12-13-2004, 06:10 PM
<img src='http://www.kumudam.com/reporter/161204/pg7t.jpg' border='0' alt='user posted image'>
ஏமாற்றிப் பணம் பிடுங்கத்தான் எத்தனையெத்தனை இரக்கமற்ற வழிகளைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் சிலர்!
லேட்டஸ்ட்டாக இலங்கை அகதிகளைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறது ஒரு 'அகாபுகா' கும்பல்.இந்தக் கும்பலை நம்பி, தங்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பலாம் என்ற ஆசையில் வரும் அகதிகள், கடைசியில் தங்கள் பணத்தையும் உடைமைகளையும் இழந்து போலீஸில் மாட்டும் அவல நிலைக்கு ஆளாகிறார்கள்.
இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால், இலங்கை அகதிகளை அழைத்துவரும் 'அகாபுகா' கும்பல்தான் கடைசியில் போலீஸிடமும் போட்டுக் கொடுக்கும் வேலையையும் செய்கிறது.
கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
ராமேஸ்வரம் கடல் வழியாக, திருட்டுத்தனமாக இலங்கைக்குப் பயணம் செய்யும் அகதிகளின் எண்ணிக்கையும், அப்படி பயணம் செய்யும் அகதிகளை போலீஸ் பிடிக்கும் சம்பவங்களும் சமீபகாலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளன.
கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே இருநூறுக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் போலீஸாரால் பிடிக்கப்பட்டு, அவர்கள் தங்கியிருந்த முகாம்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இருபத்துநான்காம் தேதியன்று கூட, பார்த்திபனூர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு பகுதி செக்போஸ்ட்டிலும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக இருபத்திரண்டு அகதிகள் பிடிபட்டனர்.
போலீஸ் விசாரணையில், அந்த அகதிகள் அனைவருமே ஈரோட்டில் உள்ள அரச்சலூர் அகதிகள் முகாமிலிருந்து வந்தவர்கள் என்பதும், ராமேஸ்வரம் புரோக்கர் ஒருவர் வாயிலாகத்தான் கள்ளத்தோணி மூலமாக இலங்கைக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது. தவிர, இலங்கைக்குச் செல்வதற்குக் கட்டணமாக மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை ஒவ்வொருவரிடமும் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இருபத்திரண்டு பேருக்குமாகச் சேர்த்து எண்பதாயிரம் ரூபாய் கல்லா கட்டியிருக்கிறார் அந்த புரோக்கர்.
போலீஸ் சும்மாவிடவில்லை. சம்பந்தப்பட்ட புரோக்கரைப்பிடித்து விசாரித்திருக்கிறது. அந்த விசாரணையில்தான் அகதிகள் முகாம்கள் இருக்கும் எல்லா ஊர்களிலும் இப்படியான புரோக்கர்கள் இருப்பதும், அகதிகளை இலங்கைக்குத் திருட்டுத்தனமாக அனுப்பி வைப்பதை ஒரு தொழிலாகவே அந்த புரோக்கர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற விஷயமும் தெரியவந்திருக்கிறது.
தொழில் என்றால் சாதாரணத் தொழிலில்லை. லட்சக்கணக்கில் பணம் புரளும் தொழிலாகவே மாறியிருக்கிறது. இப்படி பணம் புரள்வதாலேயே பொறாமை ஏற்பட்டு சக புரோக்கர்கள் அழைத்துச் செல்லும் அகதிகள் பற்றிய விவரங்களை மற்ற புரோக்கர்களே போலீஸில் போட்டுக் கொடுத்து விடுகிறார்கள். இதன் விளைவாக ராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் சமீபகாலமாக அகதிகள் பிடிபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த விவகாரம் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்வதற்காக, நமக்குத் தெரிந்த ராமேஸ்வரம் போலீஸ் அதிகாரியிடம் பேசினோம்.
மனிதர் ஏகப்பட்ட விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி, திருச்சி, ஈரோடு பகுதிகளிலுள்ள முகாம்களிலிருந்துதான் அகதிகள் புறப்பட்டு ராமேஸ்வரத்துக்கு வர்றாங்க. அவங்களை அழைச்சுட்டுப் போறதா சொல்ற ஏஜெண்டுகள், ராமேஸ்வரத்திலிருந்து சிலோன் ரொம்பப் பக்கம். ரெண்டே மணி நேரத்துல போயிடலாம். ஒரு பிரச்னையும் இருக்காதுனு சொல்லித்தான் கூட்டி வர்றாங்க. இப்போ இருக்கிற அகதிகள் எல்லாமே பதினஞ்சு இருபது வருஷங்களுக்கு முன்னாடி தமிழ் நாட்டுக்குள்ளே வந்தவங்க. அப்போ, சின்ன வயசுப் பசங்களா இருந்தவங்கதான், இப்போ முப்பது முப்பத்தஞ்சு வயசுக்காரங்களா இருக்காங்க. அப்படிப்பட்ட ஆண்களும், பெண்களும்தான் இப்படி திருட்டுத்தனமா புறப்பட்டுப் போறாங்க. சின்னஞ்சிறுசா தமிழ் நாட்டுக்குள்ளே இதே ராமேஸ்வரம் கடல் வழியா வந்தவங்களுக்கு, இப்போ பாதுகாப்புக் கெடுபிடிகளோட ராமேஸ்வரம் கடல் பகுதி இருக்கிற விஷயம் எப்படித் தெரியும்? அப்படித் தெரிஞ்சா புரோக்கர் பேச்சை நம்பி இப்படி குடும்பம் குடும்பமா கிளம்பி வருவாங்களா? என்ற அந்த போலீஸ் அதிகாரி தொடர்ந்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றுக்குத் தாவினார்.
