10-27-2004, 05:53 AM
<span style='color:red'>கருணாவிற்கு முன்னாள் போராளியின் கடிதம்</span>
<b> உங்களின் கீழிருந்து வளர்ந்து வருவதாகக் கனவுகண்டு படுகுழிக்குள் வீழ்ந்திருக்கும் முன்னாள் போராளி எழுதுவது,</b>
நான் இப்போது தாயகத்தில் இல்லை. ஆனால் உங்களை நம்பி போராட்ட வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட பலர் இன்று தாயகத்தில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அல்லாடிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். அவர்களை விட என் வாழ்க்கை கடினமானதல்ல. உங்கள் வழிகாட்டலை நம்பி தேசியத் தலைமையைப் பற்றிய உங்கள் விமரிசனங்களை நம்பி நாங்கள் ஏமாந்து விட்டதால் எங்களால் மீண்டும் எங்கள் போராளிச் சகோதரர்களின் முகத்தில் விழிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மட்டு. அம்பாறை மாவட்டத்தில் இருக்க முடியாமல் வெளிநாடொன்றில் வாழ்கிறேன். தாய் நாட்டிற்கும் என்னோடிருந்து போராடி, என் பயிற்சியிலும் வழிகாட்டலிலும் களமிறங்கி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கிறேன். துரோகியின் வழிகாட்டலில் தவறு செய்தவனின் பிள்ளை என்று என் அடுத்த தலைமுறை அவமானப்படக் கூடாது என்பதற்காகவும், தக்க தருணத்தில் என் பிள்ளைகளாவது தாய்நாட்டிற்கான முழுச்சேவையைச் செய்யும் பேறு பெற்றிட வேண்டும் என்பதற்காகவுமே இந்த அஞ்ஞாத வாசம்.
அது நிற்க, இப்போது விடயத்திற்கு வருவோம். நீங்கள் கட்சியொன்றை ஆரம்பித்திருப்பதாகத் தகவல். அரசியல்வாதிகளைப் பற்றிய உங்கள் மட்டரகமான விமரிசனங்கள் நமது படையணியில் மிகவும் பிரசித்தம். அதுவும் குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றிய உங்களின் பிரசித்தமான 'அந்த" விமர்சனத்தை நானும் பலரிடம் சொல்லியிருக்கிறேன். இப்போது நீங்கள் அதே டக்ளசோடு அரசியல் பாணி வேட்டி சட்டை அணிந்து மாலை போட்டு வரும்போது நான் முன்னே வந்து அந்த வசனத்தை ஞாபகப்படுத்தினால் உங்கள் முகம் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். வேதனையை மீறி கொஞ்ச நேரம் வயிறுகுலுங்கச் சிரிக்க முடிந்தது.
அரசியல் என்பது உங்களைப் பொறுத்தளவில் ஒரு வியாபாரம். அங்கே வசனங்களை விற்று வாழ்க்கையை நடத்தலாம் என்பது உங்களின் நப்பாசை. அதுவும் நீங்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் பரந்தன் ராஜனும் சும்மா லேசுப்பட்ட ஆள் இல்லை. மாடு கடத்தி விற்றவர், ஆனந்தசங்கரியோடு சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரை எழுபதுகளின் நடுப்பகுதியில் சுட்டுக்கொன்றவர். சகோதரியின் கணவரையே காசுத் தகராறில் சீவி எறிந்தவர் என்று அவருக்கும் ஏகப்பட்ட விருதுகள். அவரின் தம்பியே உங்கள் கட்சியின் 'செயலாளர் நாயகமாக" இருப்பது உங்களுக்கு மிகப்பெரும் பேறு. சபாஷ்! பலே! சரியான கூட்டணி என்று கூவவேண்டும் போல் இருக்கிறது.
தவிர பரந்தன் ராஜனுக்கு ஊட்டியிலே ஏகப்பட்ட அசையாச் சொத்துக்கள் இருப்பதாகப் பேசிக்ககொள்கிறார்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு அந்தப்பக்கம் 'உல்லாசப்பயணம்" போகும் நோக்கமும் இருக்கலாம். எதற்கும் பார்த்து நடவுங்கள் அம்மான்.
