Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலக சாதனையாளர்கள்
#1
<b><span style='font-size:30pt;line-height:100%'>1 - செர்கி பூப்கா</b></span>

<img src='http://www.yarl.com/forum/files/sergeybubka.jpg' border='0' alt='user posted image'>


<span style='font-size:27pt;line-height:100%'>35 உலக சாதனைகளை புரிந்த செர்கி பூப்கா</span>


<span style='font-size:23pt;line-height:100%'>தடகள உலகில் 16 ஆண்டு காலம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது மட்டுமின்றி, உலக சாதனை படைத்து அந்த உலக சாதனையை 35 முறை உயர்த்தி மகா சாதனை புரிந்து மாவீரர் உக்ரைனைச் சேர்ந்த செர்பி பூப்கா.

1963 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி டோனெட்ஸ் எனும் தொழிற்சாலை நகருக்கு அருகே பிறந்த செர்பி பூப்கா, தனது 19 வயதில் சர்வதேச தடகளப் போட்டியில் அடியெடுத்து வைத்து முதல் முறையிலேயே உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.

1983 ஆம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன் போட்டிகளில் களமிறங்கிய பூப்கா, தங்கம் வென்று அதுவரை உலக சாதனையாக இருந்த உயரத்தைக் கடந்து புதிய சாதனை படைத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக தடகள சாம்பியன் போட்டிகள் ஆறிலும் அடுத்தடுத்து பங்கேற்று ஒவ்வொரு முறையும் புதிய சாதனை படைத்து தனக்குப் பிறகு யார் என்கின்ற கேள்வியை உலகத்திற்கு தொடர்ந்து விடுத்தவர் செர்பி பூப்கா.

பூப்கா என்றாலே போல் வால்ட், போல் வால்ட் என்றாலே பூப்கா என்று இன்று வரை விளையாட்டு ரசிகர்களின் உள்ளத்தில் நிரந்தரமாக இடம் பிடித்தவர்.

உலக மற்றும் சர்வதேச தடகளப் போட்டிகளில் இறங்கும் ஒவ்வொரு முறையும் புதிய சாதனை படைத்த செர்கி பூப்காவால் ஒலிம்பிக் போட்டிகளில் - ஏனோ தெரியவில்லை - பெரிதாக சாதனைகள் படைக்கவில்லை.

1988 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி 6 மீட்டர் உயரத்தை கடந்து பெரும் சாதனை புரிந்த பூப்காவால் அதன் பிறகு நடந்த சியோல் ஒலிம்பிக் போட்டியில் புதிய சாதனை நிகழ்த்த முடியவில்லை. 5.90 மீட்டர் உயரம் மட்டுமே தாண்டினார். அதுவே அவருக்கு தங்கப்பதக்கத்தைப் பெற போதுமானதாக இருந்தது.

1991 ஆம் ஆண்டு 20 அடி உயரத்தை உள் விளையாட்டரங்கிலும், வெளியிலும் தாண்டிய ஒரே வீரர் என்கின்ற பெருமையை பூப்கா பெற்றார்.

1992 ஆம் ஆண்டு நடந்த ஒலிப்பிக் போட்டிகளில் தான் நிர்ணயித்த இலக்கை தாண்ட முடியாமலேயே ஏமாற்றமடைந்த பூப்கா, அடுத்த 36 நாட்களில் இரண்டு முறை உலக சாதனை ஏற்படுத்தினார்.

தனது தடகள வாழ்க்கையில் 35 முறை - 18 முறை உள்ளரங்கிலும், 17 முறை வெளியிலும் - உலக சாதனைகளை நிகழ்த்திய செர்கி பூப்கா, தடகளம் என்பது மனிதனின் சாதனை ஓட்டத்திற்கு ஒரு மைல் கல் என்பதை நிரூபித்துள்ளார்.

ஃபைபர்கிளாஸ் பொருளால் ஆன கம்பத்தைக்கொண்டு ஓடிவந்து 6 மீட்டருக்கும் அதிகமான உயரங்களை அவர் தாண்ட முயற்சிக்கும் போது, அந்தக் கம்பம் ஒடிவதுபோல் வளைவதும், தனது மூச்சைப் பிடித்துக்கொண்டு அந்தக் கம்பத்தின் உச்சியையும் தாண்டி வைக்கப்பட்டுள்ள குறுக்குக் கோலைத் தாண்டி செர்பி பூப்கா சாதனை படைக்கும் போது யாராலும் தங்களின் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாது. உள்ளபடியே மயிர்கூச்செரியும் மாய காட்சியைப் போல அவருடைய முயற்சி இருந்தது.

6.24 மீட்டர் உயரத்தை தாண்டி கடைசி உலக சாதனையை ஏற்படுத்திய அந்த மகா வீரர் இன்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தடகள ஆணையத்தின் தலைவராக உள்ளார். </span>






நன்றி
வெப் உலகம்
[b][size=18]
Reply
#2
நன்றி கவிதன்.

விரைவில் நானும் உங்களுடன் கலந்துக் கொள்கிறேன்.
<b>
</b>
Reply
#3
தகவலுக்கு நன்றிகள் கவிதன்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)