12-09-2004, 11:34 AM
20 வருடமாக உயிருக்கு போராட்டம்: மகனை கருணை கொலை செய்ய தாய் கெஞ்சல்: நீதிமன்றம்-ஆந்திர அரசு கைவிரிப்பு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகன் வெங்கடேஷ். இவருக்கு தற்போது 25 வயதாகிறது. வெங்கடேசுக்கு 6 வயதாக இருந்த போது மஸ்குலர் டிஸ்டோரிபி என்ற ஜீன்கள் தொடர்பான நோய் ஏற்பட்டது. இந்த நோயினால் வெங்கடேசின் உடலில் சதை வளர்ச்சி தடைபட்டது.
6 வயது முதல் 9 வயதுவரை ஓரளவு நடக்க முடிந்த வெங்கடேஷ் 9 வயது முதல் 11 வயது வரை நடக்க முடியாமல் அடிக்கடி கீழே விழுந்தார். 11 வயதுக்கு பிறகு அவர் படுத்த படுக்கையாகிவிட்டார்.
வெங்கடேசுக்கு மருத்துவ செலவு அதிகமாகவே அவரது தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். தாய் சுஜாதா மட்டும் மகனை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார்.
மகனுக்கு வீல்சேர் வாங்கி கொடுத்து சினிமாவுக்கு அழைத்து செல்வது, சுற்றுலா கூட்டி செல்வது என மகனை ஓரளவு திருப்திபடுத்தி வந்தார். அத்துடன் பி.காம். வரையும் படிக்க வைத்தார்.
இதற்கிடையே கடந்த 6 மாதத்துக்கு முன்பு வெங்கடேசின் உடல் நிலை மிகவும் மோசமாகிப்போனது. மூச்சு விடுவதற்கே கஷ்டப்பட்ட அவர் வெண்டிலேட்டர் மூலம் சுவாசித்து உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆயுர்வேதா, சித்தா என அனைத்து மருத்துவ முறைகளிலும் அவரை குணப்படுத்த முயற்சிகள் நடந்தன. ஆனால் அனைத்துமே தோல்விதான். இறுதியாக அவரை ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை குணபப்டுத்த முடியாத டாக்டர்கள் இன்னும் 6 மாதம்தான் என்று நாள் குறித்துவிட்டனர்.
இதற்கிடையே வெங்கடேஷ் தான் யாருக்கும் பயன்படா விட்டாலும் தன் உறுப்புகளா வது யாருக்காவது பயன்படட் டுமே என்ற முடிவுக்கு வந்தார். தனது ஆசையை நிறைவேற்ற தன்னை கருணை கொலை செய்ய ஏற்பாடு செய்யுமாறு தாயிடம் வேண்டினார். இது தொடர்பாக தன் கைப்பட ஒரு லட்டரையும் எழுதி வைத்துள்ளார்.
மகனின் வேண்டு கோளை கேட்ட சுஜாதா அதிர்ச்சி அடைந்தார். நாள்பட மகன் படும் அவதியை காண சகிக்காமல் மகனின் வேண்டுகோளை அவரும் ஏற்றுக் கொண்டார். வெங்கடேஷ் ஏற்கனவே தனது கண்களை ஒரு தொண்டு நிறுவனத்துக்கு தானமாக வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். கிட்னி உள்பட மற்ற உறுப்புகளையும் அவர் தானமாக வழங்க முன்வந்தார்.
இதைத் தொடர்ந்து ஆஸ் பத்திரி டாக்டர்களிடம் தனது மகனை கருணைக் கொலை செய்யுமாறு சுஜாதா கெஞ்சினார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சுஜாதா தனது மகனை கருணை கொலை செய்ய ஆந்திர அரசுக்கும் கோரிக்கை வைத்தார். ஆனால் ஆந்திர அரசும் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
இதைத் தொட்ர்ந்து சுஜாதா ஆந்திர மாநில ஐகோர்ட்டிலும் தனது மகனை கருணைக் கொலை செய்யுமாறு மனு போட்டார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகளே கொஞ்சம் பதட்டம் அடைந்தனர். வெங்கடேஷ் தற்போது பேச முடியாத நிலையில் இருப்பதால் அவர்தனது உறுப்புகளை தானமாக வழங்கிட எழுதிய கடிதத்தையும் காண்பித்தார்.
ஆனால் கருணைக் கொலை செய்ய முடியாது என்று கைவிரித்த நீதிபதிகள் தேவேந்தர் குப்தா, நாராயண ரெட்டி ஆகியோர் ஆந்திர மாநில மருத்துவத்துறைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில் இந்த நோயை குணப்படுத்த முயற்சி செய்யுமாறு கூறி இருந்தனர். நோயை குணப்படுத்த வழியில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.
கருணைக் கொலைக்கு சட்டத்தில் இடமில்லை என்று நீதிபதிகள் கைவிரிக்க, நோயை குணப்படுத்த மருத்துவத்துறையில் வழியில்லை என்று டாக்டர்களும் கை விரிக்க தற்போது வெங்கடேஷ் கோமா நிலையில்...
எனது மகன் இன்னும் சில நாளில் இறந்து விடுவான். எனவே அதற்குள் அவனை கருணை கொலை செய்து அவனது உறுப்புகளை பிற ருக்கு தானமாக கொடுங்கள். அவன் இறக்கும் வரை காத் திருந்தால் அவனது உறுப்புகள் கெட்டு யாருக்கும் பயன்படா மல் போய் அவனது ஆசை நிராசையாகி விடும் என்று சுஜாதா மீண்டும் மீண்டும் டாக்டர்களிடம் கெஞ்ச வெங்கடேஷ் வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
நன்றி மாலை மலர்

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->