இப்போது உங்களைப் பீடித்திருக்கும் நோய்க்கு என்ன மருந்து தேவை என்பது யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் நோயாளி என்பதில் எனக்குக் கிஞ்சித்தேனும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அந்த நாட்களில் நாங்கள் பார்த்த கருணா வேறு. இப்போது அறிக்கைகள் மூலமும் கட்சியமைத்துக் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஆட்களின் மூலமும் வெளிப்படும் கருணா வேறு. முன்பொரு நாள் முல்;லைத்தீவுக் கடற்பரப்பில் ஏழு கடற்கலங்களின் அணிவகுப்பில் நீங்கள் பயணிக்கிறீர்கள். உங்கள் பயணத்திற்குக் காவலாக இரண்டு கரும்புலிப் படகுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கரும்புலி வீரர்கள் மட்டும் அன்று தங்களின் உயிர்களைத் தாரை வார்த்திருக்கா விட்டால் இன்று இந்த மண்ணில் ஒரு துரோகியின் எண்ணிக்கை குறைந்திருக்கும். அன்று தப்பிவந்த நீங்கள் கரையை அடைந்ததும் சொன்ன வாக்கியத்தை என்னால் மறக்க முடியவில்லை. 'இன்று இந்தப் பயணத்தில் வந்த எவரும் உயிருள்ளவரை தமிழீழ இலட்சியத்திற்காக போராட வேண்டும்" என்பதே அந்த வசனம். அதைக் கேட்டிருந்த பலர் இன்று மாவீரராகி விட்டார்கள். ஆனால் அதைச் சொன்ன நீங்கள் இன்று உயிரோடிருந்து தமிழீழத்திற்கு மாபெரும் துரோகம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அன்று அந்தத் தியாகத்தைச் செய்தவர்களி;ல் ஒருவர் வாழைச்சேனையைச் சேர்ந்த கண்ணாளன். மற்றவர் நகுலன். வடபகுதியைச் சேர்ந்தவர். பிற்பட்ட நாட்களில் வட தமிழீழம் பற்றி வாய் கிழியப் பிரதேசவாதம் பேசித்திரிந்த போது அந்தத் தியாக நிமிடத்தை ஒரு பொழுதாவது சிந்தித்திருந்தீர்களா? அல்லது உங்களுக்குப் பிடித்த நோயின் காரணமாக அப்போதே அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா?
மட்டக்களப்பிலிருந்து விரட்டியடிக்கப்படும் முன்னான நாற்பத்தியொரு நாட்களில் நீங்கள் கக்கிய பிரதேசவாத விஷத்தையும் வடபகுதித் தமிழர்களைக் விரட்டுவோம் என்ற நிலைப்பாட்டையும் இப்போது திடீரென்று கைவிட்டு விட்டீர்கள். பெரிய நாயைக் கண்டதும் வாலைச் சுருட்டிக்கொண்டு மூலைக்குப் போகும் சிறிய நாயின் நிலைப்பாட்டை அங்கே காண்கிறேன்.
உங்கள் கட்டளையில் பல நு}று போராளிகள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களின் முகங்களில் கரிபூசியதைப் போல் போராளிகளைக் கொன்ற சிங்களப் படைகளின் கொல்லைப்புறத்தில் குறுகிக் கிடக்கிறீர்கள். உங்களின் உணர்வுகள் கூடக் காயடிக்கப்பட்டே இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. இல்லாவிட்டால் மட்டக்களப்பில் எண்ணிலடங்காத மௌனப் புதைகுழிகளை விதைத்த சிங்களக் கரங்களிடம் சோற்றுப்பிச்சை கேட்பீர்களா?
இன்று வெளியிலே தலை காட்ட முடியாத தலைவருடனும் இந்தியாவில் தஞ்சம் புகுந்து கிடக்கும் செயலருடனும் தோன்றிய ஒரு கட்சிதான் தமிழருக்கு விடிவு தேடித்தரும் என்று உலகத்தை நம்பச் சொல்கிறீர்கள். புதிதாகப் பிறக்கும் துரோகிகள் முந்திய துரோகிகளை விட பெரிதாக ஏதாவது செய்து தங்கள் எஜமானர்களின் அபிமானத்தைப் பெற விரும்புவார்கள். அந்த இயல்பான உளவியல் உங்களிடமும் வெளிப்படுவது ஆச்சரியமில்லை. நீங்களும் என்னதான் செய்வீர்கள்! போட்டிருப்பது நாய் வேஷம் அல்லவா? குரைக்காது இருந்தால் விடுவார்களா? உங்கள் பார்வையைச் சூழ்ந்திருக்கும் மாயையை விலக்கிவிட்டுப் பாருங்கள் அம்மான், உங்களின் நிருவாணம் புரியும். பல உளவியல் உண்மைகள் விளங்கும். அடங்காத மனைவியை அடக்கமுடியாத ஆற்றாமையை நீங்கள் சுய பச்சாத்தாபமாகப் பார்த்து ஏமாந்தது விளங்கும். அதனால் நீங்கள் பட்டமிழந்து பதவியிழந்து உலகின் முன் ஈனப்பயலாகி இழிந்து நிற்பது தெளிவாகும்.
