Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மழை மீண்டும் பூமி அதிர்ச்சி மீட்பு பணி நிறுத்தம்
#1
போர்ட்பிளேர், ஜனவரி.03

சுனாமி தாக்கிய அந்தமான், இலங்;கை-இந்தோனேசியாவை பேய்மழை தாக்கியது. நிவாரண முகாம்களில் எஞ்சி இருந்த பொருட்களை மழை வெள்ளம் அடித்து சென்றது. நேற்று மீண்டும் பூமி அதிர்ச்சியும் தாக்கியது. இதனால் நிவாரண மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

கடந்த மாதம் 26-ந்தேதி தாக்கிய சுனாமி அலைக்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் 10 ஆயிரம் பேரும், இலங்கையில் 25 ஆயிரம் பேரும், இந் தோனேசியாவில் 1லட்சத்து 25 ஆயிரம் பேரும் பலியாகி உள்ளனர். சுனாமி தாக்கி 7 நாள் ஆகியும் பிணங்களை முழுமையாக மீட்க முடியவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்தது?

பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் சேர்த்து உணவு அளிக்கும் வேலையும் நடந்து வந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட நாடுகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பேய்மழை கொட்டத்தொடங்கியது. இதனால் ஏற்கெனவே கடல்நீரால் நனைக்கப்பட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பிணங்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டது. 7 நாளாக அழுகிக் கிடக்கும் பிணங்களில் துர்நாற்றம் இன்னமும் அதிகமானது.

நிவாரண முகாம்களில் எஞ்சிய உடமைகளுடன் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருந்தனர். அந்த முகாம்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து எஞ்சிய பொருட்களையும் அடித்து சென்றுவிட்டது. நிவாரணம் வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த உணவு - துணி மணிகளும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன.

இதனால் இந்த நாடுகளில் மக்கள் அனுபவிக்கும் துன்பம் மேலும் அதிகமாகியது. காய்ந்த துணிகூட இல்லாமல் மக்கள் குளிரில் நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மழை காரணமாக மீட்பு-நிவாரண பணிகள் நிறுத்தப்பட்டன.

இலங்கை காரைத்தீவு நிவாரண முகாமில் இருக்கும் சாம்பசிவம் கூறும்போது- சுனாமி அலையால் தாக்கப்பட்ட எனது வீட்டில் எஞ்சிய பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு இந்த முகாமுக்கு வந்தேன். மழை வெள்ளத்தில் அந்த மூட்டையும் அடித்து செல்லப்பட்டுவிட்டது. இந்த கொடுமையை யாரிடம் போய் சொல்வேன் என்றார்.

அம்பாரை முகாமில் உள்ள போரின்பராஜா கூறும்போது-

சுனாமி அலைக்கு சொந்த பந்தங்களை பறிகொடுத்துவிட்டு இங்கு வந்து முடங்கி கிடக்கிறேhம். எங்களுக்கு உணவு இல்லை. உடுக்க துணி இல்லை. தூக்கமும் கிடையாது. இப்போது மழை எங்கள் இன்னலை இன்னும் அதிகமாக்கிவிட்டது.

கடந்த மாதம் 26-ந்தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியை தொடர்ந்து இந்த நாடுகள் ஆப்டர் ஷhக் என்று அழைக்கக்கூடிய தொடர்பூமி அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது அல்லவா?

நேற்று முன்தினம் ரிக்டர் அளவு கோலில் 6.5 அளவிலான கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அது இலங்கையிலும் கூட உணரப்பட்டது.

நேற்று ரிக்டர் அளவு கோலில் 5.3 அளவிலான பூமி அதிர்ச்சி, 3 முறை ஏற்பட்டது. அது அந்தமான், இலங்கை, இந்தோனேசியாவில் எதி ரொலித்தது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் ஆடின. மக்கள் விழுந்தடித்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

இதனால் மீட்பு-நிவாரண பணிகள் நிறுத்தப்பட்டன.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)