Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
குறும்படத்திற்கு நன்றி.. வார்த்தைகளே இன்றி உணர்வுகளும் அசைவுகளும் பேசியிருக்கு..!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[size=16]நல்ல ஒருபடம்.....
மெளனமாக கதையை நகர்த்தி...... மனதை உருக்கிவிட்டார் இயக்குனர்.. குறும் படத்துக்கு நன்றி மோகன் அண்ணா.
<img src='http://www.yarl.com/forum/files/vd30-_15.gif' border='0' alt='user posted image'>
காலத்தின் கோலத்தால்
கால் தனை இழந்திட்ட அச் சிறுவன்
சன்னத்தில் ஓட்டையிட்டு
குழலினை உருவாக்கி
சுருதியுடன் வாசிக்கும்
இசை கேட்டு
கண்ணிழந்த, கையிழந்த
இன்னொரு சிறுவன்
அருகில் வந்து அமர்ந்திடவே
அன்பாக அவன் நோக்கி
ஆறுதலாய் ஒரு குழல் வழங்கிடவே
அவன் முகத்தில் ஒரு புன்சிரிப்பு
புதிதாக ஒரு உறவு கிடைத்ததென்றோ...?
புது.. புது.. குழல் ஊதி மகிழ்ந்திட்ட
சிறுவர் முன்
இவர்கள் புதுமையாய் குழல் ஊதி
தமக்குள்ளே மகிழ்ந்திட்டர்
[b][size=18]
Posts: 87
Threads: 1
Joined: Aug 2004
Reputation:
0
குறும்படங்களை வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும்
Posts: 31
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
<img src='http://www.geocities.com/yknataraj/dawn-5-final.JPG' border='0' alt='user posted image'>
கவிதையைப் படமாக்குவதும் உண்டு
படமே கவிதையாய் கனப்படுவதும் உண்டு..
பஞ்சை ஊதிவிளையாடும் சிறுவர்களைப்
பஞ்சாய்ப் பறக்கச் செய்யும் பறக்கும் போர்விமானம்..
ஊதி எழுப்பும் இசையை
உலகம் ஊதிக்கொண்டிருக்கும் வரை...
உள்ளத்தை ஊனமாக்க முடியாது
போரில் நலிந்த மனிதம்
மலிந்த உயிர்ப்பொருளல்ல..
வலிந்த நட்பில்
உறவின் தொடர்பில்
உலகப் பொருளாய்த்
தோன்றிக் கொள்ளும்.
பஞ்சை ஊதும்
குழலை ஊதும்
போர்க்காலச் சமாதானப் பறவையின் கானம்..
இப்போதுதான் ஒரு படம் பேசியிருக்கிறது கவிதையாய்...
நன்றிகள்......
" "
<b>" "
</b>
<img src='http://www.icard.com.hk/horoscope/image/1flowers.gif' border='0' alt='user posted image'>