Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்தமானின் அவலம்..
#1
<img src='http://photos.reuters.com/Pictures/galleries/Stories/632176283649218750/Previews/X010530020041228e0cs0002t.jpg' border='0' alt='user posted image'>
An aerial view is seen in Cambellway after a tsunami hit on Sunday in the remote Andaman and Nicobar islands chain, near the epicentre of the quake, December 28, 2004.படம்: றொய்டர்

அந்தமானில் அடுத்தடுத்து 5 முறை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விமானங்கள் மூலம் மக்கள் இந்தியாவுக்கு வெளியேற்றப் படுகிறhர்கள்.

சுமத்ரா தீவை மையமாக கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்;கர பூமி அதிர்ச்சி அந்தமான் நிகோபார் தீவுகளை கோரமாக தாக்கியது. கார் நிகோபார் தீவில் இருந்த இந்திய விமானபடை தளமே அழிந்தது. அதில் 100 வீரர்கள் பலியானார்கள்.

இதுவரை 3 ஆயிரம் பேர் பலியானதாக அதிகாரபூர்வ தகவல் கூறுகிறது. ஆனால் சாவு எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறுப்படுகிறது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்தமானுக்கும், கார் நிகோபாருக்கும் இடையே உள்ள குட்டி தீவுகளில் வசிக்கும் மக்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

அந்தமானில் பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய கடற்படை கப்பல்களிலும், விமானப்படை விமானங்களிலும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவை விமானங்கள், ஹெலி காப்டர்கள் மூலம் தீவுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு போடப்பட்டன.

நிவாரண உதவி கிடைத்தாலும் அந்தமானில் மக்கள் அச்ச மின்றி வாழக்கூடிய நிலைமை இல்லை. ஞாயிற்றுக்கிழமை தாக்கிய பூமி அதிர்ச்சியை தொடர்ந்து ஆப்டர்ஷாக் என்று அழைக்கப்படும் தொடர் நில அதிர்வுகள் அந்தமான் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதுவரை 5 முறை தொடர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 10.21 மணிக்கு மீட்டர் அளவு கோலில் 5.1 சக்தியுள்ள பூமி அதிர்ச்சி அந்தமானையும், நிகோபார் தீவுகளையும் தாக்கியது.

கடைசியாக நேற்று காலை 7 மணிக்கு 5.7 அளவுள்ள பூமி அதிர்ச்சி அதைத் தொடர்ந்து 10 நிமிடம் கழித்து 6.1 அளவுள்ள பூமிஅதிர்ச்சியும் தாக்கின. 6.1 அளவு என்பது ஓரளவு கடுமையான பூமி அதிர்ச்சி ஆகும். இதனால் ஏற்பட்ட உயிர்சேத விவரம் தெரியவில்லை.

அந்தமானில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதாக மக்கள் அங்கு தொடர்ந்து வசிக்க அஞ்சுகிறhர்கள். இதனால் அவர்கள் இந்தியன் ஏர் லைன் விமானம் மூலம் கொல்கத்தாவுக்கும், சென்னைக்கும் அனுப்பப்படுகிறhர்கள். தினமும் கொல்கத்தாவுக்கு 14 முறையும் சென்னைக்கு 6 முறையும் விமானங்கள் மூலம் அந்தமான் மக்கள் கொண்டு வரப்படுகிறhர்கள்.

சென்னைக்கு கொண்டு வரப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவார்கள்.

அந்தமானில் உள்ள சிறிய தீவுகளில் சிக்கிக்கிடக்கும் சுற்றுலா பயணிகள் கடற்படை கப்பல்கள் மூலம் தலைநகர் போர்ட்பிளேர் கொண்டு வரப்பட்டு பிறகு அங்கிருந்து இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகிறhர்கள். அந்தமான் நிகோபார் தீவுகள் சோகமயமாக காட்சி அளிக்கின்றன.

20 முறை பறந்த படை விமானங்கள்

இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 2 நாட்களில் 20 முறை அந்தமானுக்கு பறந்து சென்று 1200 பேரை ஏற்றிக்கொண்டு தாம்பரத்தில் இறக்கி உள்ளன. அதில் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் உள்ளனர்.

அவர்களை ஏற்றிவர ஏன-் 32, ஐஎல்-76 ரகத்தை சேர்ந்த ராட்சத விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த விமானங்கள் அந்தமானுக்கு சென்ற போது மருந்து, உணவு போன்ற நிவாரண பொருட்களை ஏற்றி சென்றன.

