Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செல்லமே!
#1

<img src='http://www.kumudam.com/kumudam/27-09-04/8t.jpg' border='0' alt='user posted image'>

சிறுவயதில் அம்மா (?) அல்லது அக்கா போல் பழகும் பெண்ணின் மீது ஏற்படும் ஈர்ப்பு, பிறகு 'பொஸஸிவ்னஸ்' ஆக மாறி, கணவனிடமிருந்து அவளை மூர்க்கமாகப் பிரிக்கும் அளவிற்குப் போகும் விபரீதத்தைச் சொல்லும் கதை.

கத்தி மேல் நடந்திருக்கிறார் இயக்குனர். காயம் படாமல் நடக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களைச் சொல்லாமல் காப்பதுதான் குழப்பமாகிவிட்டது. அவள் மேல் அந்தப் பையன் கொண்டது காதலா? காமமா? ('இல்லை' என்கிறான், ஒரு கட்டத்தில்) பாசமா? வெறியா? தெளிவாகப் புரியவில்லை.

ஹீரோ (புதுமுகம் விஷால்), ரீமா சென், பரத் மூவருமே பாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார்கள். தன்னைக் கடத்தி வந்த பரத்திடம் கோபம் கொள்ளாமல் 'ஏண்டா இப்பிடி செஞ்ச மடையா?' என்று உரிமையோடு ரீமா கேட்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக விபரீதம் புரிந்து திணறும்போதும் கதை விறுவிறுப்படைகிறது.

கே.வி.ஆனந்தின் கேமிரா புகுந்து விளையாடியிருக்கிறது. கோவா காட்சிகளின் இயற்கையான லைட்டிங்கும், கிளைமேக்ஸ் காட்சியின் சுறுசுறுப்பான படப்பிடிப்பும் காமிராவுக்கு திருஷ்டி போட வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.

அடுத்து, ஹாரிஸ் ஜெயராஜின் இசை. 'ஆரிய உதடுகள்' காதில் ரீங்காரமிடுகிறது. விஷாலா, பரத்தா, ரீமாவா? யாருடைய கோணத்தில் கதை சொல்லப்படுகிறது என்பது தெளிவாக இல்லாததால் ஆரம்ப ஃப்ளாஷ்பேக் காட்சி சுவாரஸ்யமில்லாமல் போய்விட்டது.

விவேக் காமெடி? ம்...

ஸ்ட்ரோக் வந்து படுத்துக் கிடக்கும் பணக்காரராக கிரிஷ் கர்னார்ட் அருமையாக நடித்திருக்கிறார்.

ரீமாவின் கணவனைப் பிடிக்காமல் பரத் செய்யும் சின்னச்சின்ன சேஷ்டைகளும், பிறகு புத்திசாலித்தனமாக ஒரு கோட்டைக்குள் அவரைச் சிறைப்பிடிக்கும் டெக்னிக்குகளும் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது.

'அவனுக்கு அம்மாவாகும் வயசும் உனக்கு இல்லை. உனக்குப் பிள்ளையாகும் வயசும் அவனுக்கு இல்லை' என்று கடைசியில் ஹீரோ சொல்கிறார். இதுதான் கதையின் பிரதான முரண்பாடு.

இன்கம்டாக்ஸ் ரெய்டு காட்சிகள் புதுசு மட்டுமல்ல, பட்டாசு!

க்ளைமாக்ஸ் விறுவிறுப்பானது. முன்பே யூகிக்கக் கூடியது.
செல்லமே
no
வெல்லமே!

<img src='http://www.kumudam.com/kumudam/27-09-04/8p.jpg' border='0' alt='user posted image'>

றீ கோவா _ பாணாஜி பகுதியில் இதுவரை யாரும் 'ஷ¨ட்டிங் நடத்தியிராத இடங்களைத் தேடி அலைந்து படம் பிடித்திருக்கிறார்கள். தவிர, அங்குள்ள கலெக்டர் அலுவலகத்திலும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

றீ ஹீரோ விஷால், பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகன். இந்தப் படத்திற்காக கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்திருக்கிறார்.

றீ'வெள்ளைக்கார முத்தம்' பாடலுக்காக ஒரே ஒரு டவலை மட்டும் கொடுத்து, இரண்டு நாட்கள் கோவாவில் உள்ள ஒரு வீட்டில் கிளாமராக ரீமாசென்னை ஆட வைத்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் தாரா. டவல் அவிழ்ந்து விடாமல் இருக்க நிறைய முன்னேற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.

றீ'பாய்ஸ்' முடிந்த சமயத்தில் பரத்தை புக் செய்திருக்கிறார்கள். இந்த கேரக்டருக்காக ஒரே மாதத்தில் ஒன்பது கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் பரத்.

றீதொழிலதிபராக நடித்து இருப்பவர் கிரிஷ் கர்னார்ட். இவர் காதலன் படத்தில் கவர்னராக நடித்தவர். முகம் கோணலாக நடிப்பதற்காக நிறைய பயிற்சி எடுத்து இருக்கிறார்.

றீஅந்தமானில் எடுக்கப்பட்ட நீர் அடி காட்சிகளுக்காக மும்பையிலிருந்து ஸ்பெஷல் கேமிரா கொண்டு வந்து படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த்.

றீமும்தாஜ் சம்பந்தப்பட்ட சீன்களை, அரை நாளில் எடுத்து முடித்திருக்கிறார்கள். இதில் மும்தாஜ் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.

27-09-04

Thanks © Kumudam
Reply
#2
<span style='color:red'><b>செல்லமே </b>
another view
'கதையில் ஒன்னுமில்லை: படத்துல என்னவோ இருக்குப்பா' என்று சொல்ல வைக்கும் படம் 'செல்லமே'.

