத்துங்க ப்ளீஸ். உங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கேட்டுக்கறேன். "
" அய்யய்யோ. பெரிய வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணாதிங்க. "
" என்ன ஸார் பெரிய! பொழப்புக்காக எவனெவன் கால்லயோ விழறோம். ஒரு தமிழன் காலில் விழறதில் என்ன தப்பு? என்னோட வாழ்க்கை இப்ப உங்க கையில். அதுக்கு மேல உங்க இஷ்டம். "
ராத்திரி சுப்பு ஒரு பீர் பார்ட்டிக்கு கூட்டிப் போனார். அங்கிருந்த அல்ட்ரா மாடர்ன் பேர்வழி, " டார்கெட் கம்ப்ளீட் பண்ணிட்டேன் மச்சி. அதுக்குத்தான் பார்ட்டி. உங்க அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ் ஏரியாலதான் புதுசா வந்திருக்கிற யாரோ ஒரு இளிச்சவாயருக்கு கடைசி போனை வித்திருக்கேன். அப்பப்பா அதுக்காக போன்ல என்ன சர்க்கஸ் எல்லாம் பண்ண வேண்டியிருந்துச்சு. கேஸ் ஸ்டேஷன், ரெஸ்டரென்ட்டுன்னு ஏகப்பட்ட சோகக் கதை அவுத்து விட்டேன். ஸார் யாரு? நீங்க பீர் அடிப்பிங்கதானே? "
என் முன்னால் ஒரு பாட்டிலைத் திறந்து வைத்தான்.
Thanx: sathyarajkumar

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->