பாதி மக்கள் தொகை மாயம்

மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதி சுனாமி அலை தாக்கிய அந்தமான் நிகோபார் தீவுகளை பார்வையிட்டார்.

அதன்பிறகு போர்ட் பிளேரில் பேட்டி அளித்த அவர் கார் நிகோபார் தீவில் வசித்த மக்களில் பாதிபேரை காணவில்லை. 7 கிராமங்கள் அடியோடு அழிந்துவிட்டன என்றhர்.
Reply
#2
அந்தமானில் இன்று மீண்டும் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தீவை காலி செய்து விட்டு தமிழர்கள் சென்னை வந்தனர்.

நில நடுக்கம்-கடல் பேரலை என்பது எல்லாம் கடந்த 26ந் தேதியுடன் முடிந்து விட்டதாக கருத வேண்டாம். அதன் விளைவாக தொடர் அதிர்வுகள் தொடர்ந்து சில நாள் இருக்கத்தான் செய்யும் என்று புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அதைஉண்மையாக்கும் வகையில் சென்னையில் நேற்று சில பகுதிகளில் அதிர்வுகள் இருந்ததாக அதிகார வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் நேற்று நள்ளிரவிலும் இன்று அதிகாலையிலும் அந்த மானில் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதே போல இந்தோனேசியாவிலும் இந்த அதிர்வுகள் தென்பட்டன. ஆனால் இந்த அதிர்வுகளால் எந்த பின்விளைவோ , உயிர் இழப்போ, பாதிப்போ ஏற்பட வில்லை.

அந்தமானில் ரிக்டர் அளவு கோலில் 5.1 சதவீதம் அது பதிவானது. குட்டி அந்த மானுக்கு தெற்கே இந்த நில நடுக்கம் காணப்பட்டது. இதே போல கார்னிகார் தீவு, மலாக்கா தீவு ஆகிய இடங் களிலும் நேற்று இரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 என பதிவானது. இங்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இதற் கிடையில் இன்று காலை தொடங்கி 3 முறை அந்த மான் தீவுக்கூட்டத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டன. 7 மணி முதல் அடுத்தடுத்து 3 முறை பூமி அதிர்ந்தது. இது hpக்டர் அளவுகோலில் 5.7, 6.1 என பதிவானது. முதல் நில நடுக்கம் குட்டி நிகோபர் தீவில் கமோத்ரா அருகில் ஏற் பட்டது. இதன் பிறகு கார் நிகோபர் தீவு அருகே பூமி அதிர்ச்சி காணப்பட்டது. இறுதியாக 7.44 மணிக்கு அந்தமான் மேற்கு கடலோர பகுதியில் நில நடுக்கம் காணப்பட்டது. ஆனால் இந்த அதிர்வுகளில் எந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தொpயவில்லை.

கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இன்று வரை 54 முறை அந்தமானில் மட்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே அந்தமான் தீவில் இருந்தால் மீண்டும் கறுப்பு ஞாயிறு வந்து விடுமோ என்று உயிருக்கு பயந்து தீவை காலி செய்து வருகின்றனர். அந்தமானில் சுனாமி பேரலையில் சிக்கி இது வரை 3000 பேர் இறந்ததாக அதி காரப்பூர்வ தகவல்கள் தொpவிக் கின்றன. அங்கு ஏராளமான தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் அந்த மானை காலி செய்து விட்டு தமிழ்நாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூமி அதிர்வு 5.3 என்ற அள வில் பதிவானது. அங்கு நள் ளிரவில் இந்த நில அதிர்வு காணப்பட்டது. அதே சமயத் தில் 2 முறை இந்த நில அதிர்ச்சியை உணர முடிந்தது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தொpவிக்கின்றன.

கடந்த 26ந்தேதி ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் அந்தமான் நிகோபர் தீவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். அப்பகுதியை தண்ணீர் Nழ்ந்து உள்ளது. இதனால் இதில் உயிர் தப்பியவர்களை இந்தியா கொண்டு வருகின்றனர். தமிழ் அகதிகளான 139பேர் சென்னை நந்தனத்தில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் கொண்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Dinamani,com
Reply
#3
சுனாமியின் கோரத்தாண்டவத்தினால் பரிதாபகரமாக பலியான மக்களுக்காக நோர்வே ஜனவரி 01.01.05ஐ தேசிய துக்கநாளாக அறிவித்து உள்ளது.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)