Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐப்பசி முப்பது கண்ட கொடுரம்
#1
ஐப்பசியின் முப்பதை மறக்க முடியாமல்
இன்றும் கண்களில் கண்ணீர்க்குளம்.
யாழ் மக்களின் சரித்திர ஊர்வலம்
சாவில் இருந்து தப்பிக்க சாவோடு சாவுக்குள் ஊர்வலம்.
செம்மணி வெளியில் சாகாத பிணங்களாய்
ஊன் உண்டு உறங்கிய ஊரை விட்டு உள்ளத்தில் சேகம் படர சொல்ல முடியாத துன்பத்தில்.
அரை றாத்தல் பாணுக்கு அரைமைல் தூத்துக்கு வரிசை வாரீசின் ஆட்சியிலும்.
எம் துன்பம் காணச்சகிக்காத வானம் கண்ணீர்; பொழிய செம்மணி சேறுபட மக்கள் வெள்ளம் மழை வெள்ளத்துடன் மாரடித்து நடந்தது.
:twisted: :evil: :P :evil: :twisted:



[/url]</ul> :twisted:
. . . . .
Reply
#2
மறக்கமுடியாத ஒரு நாள்...
Reply
#3
Quote:எம் துன்பம் காணச்சகிக்காத
வானம் கண்ணீர் பொழிய
செம்மணி சேறுபட
மக்கள் வெள்ளம்
மழை வெள்ளத்துடன்
மாரடித்து நடந்தது.


நன்றாக இருக்கிறது.. என்ன செய்வது இயற்கையே உணர்ந்து நமக்காய் கண்ணீர் வடிச்சிருக்கு... ஆனால்....?? !
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
நாளை நினைவுகூர்ந்ததுக்கு நன்றி
[b][size=18]
Reply
#5
ஆக்கிரமிப்பின் கொடூரம்
ஆட்லறியின் பிளிறல்
ஆடி வந்த தாங்கிகள் கக்கிய
அக்கினிப் பிளம்புகள்
அடுக்கடுக்காய் கொட்டிய
ஆகாயமார்க்கக் குண்டுகள்
ஆழக்கடலிருந்து வந்த
அமெரிக்க கணொன் குண்டுகள்
அத்தனையும் கண்டு....
அழிவு தடுக்க ஒரு
அகதி வாழ்வு தேடி
அனைவரும் ஊர்வலமாய்
அநாதைகளாய் மக்கள்....
அது கண்டு வானமே அழுதது
அடை மழை கொட்டியது
அடியெடுத்து வைக்க
அடி கூட இல்லை - ஆனால்
அரக்க படை அடித்தது
அடி விழுந்தது
ஆகாய மார்க்கமாய்
அலறல்கள் ஒலிக்க
அன்பு உள்ளங்கள் சுருண்டு விழ
அகப்பட்டதைக் கொண்டு
ஆயிரம் கனவுகளுடன்
அவசர நகர்வுகள்....!

அன்பு விழிகள் பெருக்கெடுத்தன
ஆருயிர் உறவுகள்
அகதியாவதை சிங்களத்தின் முன்
அடித்துச் சொன்னோம்
"அப்படியா" கேட்டதுடன் சரி
அனுதாபம் காட்டக் கூட மனமில்லை
அரக்க குணமோ - அன்றிலிருந்து
அரக்கனிடத்தே கேட்டத்தில்லை
அவசரத்துக்கும் ஓர் ஆதரவு...!

அன்பு மக்களின் அவலம் கண்டு
அரச படை
அடுக்கடுக்காய் புளுகித்தள்ளுயது
அரசாங்க அமைச்சர்கள் வெற்றி முழக்கமிட்டு
அழகிய விடுதிகளில் குடியும் கூத்தும் கும்மாளமும்
அம்மையார் சந்திரிக்கா
அங்கிள் ரத்வத்தைக்கு வீரவாள் பரிசளிப்பு...!
ஆனால் அகதிகள் அவலம் கண்டு
அகிலம் அதிர்ந்தது
அவசர அறிவிப்புடன்
அன்பர் பூற்றோஸ் பூற்றோஸ் காலி...!
அவசரமாய் உதவி கேட்டது ஐநா
அமைச்சன் கதிர்காமனோ
அங்கொன்றும் தேவையில்லை
அருகிருக்கும் கிரில்லப்பனை கால்வாய் வாசிகளுக்கு
அவசர மலேரியா மருந்து கொண்டு வாரும்
அப்படி ஒரு அறிக்கைவிட்டான்...!
ஆணவத்தின் உச்சியில் அசோகச்சக்கரம்
அரக்கி முகம் சந்திரிக்கா
அடங்காமல் இட்டாள் எக்காளம்...!
அடங்கியே போயினர் எம்மக்கள்
அந்த நாள் எம் வாழ்நாளில்
அருவருப்பாய் அல்ல....
அழியாத தடம் பதித்த நாள்
ஆம் எம் விடுதலையின்
அவசர தேவையின்
அவசரம் சொன்ன நாள்...!
ஆக்கிரமிப்பாளனிடமிருந்து
அழகிய தாய் மண்ணிற்கு தேவை விடுதலை
ஆண்ட பரம்பரை தன் மண்ணை தானே ஆள....!
அதற்காய் ஆன்மா உள்ளவரை
ஆகியது செய்வோம்
அன்றே உறுதி கொண்டோம்
அறுதியும் இறுதியுமாய்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் குருவி அண்ணா..நன்றி
[b][size=18]
Reply
#7
நன்றி கவிதன்...உள்ளம் கொண்ட வரலாற்றுப் பதிவை வரியில் தந்திருக்கு....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
கொடுரத்தை அப்படியே அழகாய் கவி வடித்த குருவிகளிற்கு வாழ்த்துக்கள்...!


சொல்லவே இல்லை அங்கிள் என்டு...??
Quote:அங்கிள் ரத்வத்தைக்கு வீரவாள் பரிசளிப்பு...!

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
விழுந்த வரிகளின் கருத்தை அநுபவத்தால் ரசித்த உங்களுக்கு நன்றிகள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சொன்னா.. நீங்க மண்டையில போட்டிற மாட்டீங்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
அண்ணா அ... அ.. அ.. அ.. அசத்திட்டீங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#11
நன்றி தங்கையே உங்கள் அசத்தலுக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சொன்னா.. நீங்க மண்டையில போட்டிற மாட்டீங்க....!  
_________________<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நம்மைப்பற்றி இப்படி தப்பா நினைக்கிறீங்கள்.. போடுறதா எங்க வேலை...???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
சும்மா பகிடிக்கு... சரியா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)