Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
உயி÷ பல்வகைமை எனபடுவது ஒரு வரையறுக்கபட்ட பிரதேசத்தில் காணப்படும் தாவர,விலங்குகள், மற்றும் உயிரிகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும்
சூழலில் காணப்படும் ஒவ்வொரு அங்கியும் உயிா் வலையமைப்பின் ஒரு அங்கமாகும். பூமியில் காணப்படும் ஒவ்வொரு தாவர இனமும் உயிா் வாழ்கை சக்கரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறன. உயி÷ பல்வகைமையை பெணுவது உயிா் வலையமைப்பை பாதுகாப்பதற்கு அத்தியாவசியமாகும்
புதிதாக அறியபடும் இனங்களிலும் அழிக்கப்படும் உயிாிகள் அதிகம்
தொடரும் ....... :roll:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நாட்டு மா வருக்கங்களை காப்போம்
உயிர் பல்வகைமை எனும் பதத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள.; சாதாரணமாக சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட அலகு பரப்பில் காணப்படும் வேறுபட்ட அங்கிகளின் எண்ணிக்கை அல்லது வீச்சு எனலாம்.
இதை உதாரணம் முலம் பார்ப்போம்
ஒரு சிறிய பராமரிப்பற்ற காணியை எடுத்து கொள்ளுங்கள். அங்கு வேறுபட்ட புற்கள் கொடிகள் செடிகள் பல்வேறு மரங்கள் சிறு விலங்குகள் என காணப்படமுடியும்.
ஆனால் ஒரு தேயிலைப் பெருந்தோட்டத்தில் தேயிலையை தவிர பிற மரங்களை காணபது அரிது. அதாவது அங்கு உயிரியல் பல்வகைமை அரிது எனலாம்.
இப்பல்வகைமையானது குறிப்பிட்ட ஒரு இனத்துக்குள்ளும் காணப்படமுடியும். ஊதாரணமாக மனிதரிடையே ஆபிரிக்கர் தென்னாசியர் அரபியர் சீனர் என வேறுபடுவது போல்.
நாம் இங்கு இப்பத்தியில் எடுத்தாள விரும்புவது மா இனத்தில் காணப்படும் இன பல்வகைமை பற்றியும் அதன் அழிவுக்குள்ளாகிவரும் ஆதியான வருக்கங்கள் பற்றியுமாகும்.
நமக்கு தெரிந்த பயிர் செய்கையில் நாட்டப்படும் மா இனங்கள்
கறுத்த கொழும்பான்
வெள்ளைக் கொழும்பான்
விலாட்டு
அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு]
செம்பாட்டான்
சேலம்
பாண்டி
களைகட்டி
பச்சதின்னி
கொடி மா [ஊருக்கு புதியது தற்போது சில வீடுகளில் உண்டு சரியான பெயர் தெரியாது]
மத்தள காய்ச்சி [இதன் சரியான பெயர் தெரியாது நமது காணியில் இரண்டு நின்றது பெரிய காய் ஆனால் நார் அதிகம். இப்போது இரண்டும் தறித்தாகிவிட்டது.]
இவற்றை விட நாட்டு மா என சொல்லப்படும் புளி மாக்கள் பல உண்டு
நாம் சிறுவனாய் இருந்த காலத்தில் ஆறுக்கு மேற் பட்ட புளி மாக்கள் நமது காணியில் நின்றன.
அவற்றிற்கு நாம் வழங்கிய பெயர்கள்
வட்டக்காய்ச்சி
கட்டை மா
கறி மா இதன் காய் தனியே மாங்காயில் கறிவைக்க நல்ல ருசி
பெயரிடாத ஏனையவை 3.
தற்போது எஞ்சியுள்ளது மூன்று மட்டுமே.
இதே போல நம்மூரில் பலரது காணிகளில் பல தனித்துவமான நாட்டு புளி மாக்கள் இருந்தன.
இப்போது பார்த்தல் ஊரில் விரல்விட்டு எண்ணக்கூடிய புளி மாக்களைத்தான் காணலாம்.
