Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விசேட அதிரடி செயல் படை
#1
விடுதலைப் புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் திங்கட்கிழமை கிளிநொச்சியில் திட்டமிடல் அபிவிருத்தி செயலகத்தில் அவசர கூட்டம் ஒன்றை கூட்டினார். சுனாமி கடல்கொந்தழிப்பு அனர்த்தங்களை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கு வலியுறுத்தினார். ஒரு செயலாற்று குழுவையும் ஒரு விசேட அதிரடி செயல் படையையும் அமைக்க யோசனை தெரிவித்தார். இவை திட்டமிடல் அபிவிருத்தி செயலகத்தின் கீழ் இயங்கும். மாவட்ட செயலாளர்கள் சர்வதேச அரசுசாரா அமைப்புக்கள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உள்ளூர் அரசுசாரா அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் திட்டமிடல் அபிவிருத்தி செயலகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இவற்றில் இடம்பெறுவார்கள்.

நீண்ட ஆலோசனைகளின் பின்னர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளின் சிக்கலான தன்மைகளை கருத்தில் கொண்டு இரண்டு அதிரடி செயல் படை பிரிவுகளை அமைக்க முடிவாகியது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவிற்கு அண்மையில் முள்ளியவலையில் ஒன்றும் மற்றொரு மிக மோசமாக பாதிக்கப்பட்ட கரையோர கிராமமான தாளயடிக்கு அண்மித்ததாக ஏ9 நெடுஞ்சாலையில் புதுக்காடு சந்தியில் மற்றையதுமாக இந்த அதிரடி செயல் படை பிரிவுகள் அமைக்கப்படும்.

இந்த அதிரடி செயல் படை பிரிவுகள் செவ்வாய்க்கிழமை காலை 9மணிக்கு புதுக்காடு சந்தியிலும் பிற்பகல் 2மணிக்கு முள்ளியவளையிலும் கூடி தமது நடவடிக்கைகளை திட்டமிடுவது என்று முடிவாகியது.

இதேபோன்று திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கும் செயல்முறைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் விவரங்கள் அந்தந்த மாவட்டங்களில் ஆராயப்படும்.

அதிரடி செயல் படையில் விடுதலைப் புலிகளின் திட்ட அபிவிருத்தி செயலக பிரதிநிதி ஒருவர்ää மாவட்ட செயலாளர்ää அந்த மாவட்டத்தின் திணைக்கள தலைவர்கள் மாவட்ட அரசியல் பிரிவின் தலைவர் நிர்வாக தலைவர் விடுதலைப் புலிகளின் சுகாதார சேவையின் தலைவர் சர்வதேச அரசுசாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் மாவட்ட ஒன்றிய பிரதிநிதி ஆகியோர் பங்காற்றுவர்.

ஏற்கனவே நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் பற்றி இந்த கூட்டத்தில் யாழ் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட செயலர்கள் தமிழர் புனர்வாழ்வு கழகம்ää சர்வதேச மற்றும் உள்@ர் அரசுசாரா அமைப்புக்கள் என்பவற்றில் பிரதிநிதிகள் எடுத்துறைத்தனர். வவுனியா மாவட்டம் நேரடியாக பாதிக்கப்படாத போதிலும் இந்த மாவட்ட செயலர் அங்கு பிரசன்னமாக இருந்தார். முல்லைத்தீவுக்கு தொலைபேசி இணைப்பு இல்லாத நிலையிலும் கிளிநொச்சியின் தொலைபேசி தொடர்பு இயங்காத நிலையிலும் பல நிர்வாக அமைப்புக்களுக்கும் அரசுசாரா அமைப்புக்களுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தும் பணிகளை வவுனியாவில் இருந்து அவர் மேற்கொள்கின்றார்.

தற்போது பொது கட்டடங்களில் தற்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி தேவைகளாக குழந்தைகளுக்கான பால்மா ஆடைகள் போர்வைகள் படுக்கை விரிப்புக்கள்ää பாய்கள்ää உலர் உணவுகள் குடிநீர் மலசலகூடம் அவசர மருந்துகள் என்பன அடையாளம் காணப்பட்டன.

இடம்பெயர்ந்தும் காயமுற்றும் உயிரிழந்தும் காணாமல்போயும் உள்ளவர்கள் பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் இல்லாமை குறித்து சர்வதேச அரசுசாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள் கவலைப்படுகின்றனர். திங்கட்கிழமை மதியம் வரை சேகரிக்கப்பட்ட விவரங்களின் பிரகாரம் முல்லைத்தீவில் 772 சடலங்களும் தாளயடியில் 600 சடலங்களும் மீட்கப்பட்டதாக ஓரளவுக்கு கணிக்கப்பட்டுள்ளன. கட்டடங்களுக்குள் சிக்கியிருக்க கூடிய சடலங்களை உதவி பணியாளர்கள் தேடிவருகின்றனர்.

இடம்பெயர்ந்தும் காயமுற்றும் உயிரிழந்தும் காணாமல்போயும் உள்ளவர்கள் பற்றிய சரியான புள்ளிவிவரங்களை திரட்டுவதற்கான பிரிவொன்றை விசேட அதிரடி செயல் படை அமைக்கும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)