Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
சற்று நேரத்திற்கு முன்னர் BBC Worlservice "Asia Today" டிவி செய்தியில் தினேஸ ராஜரட்ணமும் அவரது பங்களாதேஸ் கூட்டாளியும் விடுதலையான செய்தியை உறுதிப்படுத்தியதோடு அவர்கள் இருவரினதும் விடுதலையான பின்னர் எடுக்கப்பட்ட வீடியோ படங்களையும் காண்பித்ததார்கள்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஈராக்கில் சிறைப்பிடிக்கப்பட்ட
இலங்கைத் தமிழர் தினேஷ் விடுதலை
ஒரு மாதத்துக்கு மேலாக பணயக் கைதியாக இருந்தவர்
கொழும்பு, டிச. 11_
ஈராக்கில் சிறைப்பிடிக்கப் பட்ட இலங்கைத் தமிழர் தினேஷ் ராஜரத்தினம் விடு தலை செய்யப்பட்டார். அவர் இப்போது ஈராக் அதி காரிகளின் பொறுப்பில் இருக்கிறார்.
குவைத்தில் வேலை
இலங்கையில் கொழும்பு அருகே உள்ள ஹெந்தலா கிரா மத்தைச் சேர்ந்தவர் தினேஷ் ராஜரத்தினம். லாரி டிரைவரான இவர் குவைத் நாட்டில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். இவரது மனைவி ரீட்டாவும், 3 மகன்களும் சொந்த ஊரிலேயே தங்கி இருந்தனர்.
குவைத்தில் இருந்து உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ அலுவலகத்துக்குச் சென்றபோது, தீவிரவாதிகள் அவரது லாரியை தடுத்து நிறுத்தி அவரைக் கடத்திச் சென்றனர். அதுபோல வங்காளதேச லாரி டிரைவர் அப்துல் ஹாஷமும் கடத்தப்பட்டார்.
இந்த சம்பவம் கடந்த அக்டோ பர் மாதம் 28_ந்தேதி நடந்தது.
விடுதலை
ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த 2 பேரையும் பணயக் கைதி களாக தீவிரவாதிகள் அடைத்து வைத்து இருந்தனர்.
தினேஷ் ராஜரத்தினமும் நேற்று விடுவிக்கப்பட்டார். அவ ருடன் வங்காளதேச பணயக் கைதியும் விடுவிக்கப்பட்டார். இந்த தகவலை வங்காள தேசத்தை விட்டு வெளியேறிய குடிமக்களின் நல்வாழ்வுக்கான அமைச்சரகம் டாக்காவில் வெளியிட்டு உள்ளது.
விடுவிக்கப்பட்ட 2 பேரும் இப்போது ஈராக் அதிகாரிகள் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.