Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை ரேடியோ புரளி
#1
சுனாமி தாக்குதலில்
பிரபாகரன் பலியானதாக இலங்கை ரேடியோ புரளி
விடுதலைப்புலிகள் கடும் கண்டனம்


கொழும்பு, ஜன.9-

`சுனாமி' தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உளவுப்படை தலைவர் பொட்டு அம்மானும் பலியாகி விட்டதாக இலங்கை ரேடியோ செய்தி ஒலிப்பரப்பியது. இது வெறும் புரளி, விஷமத்தனமானது என்று விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரன் மரணம்

கடந்த மாதம் 26_ந் தேதி தாக்கிய `சுனாமி' பேரலையில் இலங்கையில் மரணம் அடைந்தவர்களில் அல்லது காணாமல் போனவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், அவர்களது உளவுப் படைத் தலைவர் பொட்டு அம்மானும் உண்டு என்று இலங்கை ரேடியோ நேற்று அறிவித்தது.

கடற்படையின் வைஸ் அட்மிரல் தயா காந்தகிரி தெரிவித்ததாக இந்த தகவலை இலங்கை ரேடியோ செய்தி ஒலிப்பரப்பியது.

சவப்பெட்டி

`சுனாமி'யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களுடன், விடுதலைப்புலிகளின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய விடுதலைப்புலி தலைவருக்காக சவப்பெட்டி ஒன்று ரகசியமாக கடத்திச் செல்லப்பட்டது என்று நேற்று ஒரு பத்திரிகையும் செய்தி வெளியிட்டு இருந்தது.

இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இந்தப் பிரச்சினை புதிய மோதலை உருவாக்கியுள்ளது. விடுதலைப்புலிகள் இதை மறுத்ததுடன், அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இணைய தளத்தில்

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தங்களது அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இலங்கை வானொலி விஷமத்தனமான, கண்டனத்துக்குரிய புரளியை ஒலிபரப்பியுள்ளது. `சுனாமி'யால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இலங்கை வானொலி இப்படிப்பட்ட அவதூறை, துஷ்பிரசாரத்தை, மேற்கொண்டது கண்டனத்துக்குரியது' என்று குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளும், தமிழ் மக்களும் இலங்கை வானொலியின் இந்த அவதூறான நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்க விரும்புகிறார்கள். சிலரின் கற்பனையான இந்தக் கட்டுக்கதையை ஒலிபரப்பும் அளவுக்கு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வானொலி கீழ் இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களை குழப்பும் மோசமான செயல் இது என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.


© Daily Thanthi
Reply
#2
இலங்கை ஒழிப்பு மறைப்பு ---------- <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: ஆச்சே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#3
ஜனவரி 09, 2005

பிரபாகரன் குறித்த செய்தி வாபஸ்: இலங்கை வானொலி பல்டி

கொழும்பு:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த செய்தியை இலங்கை வானொலி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

கடந்த 26ம் தேதி இலங்கையைத் தாக்கிய சுனாமிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோர் பலியாகியிருக்கலாம் அல்லது காணாமல் போனவர்கள் பட்டியலில் அவர்கள் இடம் பெற்றிருக்கலாம் என்று இலங்கை அரசுக்குச் சொந்தமான இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் நேற்று செய்தி வெளியிட்டது.

இந்த செய்திக்கு விடுதலைப் புலிகள் உடனடியாக மறுப்பும், கடும் கண்டனமும் தெரிவித்தனர். துயரமான இந்த நேரத்தில் இலங்கை அரசு இதுபோன்ற விஷமத்தனமான பொய்ச் செய்தியை பரப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில், பிரபாகரன், பொட்டு அம்மன் குறித்து வெளியிட்ட செய்தியை வாபஸ் பெறுவதாக இலங்கை வானொலி இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை கொழும்பு நகரில் இலங்கை வானொலி நிறுவனத்தின் உயர் அதிகாரி வெளியிட்டார்.

இருப்பினும், எதற்காக செய்தி வாபஸ் பெறப்படுகிறது என்ற விளக்கத்தை இலங்கை வானொலி தெரிவிக்கவில்லை.
Reply
#4
முதலே சொன்னான் இல்லையோ???? குரங்குகள் எண்டு சுனாமமியை கண்டதும் ஓடிடுதுவள் எண்டு லண்டனுக்கு இப்ப பாருங்கோ பல்டி அடிக்கிதுவள்

தெகிவளையில இருக்கவேண்டியது எல்லாம் ரேடியோ நிலையத்தில இருக்கிதுவள்

:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#5
ஏன் தாத்தா தெகிவளையிலயே அங்கோடை இருக்கு.. :mrgreen:
[size=16][b].
Reply
#6
sinnappu Wrote:முதலே சொன்னான் இல்லையோ???? குரங்குகள் எண்டு சுனாமமியை கண்டதும் ஓடிடுதுவள் எண்டு லண்டனுக்கு இப்ப பாருங்கோ பல்டி அடிக்கிதுவள்

Quote:தெகிவளையில இருக்கவேண்டியது எல்லாம் ரேடியோ நிலையத்தில இருக்கிதுவள்

:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஆரைச்சின்னப்பு சொல்றியள் ? இலங்கை றேடியோவையோ :?:
Reply
#7
இலங்கை றேடியோவும் அதை இயக்கிற அம்மாவையும் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :twisted: :twisted: :twisted:
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)