11-13-2004, 02:47 AM
<b>ஈ.பி.டி.பி முகாமில் இருந்தே செயற்படுகிறோம் : கருணா குழு உறுப்பினர் </b>
நேற்றைய தினம் இரண்டு பொதுமக்கள் மீது கிளைமோர் மற்றும் கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட அர்ச்சுனன் விஐயகுமார் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போது, மேற்படி நபரை 14 நாட்களிற்கு விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்டப் பதில்நீதிபதி திரு. டி.சி. சின்னையா இன்று உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் களுவாங்கேணிச் சந்தியில் வைத்து துரைராஐh விமலேந்திரன், நல்லதம்பி பேரின்பராஐh ஆகிய இரு பொதுமக்கள் மீது கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதும், அது அவர்கள் அவ்விடத்தைக் கடந்ததுமே வெடித்ததால் அவர்கள் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் மேற்படி இருவரும் அதிர்ஷ்டவசமாக இவ்விரு தாக்குதல்களிலிருந்தும் தப்பியதையடுத்து, இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றி மேற்படி நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வேளையில், இந்தக் கிளைமோர்த் தாக்குதல் மற்றும் கைக்குண்டுத் தாக்குதல் குறித்த தகவலும், அதனை நடத்திய நபர் ஏறாவூர்ப் பக்கமாகத் தப்பிசெல்வது குறித்த தகவலையும் பொலிசாருக்கு பொதுமக்கள் உடனடியாகவே தெரிவித்ததையடுத்து மேற்படி நபர் பொலிசாரால் ஏறாவூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், தான் கருணா குழுவைச் சேர்ந்தவர் என்றும் தாங்கள் செங்கலடியிலுள்ள ஈ.பி.டி.பி. முகாமிலிருந்து செயற்படுவதாகவும் தெரிவித்ததாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு.தர்மசேனா ரத்னாயக்கே நீதிபதியிடம் தெரிவித்தார்.
இது பற்றி பொலிசார் கருத்துத் தெரிவிக்கையில், மேற்படி நபர் தான் இவ்வாறு இயங்குவதற்கான வசதிகளை ஈ.பி.டி.பி.யே ஏற்படுத்தித் தந்துள்ளதாகவும், தான் செங்கலடியிலமைந்துள்ள ஈ.பி.டி.பி. முகாமிலேயே வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் எனவும், மேற்படி நபருக்கு எவ்வாறு கிளைமோர்க் குண்டு மற்றும் கைக்குண்டு கிடைத்தன என்பது பற்றி தாம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அத்தோடு, மேற்படி நபர் செங்கலடி ஈ.பி.டி.பி முகாமில் அடிக்கடி காணப்படுவதால் ஈ.பி.டி.பி உறுப்பினராக இருக்கலாம் என தாம் முதலில் சந்தேகம் கொண்டதாகவும், ஆனால் தாம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரனையின் படி கொலக்கன்னா வெளியைச் சேர்ந்த அருச்சுனன விஜயகுமார் என்ற இந்த 25 வயது நபர் கருணா குழுவைச் சேர்ந்தவர் என்பதும் ஈ.பி.டி.பி. ஆதரவுடன் செயற்படுபவர் என்பதும் தெரியவந்ததாகத் தெரிவிததனர்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:evil: