Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நம்மவர்களும் பலி?
#1
இன்றைய செய்தி:
Quote:வான் கரும்புலிகள் குறித்து
புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை
அரசு, பாதுகாப்பு வட்டாரங்களில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்
|வான் கரும்புலிகள்| என்ற புதிய பிரிவைப் புலிகள் தோற்று வித்துப் பயிற்சி கொடுத்துவருகின்றார்கள்.
- இப்படி புலனாய்வுத்துறை அரசுக்கு எச்சரிக்கை செய்திருக் கின்றது.
இந்த எச்சரிக்கை அரசு மற்றும் பாதுகாப்பு உயர் வட்டாரங் களில் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பிவிட்டிருப்பதாகக் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டிருக் கின்றது.
தாம் இப்போது புதிதாக தோற்றுவித்திருக் கும் ஷவான் கரும்புலி|களுக்குப் புலிகள் வன்னிக் காட்டில் எங்கோ ஓரிடத்தில் பயிற்சி கொடுத்து வருகின்றார்கள்.
புலிகள் இயக்கத்தில் கடற்கரும்புலிகள், தரைக்கரும்புலிகள் போன்று வான் கரும்புலி களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் புதிதாகச் சுவீகரித்துக் கொண்டிருக்கும் ஷமைக்ரோ| விமானங்கள் மூலம் இந்த வான் கரும்புலிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஆகக்குறைந்தது இத்தகைய மூன்று வான் கலங்களைப் புலிகள் சுவீகரித்துள்ளனர் என முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன என் பது குறிப்பிடத்தக்கது.
மண் மற்றும் மாதிரிகளை இலக்குவைத்து இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன. அதை நோக் கும்போது கொழும்பில் கேந்திர நிலைகளை அல்லது மிக முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து இப்பயிற்சிகள் நடக்கக்கூடும் எனக் கருதமுடிகின்றது.
இந்த வகையில், முக்கிய அரசியல் தலை வர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உட்படப் பல
ரும் இலக்குவைக்கப்படலாம்.
இந்தவகைத் தாக்குதலின்போது கரும்புலி கள், தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி களை அணிந்திருப்பது மட்டுமல்லாமல் ஷமைக்ரோ| வான்கலம் நிறைய வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டுவந்து இலக்குகளை இலக்குவைத்து மோத முயலக்கூடும்.
பொதுக்கூட்டம் ஒன்றில் முக்கிய பிரமுகர் ஒருவர் உரையாற்றிக்கொண்டிருக்கையில் அவ ரது மேடையை இலக்குவைத்து வெடிகுண்டு கள் நிரப்பிய ஷமைக்ரோ| விமானத்தைச் செலுத்தி அதை மேடையுடன் மோதவைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்தும் பயிற்சியளிக் கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
- இவ்வாறு புலனாய்வு வட்டாரங்கள் அரச மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளை எச்சரித் துள்ளன என்றும் -
அரச, பாதுகாப்பு வட்டாரங்களில் இந்த எச்சரிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் -
கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றில் இராணுவ ஆய்வாளர் ஒருவர் வரையும் பத்தி யில் தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் தற்போதைய யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி வெளிநாடு களில் தமது போராளிகளுக்கு விமானப் பயிற்சி களை வழங்கி வருகின்றனர் என வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன. .

இச்செய்தியானது இலங்கை இராணுவ, அரசியல் புனாய்வுப் பிரிவினரினால் விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்த மிக திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கையாகும். ஏற்கனவே உலகில் இன்று நடந்துவரும் தாக்குதல் சம்பவங்களில் தற்கொலைத் தாக்குதல்களே பாரிய சேதங்களை மட்டுமல்ல, அதற்கெதிரான செய்திகளை, விமர்சனங்களையே சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகிண்றன. மற்றும் தற்கொலைத் தாக்குதல்கலை நடாத்தும் போராட்ட இயக்கங்களை வல்லரசுகள் பயங்கரவாத சிகப்பு முத்திரையிட்டு வருகிண்றன. இன்று உலகின் மாற்றங்களை தமக்கு ஆதரவாக மாற்ற முற்படும் இலங்கை அரச, இராணுவ இயந்திரத்தின் சதிவலையில் நம் தமிழ்த் தேசிய ஆதரவு ஊடகங்களும் தாக்கம் உணராமல் வீழ்ந்து விடுகிண்றன.

இன்று இச்செய்திக்கு அனைத்து இலங்கையில்ருந்து வரும் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அதை விட ரி.ரி.என். ஐ.பி.சி போன்ற தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படும் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இப்படியான உண்மைக்கு மாறான, தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்தும் இது போன்ற செய்திகளை முதன்மைப் படுத்துவதை தவிர்த்து இவற்றின் பொய்மைத் தன்மைகளை வெளிக்கொணரப்பட வேண்டும்.
" "
Reply
#2
சிறிலங்கா புனாய்வு வரலாற்றின் படி இராணுவப் புலனாயவுப்பிரிவு (Military Intelligence Corps? MIC) 90 ஆண்டளவில் உருவாக்கப்பட்டது. இது படிப்படியாக புலனாய்வுப் பணிகளை விருத்தி செய்து காலக்கிரமத்தில் புதிய உத்வேகம் பெற்றுள்ளது.
இந்தப் பிரிவு பாதுகாப்புக்குழு, விசாரணைக்குழு, இலத்திரனியல் குழு, புகைப்படக்குழு. நடவடிக்கைக்குழு, முறியடிப்புக்குழு, வேவுவிமானங்கள் மூலம் எடுக்கப்படுகின்ற புகைப்படங்களை பகுப்பாய்வு செய்யும் குழு போன்ற அடுக்குகளை தன்னகத்தே கொண்டு இயங்குகின்றது.

எம்.ஐ.சியின் பணிப்பாளராக கடமையாற்றிய பிரிகேடியர் கபில ஹெந்த விதாரணை தற்போது மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு பெற்று பணிப்பாளர் நாயகம் என்கின்ற புதிய பதவிக்கு நியமனமாகியுள்ளார். (Director General Military Intelligence - DGMI)

இவர் இனிவரும் காலங்களில் கூட்டுப்படை நடவடிக்கைத் தலைமையகத்துடன் (JOH) இணைந்து இயங்குவார். அதாவது கடற்படை, விமானப்படை, இராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் புலானாய்வுப் பிரிவுகளை ஒருங்கிணைத்து செயலாற்றும் அதிகாரமுடையவராக இயங்குவார்.

வவுனியா யோசேப் இராணுவ முகாம், மன்னார் தள்ளாடி இராணுவ முகாம், திருமலை பிளாண்டன் பொயின்ட் இராணுவ முகாம், யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாம், மட்டக்களப்பு வாவி வீதியிலுள்ள முகாம், கொழும்பு முத்தையா வீதியிலுள்ள அமைந்துள்ள தலைமையகம் ஆகியன அதன் பணிகளை முன்னெடுத்து வழிநடத்தும் மையங்களாக இயங்குகின்றன.

இங்கு பணியாற்றுகின்ற அதிகாரிகள், புலனாய்வாளர்கள் அனைவரது மூளைகளும் சுறு சுறுப்பாக இயங்கி புலனாய்வுத் தந்திரங்களை, உத்திகளை, மற்றும் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதாவது தமிழர்களிடத்தில் காணப்படுகின்ற சகலவகையான முரண்பாடுகளையும் எவ்வாறு பயன்படுத்தி தமிழ் தேசிய ஒருமைப்பாட்டை அழித்துவிடலாம் என்பதில் அந்த மூளைகள் சளைக்காது சிந்திக்கின்றன. அதற்கு அப்பாலும் அவர்கள் உலக புலனாய்வு நிபுணத்துவம் வாய்ந்த மூளைகளின் உதவிகளையும் பெற்று வருகின்றன.

இவ்வாறாக தமிழர் உரிமைப்போருக்கு எதிராக புலனாய்வு யுத்த வியூகங்களை ஒரு புறம் ஒரு புறம் வகுத்துக் கொண்டு, மறுபுறம் தமிழர் உணர்வுகளில் ஆழமாக ஊடுருவி அவர்களின் சிந்தனையில் குழப்பங்களை ஏற்படுத்தும் பிரசார யுத்ததத்தையும் முன்னெடுத்துள்ளது. அதாவது சூழ்சிப்பொறிகளை தமிழர்களுக்குள் விதைக்கும் விதைகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பதில் அவர்களின் மூளைகள் தொழிற்படுகின்றன.

எம்.ஐ.சி யினரைப் பொறுத்தவரை புலிகளுக்கு எதிராக இயங்கும் தமிழ் விரோதக் குழுக்களையும் புலிகள் இயக்கத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டவர்களையும் தமிழர் மற்றும் முஸ்லிம் பொதுமக்களையும் தங்கள் புலனாய்வு வேலைகளுக்காக பல்வேறு பகுதிகளாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அவ்வாறானவர்களை எவ்வாறு கைக்கொண்டு பிரயோகித்து வருவது பற்றி சற்று நோக்குவோம்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் முழுமையாக இணைந்தியங்கும் புலனாய்வாளர்கள்.

புலிகள் நடவடிக்கைகள் பற்றிய இரகசியத் தகவல்களை அறிய புலிகளின் இரகசிய அடுக்குகளுள் ஊடுருவும் இரகசிய உளவாளிகள்.

புலிகளுடன் அல்லது அவர்களின் ஆதரவாளர்களுடன் நெருங்கிப்பழகியும் அவர்களை அவதானித்தம் தகவல்களை வழங்கும் தகவலாளர்கள்.

தயாகப் பகுதியினுள் ஆழ ஊடுருவித் தாக்குதல்களை மேற்கொள்ளும் விசேட இராணுவ அணிக்கு உதவிபுரியும் நடவடிக்கையாளர்கள்.

தமிழர் தாயகப் பகுதிகளில் ஆங்காங்கே குண்டுகளை வெடிக்கச் செய்தும், குண்டுகளை வீசி வெடிக்கச் செய்தும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவைக்கும் நாச வேலையாட்கள்.

தமிழர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவும் அவர்களின் சிந்தனையில் குழப்பங்களை உண்டுபண்ணவும் பொய்த் தகவல்களைச் காவிச்சென்று பரப்புவோர்கள்.

இப்படியானவர்களை எம்.ஐ.சியினர் தம் இரகசியப் பணிகளில் ஈடுபடுத்தி வரும் அதேசமயம், ஊடக வளங்களையும் இரு புலனாய்வு நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர். ஊடகங்களை தகவல்கள் பெறும் மூலங்களாக தினமும் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருவது ஒன்று. அது Open Source Intelligence என்கின்ற புலனாய்வு வடிவத்தினுள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக உண்மை உதாரணத்தை கவனிப்போம்.

தமிழ் விவகாரங்கள் தொடர்பாக உலகிற்கு தகவல்களை வழங்கி வரும் ?தமிழ் நெட் ( www.TamilNet.com )? கணணி தகவலகத்தை எம்.ஐ.சியினர் நாளாந்தம் ஆர்வத்துடன் அணுகுகின்றனர். இது போன்று அனைத்து ஊடக வளங்களையும் தமது புலனாய்வு நோக்கங்களுக்காக பிரயோகித்துக் கொள்கின்றனர்.

<b>மேலும் அரசின் பாதுகாப்பை எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருப்பதற்காக புலிகள் பற்றிய தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி பிரசாரப்படுத்துகின்றது</b>. இந்த உத்திக்கான உதாரணங்களை இங்கு பார்ப்போம்.

அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவில் புலிகளின் ஊளவாளிகள் என்கின்ற தலைப்பில் 06.11.2004 ஆம் திகதி தினக்குரல் செய்திகளை விபரித்திருந்தது.

இன்னொரு பத்திரிகையில் விடுதலைப்புலிகள் எதிர்கால நடவடிக்கைக்காக இராணுவ உபகரணங்கள் நவீன முறையில் தயாரிக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த ஆயுதங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தெரியவந்துள்ளதாக தகவல்களை வெளியிட்டிந்தது.

<b>மேலே எடுத்துச் சொல்லப்பட்ட இரு உபகரங்களும் அரசினது பாதுகாப்பு விடயங்களுக்கான விழிப்புணர்வு பிரசாங்களுக்கா பயன்படுத்தி வரும் புலனாய்வு நுட்பம் அப்படியே அபட்டமாக பிரதிபலிக்கின்றன. இது அரசையும், நாட்டுமக்களையும் எப்போது விழிப்பு நிலைக்குள் வைத்திருக்கும் உத்தியாக கையாளப்படுகின்றது</b>.

இது போன்ற புலனாய்வு தந்திரங்களை, உத்திகளை எம்.ஐ.சியினர் தொடர்ந்தும் கையாண்டு வருவதுடன், நவீன காலத்திற்கு ஏற்பவும் தமது புலானாய்வு வியூகங்களை அமைத்து புலனாய்வு அரங்கில் சாகசங்கள் அதிகம் கிழக்கில் நிகழ்த்தப்பட்டுவருகின்றன.


இராணுவப் புலனாய்வு பிரிவின் ஊடுருவல் தாக்குதல்கள், மனித வேட்டைகள், தடம் தொடர்தல் முரண்பாடுகளை கையாளுதல், பிரித்தாளும் தந்திரோபாயங்களை பிரயோகித்தல், இரகசிய புலனாய்வு பணிகளை மேற்கொள்ளுதல் என இது வரையிலும் பார்க்கப்பட்ட விடயங்கள் ஓரளவுதான். இதற்கு அப்பாலும் அதன் புலனாய்வு வீச்சின் எல்லை பரந்தது.


இராணுவப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா அரசினது புலனாய்வு பிரிவினுள் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பிரிவாக செயலாற்றி வருகின்றது. அது புலனாய்வு அரங்கை பலமான நிலையில் வைத்திருக்கும் புலனாய்வு நிலையில் வைத்திருக்கும் புலனாய்வு வியூகங்களை வகுப்பதிலேயே போதிய அக்கறையை செலுத்துகின்றது. ஆனாலும் பிஸ்டல் குழுவினர் எம்.ஐ.சியின் புலனாய்வு அரங்கை உலுப்பியெடுத்துவருகின்றனர்.

நன்றி
சூரியன் இணைய ஆக்கத்திலிருந்து.......
Reply
#3
இவை எதுவுமே புதிதல்ல... இதை விட எத்தனையோ உக்திகளை றோவும் இந்திய இராணுவப் புலனாய்வுத் துறையும் மொசாட்டும் அமெரிக்க மேற்குலக உளவுத்துறைகளும் பிரயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றன...இன்று சில தென்கிழக்காசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனன...

இதற்கெல்லாம் இந்தப் பார்வைதான் சரி....

<img src='http://kuruvikal.yarl.net/archives/tiger.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)