01-06-2005, 08:44 PM
நிலைமை மாறினால் ஐ.தே.க. எதிர்க்குமென ரணில் கூறுகிறார்
கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது நாட்டில் மனிதாபிமானப் பணிகளுக்காக வந்துள்ள அந்நியப் படைகள் தங்கள் பணிகளைத் தவிர உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வேறு விடயங்களில் தலையீடு செய்ய அனுமதிக்க முடியாது. அப்படியொரு நிலையேற்பட்டால் உரிய நேரத்தில் தங்கள் கட்சி நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டாதென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டில் கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற ரணில் விக்கிரமசிங்க நெல்லியடியிலுள்ள ஹகடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு கூட்டுறவுச் செயலணி'யில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கேள்வி :- இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டுப் படையினர் வந்துள்ளார்கள். குறிப்பாக அமெரிக்கா இந்தியா பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளும் தமது படைகளுடன் இலங்கைக்கு வந்துள்ளன. அந்நிய நாடுகளின் இராணுவத்தினரின் வருகையால் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு வரும் என நீங்கள் கருதவில்லையா?
பதில் :- ஆம் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு துருப்புகள் இலங்கைக்கு வந்துள்ளன. ஆனால் இவர்கள் அனைவரும் அவசர மனிதாபிமானப் பணிகளுக்காகவே இங்கு வந்துள்ளனர். இதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படும் என நான் கருதவில்லை. வெளிநாட்டுப் படைகள் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வேறு விடயங்களில் தலையீடு செய்தால் அதுபற்றி உரிய நேரத்தில் ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை எமது கட்சி மேற்கொள்ளும். அத்தகைய நேரத்தில் தேவையான உரிய நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.
உண்மையில் மீட்புப் பணிகளுக்கு உதவக்கூடிய வகையில் இலங்கையில் பெரிய ஹெலிகொப்டர்கள் இல்லை. அதற்காக வெளிநாடுகளில் இருந்து அப்பணிகளுக்கு உதவக் கூடிய வகையில் பெரிய ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணிகளுக்கான விசேட ஹெலிகொப்டர்கள் என்பன எடுத்துவரப்பட்டிருக்கின்றன.
கேள்வி :- இலங்கையில் இருக்கும் துருப்புகளைக் கொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாதெனக் கருதுகிறீர்களா?
பதில் :- இல்லை மீட்புப் பணிகளுக்காக வந்துள்ள வெளிநாட்டுப் படையினர் மீட்புப் பணிகளில் விசேட பயிற்சி பெற்றவர்கள். அதுமட்டுமன்றி மீட்புப் பணிகளைத் துரித கதியில் மேற்கொள்ளக் கூடிய வகையில் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் சக்தி வாய்ந்த தொழில்நுட்ப இயந்திரங்களையும் இவர்கள் கைவசம் வைத்துள்ளதால் மீட்புப் பணிகளைத் துரித கதியில் மேற்கொள்ள வசதியாக இருக்கும். அத்துடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வௌ;வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் குறைந்தளவு துருப்புகளையே இப்பணிகளில் ஈடுபடுத்த முடியும். இந்த எண்ணிக்கை மீட்புப் பணிகளுக்கு போதாது எனக் கருதுகிறேன்.
கேள்வி :- இலங்கைக்கு வெளிநாட்டுப் படையினர் வருவதால் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பாதிப்புகள் எதுவும் ஏற்படாதா?
பதில் :- இங்கு வந்துள்ள வெளிநாட்டுப் படையினர் மனிதாபிமானப் பணிகளை அடிப்படையாகக் கொண்டே வந்துள்ளார்கள். அவர்களினால் இந்த நாட்டின் சமாதான முயற்சிகளுக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்வார்கள் என்றே கருதுகிறேன். அப்படி இப்படைகள் மூலம் ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால் அதை அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதுடன் எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம்.
கேள்வி :- வெளிநாடுகளில் இருந்து பெருமளவு நிதி இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதுவிதமான உதவிகளும் இதுவரை வடக்குஇ கிழக்கு பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. இது குறித்து தங்களது கருத்து என்ன?
பதில் :- துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ள பகுதிகளுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் விரைவில் சென்று சேர்ந்துள்ளன. ஆனால் நிவாரண உதவிப் பொருட்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் சம அளவில் சென்றடைய வேண்டும். இத்தகைய உதவிகள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வந்து சேராதது குறித்து நாம் அரசிற்கு அறிவுறுத்துவோம்.
கேள்வி :- விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஏற்பட்ட அழிவுகளைச் சென்று பார்வையிடும் எண்ணம் உண்டா?
பதில் :- உடனடியாக அப்படி திட்டம் எதுவும் இல்லை.
கேள்வி :- வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பெருமளவான உதவிப் பொருட்கள் கட்டுநாயக்கா விமானத் தளத்தில் தேக்கமடைந்துள்ளன. அத்தகைய உதவிப் பொருட்களை பலாலி விமான நிலையம் ஊடாக எடுத்து வந்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை? இந்த விடயத்தை அரசிற்கு நீங்கள் எடுத்துச் சொல்ல முடியாதா?
பதில் :- ஆம்இ அது மிகவும் சிறந்த யோசனை. இது குறித்து நாம் அரசிற்கு தெரிவிப்போம்.
கேள்வி :- இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைப் புலிகள் சிறப்பான பணியை ஆற்றியிருக்கிறார்கள். சிறந்த நிர்வாகக் கட்டமைப்புகள் மூலம் அவர்களால் சிறப்பான பணியை ஆற்ற முடிந்துள்ளது குறித்து பாராட்டியிருக்கிறீர்கள். இந்த வகையில் அவர்களது நிர்வாக கட்டமைப்பு சிறப்பானது என ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே அவர்களிடம் இடைக்கால நிர்வாக சபையை வழங்கலாம். அவர்கள் அதனை சிறப்பாக நிர்வகிப்பார்கள் என நினைக்கவில்லையா?
பதில்:- நாங்கள் இந்த விடயத்தில் ஆரம்பகால பேச்சுவார்த்தையின் போது இருந்த அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம். பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும். அதன் பின் நியாயமான அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.
கேள்வி:- இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட நாள்முதல் விடுதலைப்புலிகளும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களும் தான் அவசர மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேளையில் ஜனாதிபதி இராணுவத் தளபதிகளை நிவாரணப் பணிக்கான இணைப்பாளர்களாக நியமித்துள்ளார். இது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்:- இங்குள்ள நிலைமைகளை இங்கு மேற்கொள்ளப்படும் மனிதாபிமான நிர்மாணப் பணிகளை நாங்கள் நேரில் பார்வையிட்டுள்ளோம். இங்குள்ள நிலைகளை நாங்கள் அரசிற்கு தெளிவுபடுத்துவோம் என்றார்.