Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
இலங்கையில் 1,300 பேர் பலி: இந்திய கப்பல்கள் விரைவு
கொழும்பு:
நிலநடுக்கம் காரணமாக உருவான கடல் கொந்தளிப்பில் இலங்கையில் 1,297 பேர் பலியாகிவிட்டனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்தியா மருத்துவ உதவி அளிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு உதவ 5 இந்திய கடற்படைக் கப்பல்கள் விரைந்துள்ளன.
தென்னிந்தியாவில் சென்னை, ஆந்திராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் இந்தோனிஷியாவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தால் இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உள்ளே புகுந்தது. தலைநகர் கொழும்புவில் பாதி கடல்நீரால் சூழப்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடிழந்தனர்.
குறைந்தது 1,297 பேர் இறந்திருப்பார்கள் என்றும், இன்னும் முழு விவரம் கிடைக்கப் பெறவில்லை என்றும் இலங்கைப் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் அலுவலக அதிகாரி லலித் வீரசிங்கே தெரிவித்தார்
. முன்னதாக காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், கடலலையில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர் தந்து உதவுமாறு இந்தியாவிற்கு ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் முட்டூர் என்ற கிராமத்தில் மட்டும் குறைந்தது 200 பேர் பலியானார்கள் என்றும், திரிகோணமலையில் 14 பேர் பலியானார்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியா உதவி:
கடல் கொந்தளிப்பு காரணமாக இலங்கையில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த மன்மோகன் சிங், இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் இந்திய கடற்படை உதவி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து 5 இந்திய போர்க் கப்பல்கள் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ, நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு விரைந்தன. விசாகபட்டிணம், கொச்சின், மும்பையில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பல்கள் இலங்கையின் திரிகோணமலை மற்றும் கலீ துறைமுகங்களுக்குச் செல்லும்.
இந்தக் கப்பல்களில் மீட்புப் பணிக்கு உதவும் ஹெலிகாப்டர்களும் உள்ளன.
300 கைதிகள் தப்பிப்பு:
இதற்கிடையே தெற்கு இலங்கை, மடாராவில் உள்ள சிறைச்சாலை கடல் கொந்தளிப்பு காரணமாக இடிந்ததில் அதில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் குறைந்தது 300 பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.
சிறைச்சாலை இடிந்ததில் யாராவது பலியானார்களா என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
,இந்தியாவில் இறந்தவர்களை காப்பாற்ற போதிய உதவிகள் செய்யவில்லை. உடனே எந்த கப்பலும்வரவில்லை ஆனால் இலங்கைக்கு உதவ 5 கப்பல்களில் சென்றிருக்கிறார்கள். என்ன கருணை. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
எம்மைக்கொல்ல எத்தனை ஹெலிகாப்டர் பயன்படுத்தினார்கள். மீட்புப்பணிக்கு அந்தக் ஹெலிகாப்டர் பயன்படுத்த முடியாதோ? இந்தியாவை இதை சாக்காக வைத்து உள்ளே அழைக்கும் திட்டமா?
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
aathipan Wrote:எம்மைக்கொல்ல எத்தனை ஹெலிகாப்டர் பயன்படுத்தினார்கள். மீட்புப்பணிக்கு அந்தக் ஹெலிகாப்டர் பயன்படுத்த முடியாதோ? இந்தியாவை இதை சாக்காக வைத்து உள்ளே அழைக்கும் திட்டமா?
இதையடுத்து 5 இந்திய போர்க் கப்பல்கள் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ, நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு விரைந்தன. விசாகபட்டிணம், கொச்சின், மும்பையில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பல்கள் இலங்கையின் திரிகோணமலை மற்றும் கலீ துறைமுகங்களுக்குச் செல்லும்.
இந்தக் கப்பல்களில் மீட்புப் பணிக்கு உதவும் ஹெலிகாப்டர்களும் உள்ளன.
