Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
²Á¡üȢ ¸¡¾Äý
#1
காதல் ஏமாற்றும் கள்ளூர்த் தண்டனையும்

கள்ளூர், பூக்கள் நிறைந்த வயல்களையும், கரும்பு செழித்த தோட்டங்களையும் கொண்ட தொல் புகழ் மிக்க எழிலார்ந்த சங்கச் சிற்றூர். இங்கே தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைச் சந்தித்தான். கண்கள் பேசின; காதல் பிறந்தது; களவு வளர்ந்தது. அழகிய நெற்றியினையுடைய அந்த இளையாளின் அணி நலம் கவர்ந்துண்டான் தலைவன். ஆசை தீர்ந்தது. மோகம் முடிந்தது. திருமணம் கேட்ட பெண்ணிடமும் சுற்றத்திடமும் தனக்கு அவளைத் தெரியவே தெரியாது என்று சாதித்து சத்தியம் செய்தான், அறநெறியில்லா அந்தக் கொடுமையாளன். வழக்கு, மன்றத்திற்கு வர, அவையத்துச் சான்றோர் விசாரிக்கத் தொடங்கினர். தலைவனும் தலைவியும் சந்தித்துப் பழகியதையும், நெருங்கிய நிலையில் உறவு கொண்டதையும் கண்டவர் அனைவரும் சான்றாளராயினர். பொய்கள் கரைந்தன. உண்மை ஞாயிறு உதயமானது. தலைவனின் காதல் ஏமாற்று அம்பலமானது. அவையச் சான்றோர் தண்டனை பணித்தனர். தளிர்கள் பொருந்திய பெரிய மரத்தின் கிளையொன்றில் மோசடிக் காதலனை இறுகப் பிணைத்தனர். சுண்ணாம்பு நீற்றினை அவன் தலையில் ஊற்றினர். பொய்க்கும் ஏமாற்றுக்கும் கிடைத்த தண்டனை பொருத்தமானதே என்று ஊரவை நின்ற மக்கள் அனைவரும் ஆரவாரித்து மகிழ்ந்தனர்.

மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், மருதப் பாடலொன்றின் வழி சங்க காலத்துக் காதல் மோசடியை நம் கவனத்திற்குக் கொணர்கிறார்.

"தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன் அறியேன் என்ற
திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசால் அவையத்(து) ஆர்ப்பினும் பெரிதே" (அகம் 256)


தகவல் : வரலாறு தொகுதி-1, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு, திருச்சி.
!




-
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)