Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"இக்கரையிலும் பச்சைகள்"
#1
இன்று மாலை வழமையாக இல் ஒளிபரப்பப்படும் "நையாண்டி மேளம்" பார்க்க எனது தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தேன். வழமைபோல ஏதோ ஒரு சமூகப் பிரட்சனையை நகைச்சுவையாக சொல்லுவார்களென எதிர்பார்த்திரிந்தேன்.

குறிப்பிட்ட நேரத்திற்கு "நையாண்டி மேளம்" ஒளிபரப்பத்தொடங்கியதும்....

.... நம்பமுடியவிலை! என் கண்ணிலிருந்தே என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தோடியது. ஜேர்மனியிலிருந்து பிரான்ஸுக்கு புலம் பெயர்ந்த, பிறப்பால் ஊணமுற்ற இரு பிள்ளைகளின் தந்தையும், அவரது தந்தையும், நடுவருமாக "சுதா, குணபாலன், தயாநிதி" நடிப்பால் உச்சியை எட்டியிருக்கிறார்கள். புலத்தில் எம்மவர்களின் அவலங்களின் ஒரு பக்கமே, தாயகத்திலிருந்து புலத்தில் மகனின் குடும்பத்துடன் வந்திணந்த ஒரு வயோதிப தந்தை, அந்த மகனின் அன்பான குடும்பத்திலிருந்த பிரட்சனைகளைப் புரியாம் கலங்குவது, தான் பெற்ற இரு பிள்ளைகள் ஊனமுற்றதை சமூகத்திற்கு மறைத்து வாழும் மகன் தந்தைக்கு இறுதியில் தனது நிலமையை சொல்லி கதறுவதை, உனர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டார் இயக்குனர் "கனேஸ் தம்பையா".

சபாஸ், அக்கரைக்குத்தான் பச்சை என்றலையும் எம்மவர்களுக்கு, இது ஒரு செருப்படி. இது போன்ற சிறந்த படைப்புக்கள் தொடர்ச்சியாக வெளிக்கொணரப்படவேண்டும்.

மீண்டுமொரு சபாஸ் "நையாண்டி மேழக் குடும்பத்திற்கு".
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)