ஆதீபன்
கருத்தெழுதுவதற்கு முன் முதலில் எழுதியதை முற்றாக வாசித்து விட்டு பின் கருத்தெழுதுங்கள். இந்தியா இலங்கைக்கு மட்டுமல்ல மாலைதீவு அந்தமான்தீவு போன்றவற்றுக்கும் உடனடியாக உதவிகளை அனுப்பியுள்ளது. உங்களைப் போன்றவர்கள் செய்தாலும் குறை சொல்வீர்கள் செய்யாவிட்டாலும் குறை சொல்வீர்கள். மொத்தத்தில் உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் குறை சொல்வதுதான்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அரசியல் அதிர்வுகள்
காலத்திற்குக்க காலம் ஏற்படும் வேறுபட்ட நிகழ்வுகளின் மீது, அரசியல்வாதிகளின் பார்வைகள் வேறாக இருக்கின்றன. அந்தந்த நிகழ்வுகளை வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைவதில் இவர்கள் படு கில்லாடிகள். மக்களின் அனுதாப அலைகளை அல்லது பாராட்டுக்களைப் பெற, முக்கியமான நிகழ்வுகள் இந்த அரசியல்வாதிகளுக்கு அவசியம் தேவைப்படுகின்றன. எந்த வழியிலாவது, இந்த நிகழ்வுகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதே இவர்கள் குறியாக இருக்கின்றது.
பூகம்பம் என்பது, நிலப்பரப்பில் உள்ள பல உயிர்களையும், கட்டடங்களையும் அழிப்பதாக இருக்கலாம். ஆனால் அதே சமயம் இதே பூகம்பம், சில வேளைகளில், அரசியல் "நிலப் பரப்பையும்" மாற்றி அமைத்து விடுவதுண்டு. அண்மையில், ஈரானில் பேரழிவை ஏற்படுத்திய ஈரானின் பூகம்ப நிகழ்வு இதற்கு விதிவிலக்கு இல்லைப் போலும். பாதிப்புற்றவர்களுக்கு, அமெரிக்கா அளிக்க வந்த உதவிகளை, ஈரான் ஏற்றிருக்கின்றது. வழமையாக ஆளை ஆள் சாடிய வண்ணம் இருக்கும் இரு நாடுகள், இப்படி மன ஒப்புதலோடு, நடந்து கொண்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வைக் கிளப்பி இருக்கின்றது.
ஈரான் தனது அணுஉற்பத்தி நிகழ்ச்சி நிரல்களை அகில உலகரீதியாக இயங்கம் அணுசக்தி ஏஜன்சி பரிசோதிக்க சம்மதம் அளித்து, ஒப்பந்தம் செய்த நிகழ்வை அடுத்தே, அமெரிக்கா தனக்களித்த உதவியை ஈரான் மறுக்காது ஏற்றிருக்கின்றது. அண்மையில் சம்பவித்த இன்னொரு உதாரணத்தையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், துருக்கியைப் பெரும் பூமி அதிர்ச்சி தாக்கியதை அடுத்து, கிரீஸ், தன் பங்கிற்கு உடனடியாகச் செய்த உதவி, எலியும் பூனையுமாக எட்ட நின்று முறைக்கும் துருக்கி-கிரீஸ் உறவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தப் பூகம்பம் மூலம் 15,000 உயிர்களை வரை இழந்த துருக்கிக்கு, இப்படியொரு சகாயம் கிடைத்தது, கிரீஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சரை "உச்சத்தில்" இவரைத் துருக்கி மக்கள் தூக்கி வைக்க உதவிற்று. உடனடியாக உதவியை வழங்காத துருக்கி இராணுவத்தின் அசட்டை பலராலும் விமர்சிக்கப்பட்டது.
இதேபோல 1972இல், நிக்ககராவாவில் சம்பவித்த அரசியல் பூமி அதிர்வை எடுத்துக் கொள்ளலாம். தலைநகரம் அழிக்கப்படும்வரை. வெளி உலகின் பார்வை, சர்வதிகார ஆட்சியிலிருந்த நாட்டில் விழவில்லை.அப்பொழுதிருந்த ஜனாதிபதி, மீட்புப் பணிகளை ஒழுங்காகத் திட்டமிடவில்லை. அழிந்த கட்டடங்களை திரும்ப எழுப்பும் பணியிலும் ஆர்வமில்லை.இதனால் ஆட்சியாளர் தூக்கியெறியப்பட்டு, 1979இல், புதியவர் ஒருவர் ஆட்சிக்கு வந்தார். அழிவு பெரிதாக இடம்பெற்ற Bam நகரிலும் இதே நிலை வரலாம், அரசியல் மாற்றம் வரலாம் என்று அவதானிகள் கருதுகின்றார்கள்.