புளிமாக்களின் காய்கள் கறிக்கும் சொதிக்கும் போடுவதோடு சரி. ஆனால் அவற்றின் விதைகளில் இருந்து பெறப்படும் நாற்றுக்கள் நல்ல வருக்கங்களை ஒட்டுவதற்கு ஒட்டுகட்டைகளாக பயன்படுத்துவார்கள். அதைவிட பெரிதாக பொருளாதார முக்கியத்துவம் அற்றிருப்பினும் உயிரியல் ரீதியில் முக்கியமானவை. அவை சூழலுக்கு வார்த்தகரீதியான வருக்கங்களிலும் அதிக இயைபாக்கமுடையவை. அவற்றின் இயலபுகள் பற்றி எவ்வித ஆர்வமும் எடுக்கப்படுவதில்லை. அவை காலப்போக்கில் முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்பதில் பெரிதாக ஐயமில்லை. அவை அழிக்கப்படுவதனால் உயிர்சூழலில் மீளப்பெறமுடியாத வகையில் பாரம்பரை [ஜீன்கள் ]அலகுகள் இழக்கப்படுகிறன.
அவற்றை பேண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் தனியாருடைய காணியில் அவற்றை பேணுவது கடினம். [வட்டக்கச்சியில் விவசாய கண்கட்சி நடந்த பண்ணை யில் என நினைக்கிறேன் ]நல்லின மாக்களுக்கு ஒட்டு கிளைகள் பெறுவதற்கு ஒரு பண்ணை போல, நாட்டு மாவருக்கங்களை பேணுவதற்கும் ஒரு பண்ணை அமைத்து தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் நாட்டு மா வருக்கங்களை பேணவேண்டும்.இதை முளைய முதலுரு பாதுகாப்பு என்பர் [Germplasm conservation].
அதே போல பல தாவர இனங்கள் அருகிவருகிறன. அவற்றை அடையாளங்கண்டு பேணமுயற்சிப்பது அவசியம்.
நாம சின்ன பையனா இருந்த போது நறுவிலி இதன் பழத்தை சாப்பிட்டால் சொண்டு ஒட்டும் அத்துடன் அதிக தாகமெடுக்கும். ஊரில் ஓருமரம் இருந்தது தற்போது இருக்கோ இல்லையோ. அதே போல கருநாவல் என்று பிஞ்சில் சிவப்பாக தண்ணி பிடிப்பான விதையுடனும் இருக்கும். பழம் நாவல் பழ நிறத்தில் தடித்த விதையுடன் கணப்படும் அரிவரி முடிஞ்சு வரேக்கை அதை பிடுங்கி சாப்பிட அடிபாடு வரும் இப்ப அந்த மரத்தை காணகிடைப்பதில்ல.
ஆகவே நம்ம நாட்டில இருக்கிற தாவர வருக்கங்களை பேண நடவடிக்கை எடுப்பது அத்தியவசியமானது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் ம் தொடருங்கோ
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
இதில ஏதாவது மாவ தெரியுமோ............. :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தெரியாததை தெரிந்து கொள்த்தானே போடுறியள்.. தெரிந்தவை தான் படிக்கனுமா என்ன..?? :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
ஏன் உங்கடை மீசாலையோ அல்லது அதுக்கு பக்கத்தில இருக்கிறதா சொன்ன அந்த கற்பனை ஊரில இல்லயோ.............. :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தம்பியாருக்கு என்ன பிரச்சனை நம்ம ஊரை களம் எல்லாம் கொண்டு திரியிற மாதிரியிருக்கு.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
பொதுவா உங்களை கேட்டம் நாம ஏதாவது மா மரத்திண்ட பேர தெரியுமோ எண்டு. ஏதாவது பேர தப்ப விட்டிட்டமோ எண்டொரு பயத்தில. அதான் நீங்க மீசாலைக்கு கிட்ட எண்டு சொன்ன மாதிரி கிடந்தது. அதான் உங்களுக்கு தெரியாதெண்டு கதை விட்டீங்க அப்பிடி கேட்டாலவது தப்பவிட்டத சொல்லுவியளெண்டு பாத்தா லூசு மாதிரி சிரிக்கிறீங்க........ :evil: :evil:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
தெரியலை.....இப்படி இதில் பெயர் சுட்டாதவற்றை யாராவது சொல்லலாமே........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>