Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"ஆதங்கங்களைத் தெரிவிப்போம்"
#1
தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தால் எமது தாயகப்பூமியே பாரியளவு உயிர், உடைமை, பொருட்சேதங்களை அடைந்துள்ளது. ஏறக்குறைய ஆறாயிரத்திற்கு அதிகமான எம்மிரத்தங்கள் கடலுக்குப் பலியாகியுள்ளனர், பல கரையோரக் கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன, இன்னும் இறந்த உடலங்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, இறந்தோர் தொகை பத்தாயிரத்தைத் தாண்டலாமென செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இலங்கை சிங்கள ஏகாதிபத்திய அரசால் திட்டமிட்ட முறையில் ஈழப் பகுதிகளான வடக்குக் கிழக்கின் அழிவுகள் உலகிற்கு மறைக்கப்படுகிறது. இலங்கையில் அழிவுகளைக் காட்டிக் கொண்டிருக்கும் பி.பி.சி, சி.என்.என்,.... போன்ற உலக ஊடகங்கள் கூட வடக்குக் கிழக்கின் அழிவுகளை கட்டாமல் சிங்களப் பகுதிகளில் இடம்பெற்ற செய்திகளையே காட்டிய வண்ணம் உள்ளன. அவர்களின் செய்தியாளர்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறார்களோ? அண்றி வடக்குக் கிழக்கின் அழிவுச் செய்திகள் அவர்களுக்கும் மறைக்கப்படுகிறதோ? தெரியவில்லை. இங்கு புலம் பெயர்ந்த மக்களாகிய நாம், எமது நாடுகளிலுள்ள இப்படியான ஊடக நிறுவனங்களோடு பாரிய அளவில் தொடர்பு கொண்டு எமது ஆதங்கங்களையும், உண்மை நிலைமைகளையும் தெரித்தால் சிலவேளை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு?

இது சம்பந்தமாக பி.பி.சி நிறுவனத்தின் சர்வதேச செய்திப் பிரிவின் தொலைபேசி இலக்கம் கீழ் தரப்பட்டுள்ளது. இந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டு எமது தேசத்தின் உண்மை நிலைமையை அவர்களீற்கு எடுத்துரைப்போம்.

பி.பி.சி உலகச் சேவை தொலைபேசி இலக்கம்:
08700100222
"
"
Reply
#2
ஓம் நல்லையன் நீங்கள் கூறியதை தான் நேற்று தமிழர் புனர்வாழ்வு கழக பொறுப்பாளர் றெஜி அவர்களும் தெரிவித்திருந்தார்.. வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையும் உயிர் இழப்புக்களையும்.. வெளியிடவில்லை.. இதை மறைக்க முயல்வதாக.. அவர்கள் தெற்குப்பகுதியில் நடந்த அனர்த்தங்களை மட்டும் தான் கதைக்கிறார்கள் காட்டுகிறார்கள் என்று.. வேறும் உறவுகள் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிற்கு தொடர்பு கொண்டு தங்களது.. ஆதங்கங்களை வெளியிடுகிறார்கள்.. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும் என்றால் இவை யாவருக்கும் தெரியப்பட வேண்டும்.. BBC உடன் தொடர்பு கொண்டு பலர் இதனை தெரிவித்த பொழுது அதற்குரிய ஆதாரங்கள் தமக்கு வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். தீபம் தொலைக்காட்சியில் காலை கூறினார்கள் ஆதாரங்களை தாங்கள் அனுப்பியுள்ளதாக..ஆனால் அவர்கள் ஒளிபரப்பு செய்வது தங்கள் கையில் அல்ல மக்கள் கையில் தான் உள்ளது என்று.. இதனை அனைத்து உறவுகளும் கருத்தில் எடுத்து..தங்கள் வேண்டுகோள்களை அவர்களிடம் தெரிவித்து. நமது மக்களிற்கு உதவிகள் சென்றடையும் வழி செய்ய வேண்டியது.. அனைவரதும் கடமையாகும்.. சகலதையும் இழந்து நிர்க்கதியாய் இருக்கும் அவர்களிற்கு இவர்கள் கொடுக்கப்போகும் நிவாரன உதவியால் முழுமையான இழப்புகளை நிறைவு செய்யாவிடினும்.. குறைந்தளவு அத்தியாவசிய தேவைகளை எனினும் கிடைக்க வழி செய்வோம்..!

இந்த மின்னஞ்சல் முகுவரிக்கு உங்களிடம் இருக்கும் படங்கள் மற்றும் வீடியோ தொகுப்பு மற்றும் கோரிக்கைகளை அனுப்ப முடியும்...

yourpics@bbc.co.uk
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)