பத்திரிகையாளர்கள், இடிபாடுகள் நிறைந்த பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களிடையே அதிருப்தி காணப்பட்டதைக் கவனித்து இருக்கின்றார்கள். உணவு, உடைகளுடன் வரும் வாகனங்களுக்கு பின்னால் மூச்சிரைக்க ஓடியதுதான் மிச்சம், எமக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்று அதிருப்தி மேலீட்டுடன் மக்கள் இவர்களிடம் முறையிட்டு இருக்கின்றார்கள். தனது 18 குடும்ப அங்கத்தவர்களை இழந்து விட்ட எஸ்மெட் என்ற பெண்மணி, வானத்தைக் கூரையாக வைத்துக் கொண்டு தன் நெருங்கிய உறவினர்கள் சிலருடன், தனது தரைமட்டமாகி விட்ட வீட்டுக்கு முன்னால் இரவைக் கழிக்க வேண்டி இருப்பதாகக் கவலையுடன் குறிப்பிட்டு இருக்கின்றார்.
"இரண்டு கூடாரமடிக்க இவர்கள் உதவினால், அது பெரிய உதவியாக இருக்கும். ஆனால் அவர்கள் எம்மை மறந்து விட்டார்கள்" என்று இந்தப் பெண்மணி கூறும்போது, எந்த அளவுக்கு இந்தப் பெண் பாதிக்கப்பட்டு இருக்கின்றாள் என்பதை உணர முடிகின்றது. "வெளியே குளிர்கின்றது. பசி வயிற்றைக் கிள்ளுகின்றது. சாப்பிடப் போதுமான அளவு பாண் இல்லை" என்று மேலும் அங்கலாய்க்கின்றார் இவர்.
90ம் ஆண்டு வரையிலான காலகட்ட பூகம்ப நிகழ்வுகளை நோக்கினால், 90ம் ஆண்டு ஜூன் மாதம் 21ந்திகதி ஈரானின் Glan என்னுமிடத்தில் இடம்பெற்ற மோசமான பூகம்பத்தில் 40,000 மக்கள் மரணித்தது தெரிய வரும்.
இன்னொரு பாரிய பூகம்பம் 88ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ந் திகதி வட மேற்கு ஆர்மேனியாவில் இடம்பெற்றது. 76ம் ஆண்டு சீனாவின் Tangshan என்னுமிடத்தில் ஏற்பட்ட இராட்சத பூகம்பம் 500,000 அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது. இவை மூன்றும் குறிப்பிடத்தக்க பெரிய பூகம்பங்களாகும்.
எந்த இழப்பிலும் தமக்கு ஆதாயந்தேட முயலும் அரசியல்வாதிகள் வித்தியாசமானவர்கள்தான்.
நன்றி - go2tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
Vasampu Wrote:aathipan Wrote:எம்மைக்கொல்ல எத்தனை ஹெலிகாப்டர் பயன்படுத்தினார்கள். மீட்புப்பணிக்கு அந்தக் ஹெலிகாப்டர் பயன்படுத்த முடியாதோ? இந்தியாவை இதை சாக்காக வைத்து உள்ளே அழைக்கும் திட்டமா?
இதையடுத்து 5 இந்திய போர்க் கப்பல்கள் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ, நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு விரைந்தன. விசாகபட்டிணம், கொச்சின், மும்பையில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பல்கள் இலங்கையின் திரிகோணமலை மற்றும் கலீ துறைமுகங்களுக்குச் செல்லும்.
இந்தக் கப்பல்களில் மீட்புப் பணிக்கு உதவும் ஹெலிகாப்டர்களும் உள்ளன.