தொழிலதிபர் கிரிஷ் கர்னட்டின் மகன் பரத். பரத் ஆறுமாத குழந்தையாக இருக்கும்போது ரீமா சென்னுக்கு வயது ஆறு. குழந்தை பருவத்திலேயே தாயை இழக்கும் பரத்துக்கு பக்கத்து வீட்டிலிருக்கும் ரீமாதான் எல்லாமும்.

வாலிப பருவம் வந்த பிறகும் பரத்-ரீமாவின் உறவு வளர்கிறது. இந்நிலையில் இன்கம் டாக்ஸ் அதிகாரியான விஷால், ஒரு முறை கிரிஸ்கர்னட் வீட்டிற்கு சோதனை போட போக அங்கு ரீமாவை பார்த்து சொக்கிப் போகிறார். அப்புறமென்ன கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல் என்று மேட்டர் வளர்ந்து கடைசியில் கல்யாணம் வரை போகிறது.

கல்யாணம் முடிந்து இனிக்க இனிக்க இல்லறம் நடத்தும் இவர்களது வாழ்க்கையில் பரத் மூலம் திடீரென இடி விழுகிறது.

சின்ன வயசிலிருந்தே தன்னுடன் இருந்த ரீமா, திடீரென திருமணமாகி பிரிவதை தாங்கிக்கொள்ள முடியாத பரத்தின் மனசுக்குள் வக்கிரம் தொற்றிக்கொள்ள, சமயம் பார்த்து ரீமாவை கடத்தி, "இனி உனக்கு எல்லாமே நான்தான்" என்று சொல்ல கதையில் சூடு பறக்க ஆரம்பிக்கிறது. அப்புறமென்ன ஆகிறது என்று ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கு க்ளைமாக்ஸில் கிடைக்கிறது விடை.

என்னடா இது.. எங்கேயோ கேட்ட கதையாக இருக்கிறதே என்று யோசனை செய்கிறீர்களா!? கரெக்ட். 'குணா', 'காதல் கொண்டேன்' படங்களின் உல்டாதான் இது. என்றாலும் உல்டாவை உருப்படியாக சொன்ன விதமும் திரைக்கதை பின்னலும் 'புதுசு கண்ணா புதுசு' ரகம்.

நாயகனாக வரும் விஷால் ரொம்பவே சாதாரணமாக இருக்கிறார். நானும் ஸ்டைலு காட்டுகிறேன் பேர்வழி என்று ஓவர் ஆக்டிங் பண்ணாமல் அடக்கி வாசித்திருப்பது சால சிறந்ததாக உள்ளது. அதே சமயம் ஒரு ரவுண்ட் வருவார்; சதுரம் வருவார் என்றெல்லாம் எந்த உறுதியும் கொடுக்க முடியாது.

அட ரீமாவா இது... என்று ஆச்சர்யப்படுமளவிற்கு மூட்டை கட்டி வைத்திருந்த நடிப்பு திறமையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். கடைசியில் சொன்ன வார்த்தை கவர்ச்சிக்கும் பொருந்தும்படியாக, 'ஆடி' முடிந்தும் கூட ரீமாவின் க்ளாமரில் தாராள தள்ளுபடிகள். மூர்க்க குணத்துடன் தன்னிடம் நடந்துகொள்ளும் பரத்திடம் ஆத்திரம் காட்டுவதா, அன்பு காட்டுவதா என்ற தனது தடுமாற்றத்தை முகபாவனைகளால் வெளிப்படுத்தும் காட்சியில் பேஷ்... பேஷ்!

நெகட்டிவ் ஹீரோ ரோல் என்றால் பரத் சும்மா புகுந்து விளையாடுவார் போல் தோன்றுகிறது. மிக்ஸிக்குள் லவ் பேர்ட்ஸை போட்டு மூடி, ரீமாவிடம் 'உன் புருஷன் இங்க வந்தான்னா இதோ இந்தமாதிரி சட்னி ஆகிடுவான்' என்று மிரட்டும்போதும், சிரித்துக்கொண்டே வில்லங்கம் செய்யும்போதும் 'குட்டி ரகுவரன்' என்று சொல்லவைக்கிறார் பரத். கீப் இட் அப்!

சீரியஸான கதைக்கிடையில் விவேக்கின் காமெடி ரிலாக்ஸ். மும்தாஜிடம் விசாரணை செய்யும் காட்சியில் குபீர் சிரிப்பு. பானுப்ரியா ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு மாயமாகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வைரமுத்துவின் 'ஆரிய உதடுகள் உன்னது.. திராவிட உதடுகள் என்னது..' பாடல் வரிகளில் புதுக்கவிதை பூத்துக்குலுங்குகிறது.

பாடலில் வைரமுத்து என்றால் ஒளிப்பதிவில் கவிதை வடித்திருக்கிறார் கே.பி. ஆனந்த். குறிப்பாக கோவா காட்சிகள் கண்கள் பார்த்து ரசிக்கும் கவிதை.

'கதை ஓல்டு, திரைக்கதை கோல்டு' என்கிற ரீதியில் எடுத்துக்கொண்ட விஷயத்தை, இளமை புதுமையாக சொல்லியிருப்பதால் இயக்குனர் காந்தி கிருஷ்ணாவை பாராட்டலாம்.

thanks:cinesouth


<b>'செல்லமே' கொஞ்சலாம்.</b> </span>
Reply
#3
தகவலுக்கு நன்றிகள் அண்ணா....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)