11-24-2004, 07:40 PM
பலாலி விமான நிலைய சீரமைப்பு
இலங்கை அரசுக்கு இந்தியா உதவக் கூடாது
யாழ்ப்பாண மாணவர் சங்கம் கோரிக்கை
கொழும்புஇ நவ.21-
"பலாலி விமான நிலை யத்தை சீரமைக்க இலங்கை அரசுக்கு இந்தியா உதவக் கூடாது" என்று யாழ்ப்பாண மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:_
உதவக் கூடாது
ஈழ தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை இலங்கை அரசு நசுக்க பார்க்கிறது. அந்த முயற் சிக்கு இந்தியா உதவி செய்யக் கூடாது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலி விமானப்படை தளத்தை சீரமைக்கவும்இ அதன் ஓடுதளத்தை பெரிதாக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு இந்தியாவிடம் இருந்து இலங்கை அரசு நிதி உதவி பெற முயற்சி செய்கிறது.
பலாலி விமானப்படை தளத்தின் அருகே பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வசித்து வந்தனர். ராணுவ நடவடிக்கையில் அவர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வசிக்கிறார்கள். அவர்களுடைய விவசாய நிலங்களும் பலாலி விமானதளம் அருகே உள்ளன.
பலாலி விமான தளத்தை விரிவுபடுத்தினால் அகதி முகாமில் உள்ள தமிழர்கள் தங்கள் வீடுகளை இழந்து விடுவார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அகதிகளாகத்தான் வாழ வேண்டும். எனவே பலாலி விமான தள திட்டத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்கக் கூடாது.
உறவு
இந்தியாவுக்கும் ஈழ தமிழர்களுக்கும் இடையே நிலவும் நல்லுறவைஇ இலங்கை அரசு தனது சுய லாபத்துக்காக கெடுக்க பார்க்கிறது. இலங்கையின் தவ றான வழிகாட்டுதலுக்கு இந்தியா ஆளாகி விட வேண்டாம்.
இந்தியாவுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையில் நிலவும் நூற்றாண்டு கால நட்புறவு நீடிக்க வேண்டும். ஈழ தமிழர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிப்பதுடன் அவர்களுடைய சட்டப்பூர்வ அரசியல் விருப்பங்கள் நிறைவேற இந்தியா உதவ வேண்டும்.
இவ்வாறு தங்கள் கடிதத்தில் யாழ்ப்பாண மாணவர் சங்கம் கூறியிருக்கிறது.