ஆதீபன்
கருத்தெழுதுவதற்கு முன் முதலில் எழுதியதை முற்றாக வாசித்து விட்டு பின் கருத்தெழுதுங்கள். இந்தியா இலங்கைக்கு மட்டுமல்ல மாலைதீவு அந்தமான்தீவு போன்றவற்றுக்கும் உடனடியாக உதவிகளை அனுப்பியுள்ளது. உங்களைப் போன்றவர்கள் செய்தாலும் குறை சொல்வீர்கள் செய்யாவிட்டாலும் குறை சொல்வீர்கள். மொத்தத்தில் உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் குறை சொல்வதுதான்
ஐயா மறைமுகமாக இந்தியாவின் பிடிக்குள்ளே மாலைதீவு உள்ளது இநதியாவின் ஒரு பகுதி அந்தமான். அவர்களுக்கு உதவி அனுப்புவது வேறு விடயம். இலங்கையில் மூக்கை நுழைத்து இப்போது மறைமுகமாக எம்மை அழிக்க மட்டும் சதித்திட்ட உதவிகளைச்செய்வது இந்தியா. அது உதவி என்று வருகிறதென்றால் ஏதோ எம்மில் இரக்கப்பட்டல்ல. இந்திய மக்களுக்கு அவர்கள் சரியான உதவியை செய்யவில்லை இலங்கை மக்களுக்கு மட்டும் ஓடோடிவருகிறார்கள். சிந்திக்க வேண்டும்.
Posts: 168
Threads: 24
Joined: Jun 2003
Reputation:
0
அந்தமான் தீவில் 30000 பேரின் நிலை தெரியவில்லை.
தென் இந்தியாவில் 10000ற்கும் மேற்பட்டோர் பலி. பொதுமக்களே மீட்பு பணிகளில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கீழ்த்தட்டு மக்களே. அதனால் இவ் இழப்புக்களைப்பற்றி மேல்தட்டு வர்க்கம் அதிக அக்கறை எடுக்கவில்லை.
இந்தியா இவை இன்று பத்திரிகைகளில் பார்த்த செய்திகள்.
Quote:5 இந்திய போர்க் கப்பல்கள் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ, நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு விரைந்தன. விசாகபட்டிணம், கொச்சின், மும்பையில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பல்கள் இலங்கையின் திரிகோணமலை மற்றும் கலீ துறைமுகங்களுக்குச் செல்லும்.
அப்ப சொந்த மக்களுக்கு உதவ மாட்டார்களா <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதைத்தானோ "லெவல்" காட்டுறது என்பார்கள் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எங்கட வாலுகளும் இதைக் தூக்கிக் கொண்டு ஓடித்<b>திரியுதுகள். </b>
<b>
?
?</b>-
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
Quote:அப்ப சொந்த மக்களுக்கு உதவ மாட்டார்களா இதைத்தானோ "லெவல்" காட்டுறது என்பார்கள் எங்கட வாலுகளும் இதைக் தூக்கிக் கொண்டு ஓடித்திரியுதுகள்.
உங்கட கதைய கேட்க சிரிப்பு தான் வருது. அரசியல் என்டால் இது எல்லாம் சகஜம் தானே. மக்களைப் பற்றீ கவலைபடுறவர்களா இந்திய அரசியல் வாதிகள்...
[size=16][b].
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
ஆனால் எல்லா அரசியல் வாதிகளையும் நாம் ஒன்றாக பார்க்கக்கூடாது. ஆரம்பத்தில் எமக்கு ஆதரவு தந்ததும் இந்தியாவின் இந்திராதான். மன்மோகன்சிங்கும் சற்று வித்தியாசமானவரென்பதே எனது கணிப்பு. எல்லாவற்றிற்கும் எதிர்காலம் பதில் சொல்லும்.
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
வசம்பு சொல்றதும் சரிதான். எம்.ஜி.ராமசந்திரன் அவர்கள் கூட உதவி புரிந்து இருக்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலம் அல்லவே நாங்கள் வாழும் காலம். கலி காலம் முடிவடைந்து விட்டதாம்....ஆனால் எனக்கென்னமோ தற்போது தான் கலி முத்தி போய்விட்டது என நினைகிறேன்....
[size=16][b].
|