12-27-2004, 11:23 PM
தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தால் எமது தாயகப்பூமியே பாரியளவு உயிர், உடைமை, பொருட்சேதங்களை அடைந்துள்ளது. ஏறக்குறைய ஆறாயிரத்திற்கு அதிகமான எம்மிரத்தங்கள் கடலுக்குப் பலியாகியுள்ளனர், பல கரையோரக் கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன, இன்னும் இறந்த உடலங்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, இறந்தோர் தொகை பத்தாயிரத்தைத் தாண்டலாமென செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இலங்கை சிங்கள ஏகாதிபத்திய அரசால் திட்டமிட்ட முறையில் ஈழப் பகுதிகளான வடக்குக் கிழக்கின் அழிவுகள் உலகிற்கு மறைக்கப்படுகிறது. இலங்கையில் அழிவுகளைக் காட்டிக் கொண்டிருக்கும் பி.பி.சி, சி.என்.என்,.... போன்ற உலக ஊடகங்கள் கூட வடக்குக் கிழக்கின் அழிவுகளை காட்டாமல் சிங்களப் பகுதிகளில் இடம்பெற்ற செய்திகளையே காட்டிய வண்ணம் உள்ளன. அவர்களின் செய்தியாளர்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறார்களோ? அண்றி வடக்குக் கிழக்கின் அழிவுச் செய்திகள் அவர்களுக்கும் மறைக்கப்படுகிறதோ? தெரியவில்லை. இந்நிலை தொடருவதானது உலக நாடுகளால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் மிகப் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை சென்றடைவதை தடுப்பதற்காகவேயென உணரக்கூடியதாகவுள்ளது. புலம் பெயர்ந்த மக்களாகிய நாம் இந்த இலங்கை அரசின் அநாகரிக செயல்களை கால நேரத்திற்கு சர்வதேச சமூகத்திற்கும், அரசுகளுக்கும் எடுத்துரைக்கா விட்டால் இவ்வுதவிகள் தமிழர் பகுதிகளுக்கு சொற்பமாக செல்வது கூட சிங்கள அரசால் முற்றாக தடுக்கப்பட்டுவிடும்.
நாம் எமது மக்களின் அவசர உயிர் காப்பு நிவாரணங்களைச் சேகரிப்பதில் ஒருபுறத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் அதேவேளை உலக நாடுகளால் நிவாரணங்களுக்காக இலங்கை அரசிற்கு கொடுக்கப்பட்ட, கொடுக்கப்படப்போகும் உதவிகள் எமது மக்களுக்கு சென்றடைய வேண்டுமென்பதற்காக ...
1) நாமிருக்கும் நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் முன் அடையாள போரட்டங்களை நடாத்தலாம்.
2) இந்த போராட்டத்திற்காக கால அவகாசம் கொடுத்து எமது அறிக்கையொன்றை வெளியிடலாம்.
3) இந்தப் போராட்டம் மூலம் எமது பல பிரட்சனைகள் சர்வதேச சமூகத்தின் கண்களுக்குத் தெரிய வரலாம்.
தயவு செய்து எனது இந்த கோரிக்கையை புலத்திலுள்ள தமிழர் அமைப்புகள் பரிசீலிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

"
"
"