12-28-2004, 11:01 PM
டிசெம்பர் காலை நான்கு மணியளவில் எனது வீட்டு தொலைபேசி அலறியது. என்னவோதானென்று தொலைபேசியை எடுத்தவுடன் இந்த அவலச் செய்தி கேட்டு கீழே ஓடிவந்து வானொலிகளைத் திருகியபடி இணைய மூலம் செய்தியின் உண்மையை அறிய முற்பட்டேன். வந்த முதல் செய்திகளோ மட்டு-அம்பாறை உட்பட்ட தென் தமிழீழம், இந்த அழிவு வெறி பிடித்த கடல் அரக்கனின் கொந்தளிப்பினால் அழிக்கப் பட்டிருப்பாதாகவும் பல எம்மிரத்தங்கள் கடலரக்கன் விழுங்கி விட்டாதாகவும் செய்திகள் வர வரத் தொடங்கின. என்னை அறியாமலே எனது கண்களீலிருந்து நீர்த் துளிகள் பொல பொலவென ஊத்துப்படத் தொடங்கியது. காலை முதல் வேலையாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தோடு தொடர்பு கொண்டு எனது முதல் சிறு பங்களிப்பை எனது மக்களின் துயர் துடைப்பதற்காக வழங்கினேன்.
இச்செய்தி கேட்ட நேரத்திலிருந்து இன்றுவரை நிம்மதியாக உறக்கம்வரவில்லை. இரவிரவாக நித்திரையால் திடுக்கிட்டு எழுந்து செய்திகளைக் கேட்க முற்படுவதும், தமிழ்நெற் போன்ற ஆங்கில இணையத்தளங்களில் வரும் செய்திகளை பிரித்தானிய அரசின் சர்வதேச அபிவிருத்தி அவைச்சகத்துக்கும், உலக உணவு உதவி நிறுவனத்திற்கும் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உதவி நிறுவனங்களுக்கு அனுப்புவதுமாகவும் வெளியில் வெளிக்கிடவே மனமில்லாமல் எனது வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன். இத்தனைக்கும் எனது குடும்பங்கள் அத்தனையும் புலம் பெயர் நாடுகளிலும், எனது உறவுகளோ யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்படாத பாதுகாப்பான இடத்திலும் இருக்கிறார்கள். இதேநிலைதான் புலத்திலுள்ள எம்மவர் பலருக்கு. அப்படியிருக்க ஏன் இந்தக் கண்ணீர்? ஏன் இந்தச் சோகம்? ஏன் இந்த உணர்வு? எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? .......... ஆமாம் இது பிரிக்க முடியாத உறவு! அறுக்க முடியாத உறவு! ஈழமெனும் ஒரு தாய் பெற்றெடுத்த உறவு!
சர்வ தேசமே! ஒன்றை உணருங்கள், ஒன்றைப் புரியுங்கள், நாங்கள் உலகில் நடைபெற்ற அத்தனை அழிவுகளையும் சந்தித்து விட்டோம். இனி எந்த அழிவு வந்தாலும் சந்திப்போம். நீங்கள் எங்கள் உணர்வுகளை, வேதனைகளை, சோகங்களை புரிகிறீர்களில்லை. எங்கள் அவலக் குரல்கள் உங்கள் செவிகளுக்கு கேட்கவேயில்லை? கேட்கப் போவதுமில்லை! ஆனால் உலகின் மூலைகளில் உறங்கிக் கிடந்த ஈழத்தமிழர்கள் எல்லாம் எழத் தொடங்கி விட்டார்கள். மலையையொத்த, இரும்பையொத்த தலைமை எமக்குண்டு.ஒன்று பட்டு விட்டோம்.

"
"
"