அகதிகள் கள்ளத்தோணி மூலமா அவங்க சொந்த நாட்டுக்குப் போறதும், எங்ககிட்டே பிடிபடுறதுமா இருக்காங்களே.. அப்படி பிடிபடுறவங்கள்ல ஒரு ஆள் கூட மண்டபம் முகாம் அகதி கிடையாது தெரியுமா? இந்த முகாம் அகதிகளுக்கு ராமேஸ்வரம் கடலைப் பத்தியும், பாதுகாப்புகள் பற்றியும் நல்லாவே தெரியும். இத்தனைக்கும் மற்ற அகதிகள் முகாம்களை ஒப்பிடும்போது இலங்கைக்கு ரொம்பப் பக்கமா இருக்கறது மண்டபம் அகதிகள் முகாம் தான்.
இன்னொரு விஷயம்.. மண்டபம் முகாமில் உள்ள அகதிகள்தான் முறையான வழியில் இலங்கைக்குப் போறாங்க. தங்களுடைய நாட்டுக்குப் போக விருப்பம் தெரிவிச்சு அப்ளிகேஷன் போட்டு, அதிகாரிகளுடைய விசாரணைகளுக்குப் பதில் சொல்லி, தயாரா இருக்கணும். அவங்களுடைய அப்ளிகேஷனை ஐ.நா. சபையோட அகதிகள் ஹை கமிஷன் அதிகாரிகள் பரிசீலனை பண்ணி ஓ.கே. பண்ணின பிறகுதான் அகதிகள் தங்கள் நாட்டுக்குச் செல்ல விமானமே ஏற முடியும். இந்த முறையில்தான் மண்டபம் அகதிகள் இலங்கைக்குப் போறாங்க. கடந்த வாரம்கூட இருபத்தேழு அகதிகள் திருச்சியிலேருந்து விமானம் மூலமா இலங்கைக்குப் போயிருக்காங்க என்றவர், கடைசியாக இவ்வளவு கெடுபிடித் தொல்லைகளுக்குப் பயந்துதான் அகதிகள் திருட்டுத்தனமா போக ஆசைப்பட்டு கடைசியில் மோசம் போறாங்க என்றார்.
ராமேஸ்வரத்தைப் பொறுத்தவரை ஒத்தக்கல், ராமகிருஷ்ணாபுரம், முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளிலிருந்துதான் அகதிகள் கள்ளத்தோணி மூலமாகப் பயணமாகிறார்கள்.
தனுஷ்கோடிவரை நீண்டு கிடக்கும் சவுக்குக் காட்டுக்குள்ளும், கருவேலம்புதருக்குள்ளும் அகதிகளைப் பதுக்கி வைக்கும் ஏஜெண்டுகள், இரவு பதினொரு மணிக்கு மேல் அருகிலேயே இருக்கும் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அங்கே தயாராக நிற்கும் தோணிகளில் ஏற்றி அனுப்பி விடுகிறார்கள்.
அதற்குள்ளாகத் தகவல் கிடைத்து ஸ்பாட்டுக்கு விரைந்து வரும் போலீஸோ, அல்லது கடலோரக் காவல்படையோ அகதிகளைச் சுற்றி வளைத்துப் பிடித்து விடுகிறது. அகதிகளை தண்டிக்கவோ சிறையில் அடைக்கவோ கூடாதென்பதால், அவர்களிடம் விசாரணை மட்டும் செய்துவிட்டு, அவர்கள் தங்கியிருந்த முகாம்களுக்கே மீண்டும் அனுப்பி வைத்துவிடுகிறது போலீஸ்.
தாங்கள் அழைத்து வந்த அகதிகள் போலீஸில் மாட்டிவிட்டால் ஏஜெண்டுகள் அவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. தவிர, அகதிகளிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவதுமில்லை. சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணத்தை அப்படியே ஏஜெண்டிடம் அள்ளிக் கொடுத்து ஏமாந்துவிட்டு, சொந்த நாட்டுக்கும் போக முடியாமல் மீண்டும் முகாம்களிலேயே அடைக்கோழிகளாக அடைந்துகொள்கிறார்கள் இந்த அப்பாவி அகதிகள்.
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அகதிகள் பிடிபடுவதென்பது சாதாரணச் செய்தியாகிவிட்டது. ஆனால், அந்த அகதிகளுக்குள் இருக்கும் வேதனையும் சோகமும் நிச்சயமாக சாதாரண விஷயமல்ல, என்பதே உண்மை.
kumudam.com

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>