Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
<img src='http://www.hindu.com/thehindu/fr/2003/08/15/images/2003081501500303.jpg' border='0' alt='user posted image'>
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் (வயது 83). உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த சில நாட்களாக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். டயாலிசிஸ் முறையில் ரத்தம் செலுத்தப்பட்டது.
ஜெமினிகணேசன் ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
நேற்று ஜெமினிகணேசனின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. அவருக்கு அதிக அளவில் `ஓ' பாசிடிவ் ரத்தம் தேவைப்பட்டது. அதையும் சேகரித்து ஜெமினிக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
உடல் நில கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தகவலுக்கு நன்றி.. நல்ல நடிகர்.. விரைவில் குணமடைய.. வேண்டுதல்கள்.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
ஜெமினிகணேசனின் உடல் நிலை அறிந்து மிகவும் வேதனை. நீக்கப்பட்டுள்ளது.- இராவணன்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ஜெமினிகணேசனின் உடல் நிலை தேறிவருகிறது. ம.திமு.க., பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திரைப்பட
இயக்குனர் கே.பாலசந்தர் மருத்துவமனையில் நேற்று ஜெமினியை சந்தித்து
நலம் விசாரித்தனர்.
பழம்பெரும் நடிகர் ஜெமினிகணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜெமினிக்கு ரத்தமாற்று (டயாலிசிஸ்) சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டதால் பொதுமக்களும், அவரது ரசிகர்களும் நுõற்றுக்கணக்கானோர் ரத்தம் கொடுக்க முன்வந்தனர். இவர்களில் குறிப்பிட்டவர்களிடமிருந்து ஜெமினிக்கு தேவையான ரத்தம் மட்டும் பெறப்பட்டது. ரத்தமாற்று சிகிச்சை செய்யப்பட்டது.
ஜெமினிக்கு சிகிச்சை அளிக்க பெங்களூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு விசேஷ ஊசிமருந்து வரவழைக்கப்பட்டது. இந்த மருந்து ஊசி மூலம் ஜெமினிகணேசனுக்கு செலுத்தப்பட்டது. இதில் ஜெமினியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தனது மனைவி, மகளிடம் நேற்று ஜெமினி பேசினார்.
ஜெமினி கணேசனுக்கு "ஒ' பாசிட்டிவ் ரத்தம் தேவைப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டதை பார்த்த ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தனது கட்சி தொண்டர்கள் மூலம் ஜெமினிக்கு
தேவையான ரத்தம் வழங்க ஏற்பாடு செய்தார். இதனையொட்டி மறுமலர்ச்சி ரத்த தானக் கழகத்தின் சார்பில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த சில தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ரத்தம் வழங்கினர்.
நேற்று காலை 10 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து ஜெமினிகணேசனை சந்தித்து வைகோ நலம் விசாரித்தார். அப்போது ஜெமினிகணேசன், "நான் நல்லாயிருக்கிறேன். இப்ப தேவலாம்' என்று கூறினார். ஜெமினிக்கு பெரும் புகழை ஈட்டித்தந்த படங்கள் பற்றியும், தாம் ரசித்து பார்த்த படங்கள் பற்றியும் ஜெமினியிடம் வைகோ நினைவுகூர்ந்து பேச அதனை ஜெமினி ரசித்து கேட்டுள்ளார். திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் நேற்று மருத்துவமனைக்கு வந்து ஜெமினியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
ஜெமினிகணேசன் மகள் ரேவதி சுவாமிநாதன் அமெரிக்காவிலிருந்து ஜெமினியை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார்.
ஜெமினியின் <உடல் நலம் குறித்து அவர் கூறியதாவது:
ரத்தசோகை நோய் காரணமாக அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உணவு பிடிக்காததால் சில நாட்கள் அவர் சாப்பிடாமல் இருந்து வந்தார். அதனால்தான் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. ரத்தமாற்று சிகிச்சை செய்வதற்காக நிறையபேர் ரத்தம் கொடுத்தனர். அவரது உடல் நிலை தேறிவருகிறது. அவர் சாதாரண உணவு சாப்பிடத் தொடங்கிவிட்டார். மற்றவர்கள் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளோம். இன்னும் நான்கு நாட்களில் அப்பாவை வீட்டிற்கு அழைத்துச் செல்வோம் என்றார்.
ஜெமினியை அவரது மனைவி பாப்ஜி, மகள் கமலா செல்வராஜ், ஜெமினியின் செயலாளர் ஐயப்பன் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
ஜெமினிகணேசன் குணமடைய அவரது ரசிகர்கள் முக்கிய கோவில்களில் பிரார்த்தனை நடத்தி பிரசாதம் கொண்டுவந்து நேற்று ஜெமினிக்கு கொடுத்தனர்.