தமிழீழத்தின் பெரிய தளபதியொருவர் தங்கள்வசம் இருப்பதாக சிங்களப்படை எண்ணக்கூடும். ஆனால், பின்புறம் எதிரி இருக்கும் நிலையில் அந்தத் தளபதி ஒருபோதும் களத்தில் கால் வைத்ததில்லை என்பது எனக்கல்லவா தெரியும்? முன்னுக்கும் பின்னுக்கும் எதிரி இருக்கத்தக்கதாக நீங்கள் ஒரு சண்டையாவது பிடித்திருக்கிறீர்களா என்பதை அப்போது ஒருவரும் யோசித்துப் பார்த்ததில்லை. நான் யோசித்தேன். மற்றத் தளபதிகளுக்கும் உங்களுக்கும் அதுதான் பெரிய வித்தியாசம். சண்டையில் காயப்படாத எந்தத் தளபதியையாவது இந்த இயக்கத்தில் காட்டமுடியுமா? ஆனால் அதற்கு விதிவிலக்காக இருந்த அந்த ஒரேயொரு அற்புத மனிதர் தாங்கள்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். கேவலம் கம்பி றோல் கீறிய தழும்பாவது... என்ன சங்கடமான இடமொன்றில் கைவைத்து விட்டேனா? அப்போது சொல்லத் துணியவில்;லை. இப்போது சொல்கிறேன். தமிழீழத் தளபதிகளில் மிகப்பெரி;தாகப் பேசப்பட்டவரும் மிகப்பயந்தவரும் நீங்கள்தான். உங்களோடு நின்ற எவராவது இதை வாசித்தால் இந்த உண்மை அவர்கள் மனதில் சட்டென்று உறைக்கும்.
துரோகம் என்பது தமிழனுக்கும் புதிதல்ல. ஆனால் அதையே வாழ்க்கை முறையாகக் கொண்டு துரோகத்தை நியாயப்படுத்தும் அரசியலில் ஈடுபடும் தமிழர்கள் இலங்கையில் மட்டுமே உண்டு. அதில் பட்டறிவு பெற்ற பலர் உங்களுக்கு பால பாடம் சொல்லித் தந்திருப்பார்கள். நீங்களும் கெட்டிக்காரன் தானே. சுலபமாகக் கற்றுவிட்டீர்கள். ஒரு கையில் ஒலிவாங்கியையும் மறுகையில் கொலை வாளுமாகக் களத்தில் இறங்கி விட்டீர்கள். நீங்கள் எதைப் பேசினாலும், எதைச் சேர்த்து வைத்தாலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைத்திருப்பது துரோகியின் பிள்ளை என்ற சொத்தை மட்டும்தான். தமிழர் வாழும் எந்த இடத்திலும் நாளைய உணவிற்கு நாதியற்ற பிள்ளைக்கு இருக்கும் கௌரவம் கூட உங்கள் பிள்ளைக்கு மட்டுமல்ல, சந்ததிக்கே இருக்கப் போவதில்லை. தங்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக உங்கள் பிள்ளைகள் உங்கள் பெயரை முன்னெழுத்தாகப் போடாது விடும் காலம் து}ரத்தில் இல்லை. அந்தப் பிள்ளைகளைத் து}க்கித் திரிந்தவன் என்ற வகையில் அவர்களுக்கு என் அனுதாபங்கள்.
உங்களால் உங்கள் குடும்பம் பெற்றதுதான் என்ன? உங்கள் அண்ணனையும் சுயமுடிவு எடுக்கவிடாது துரோகியாக்கி விட்டீர்கள். உங்களின் அண்மைக்கால அறிக்கையிலும் நடத்தையிலும் கூட முதிர்ச்சியைக் காணமுடியவில்லை. நீங்கள் அமைக்கும் வியூகங்கள் உங்களையே இடறிவிடக் கூடியதாகவே இருக்கின்றன. உங்களோடு சேர்ந்துள்ளவர்கள் அன்றாட வியாபாரிகளின் தன்மையுடையவர்கள். நீங்களோ நீண்ட காலத்திற்கு இருக்கலாம் என்ற விதத்தில் அறிக்கை விடுகிறீர்கள். அந்த அறிக்கைகளில் அவலத்தின் ஓலமும் மரண பயத்தின்; நடுக்கமும் இருப்பது உங்களோடு நெருங்கிப் பழகிய எனக்குக் கேட்காமல் போகவில்லை. மொத்தத்தில் பயன்படுத்தப்படுகிறீர்கள், பரிதாபகரமான முறையில். தற்போது நீங்கள் நடத்திவரும் கொலைகளில் நீங்கள் எதிர்பார்க்கும் இலாபம் உங்களுக்குக் கிடைக்கும் என்றும் நான் நம்பவில்லை. உங்களின் ஆட்களை நீங்கள் அதற்குப் பயன்படுத்தினாலும் நீங்கள் சேர்ந்துள்ள அணியில் இருக்கும் வேறு சிலருக்கே அதனால் அதிக நன்மைகள். உதாரணமாக நமது பற்பொடிக் கொம்பனிக் கொலை வீடுகள் து}சு தட்டப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அங்கிருந்து வெளியே வரும் எவரையும் எதனையும் மட்டக்களப்பு வாசிகள் எப்படிப் பார்ப்பார்கள் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அதற்குள் கால் வைக்கிறீர்கள் என்றால் நீங்கள் எங்கோ போய்விட்டீர்கள் என்று பொருள்.
சரியம்மான். உங்கள் அடுத்த நகர்வுகளைப் பார்த்து அடுத்த மடலை எழுதுகிறேன். அதுவரை நீங்கள் நலமாயிருந்தால்தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்.
<b>-அருகிலிருந்தவன் (The man who was nearby)</b>
நன்றி தமிழ்நாதம்