01-11-2005, 03:52 PM
<b>சைனசுக்கு உண்மைக் காரணம் என்ன? </b>
ஜலதோஷம் என்பது பொதுவாக வைரஸ் தாக்குதல் காரணமாக தான் வருகிறது. இந்நிலையில் சைனசுக்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
சைனசுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் ஜலதோஷத்தின் தொடர் அவதாரமாக தான் சைனஸ் உண்டாகிறது. ஜலதோஷத்தின் விளைவாக உருவாகும் சளி, சைனஸ் அறைகளில் போய் தேங்கும். அது சில நாட்களிலேயே வெளியே வந்து விட வேண்டும. இதுதான் ஜலதோஷம் குணமாகிவிட்டதன் அறிகுறி. அப்படியில்லாமல் உள்ளே போன சளி திரவம் வெளியே வர முடியாத அளவுக்கு அப்போது அறைக்கதவுகள் சில காரணங்களால் அடைத்துக் கொள்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அதுதான் சைனசின் ஆரம்பம். கிருமிகள் கலந்த சளி அந்த அறைக்குள்ளேயே இருக்கும் போது, நாளடைவில் அது சீழாக உருமாறும். அதன் விளைவுகள் பேச்சு, சுவாசம் என பல வகைகளிலும் வெளிப்பட்டு தொந்தரவு கொடுக்கும்.
<b>வியட்நாமில் மீண்டும் வேகமாக பரவும் பறவைக்காய்ச்சல்,
10 நாளில் 3 பேர் பலி </b>
வியட்நாம் நாட்டில் ஏராளமான உயிர்களை பலி வாங்கிய பறவைக் காய்ச்சல் நோய் மீண்டும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கி உள்ளது. அங்கு கடந்த ஆண்டு டிசம்பர் வரை பறவைக்காய்ச்சல் நோய்க்கு 22 பேர் பலியாகி இருந்தனர் இந்நிலையில் கோசி-மின் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 16 வயது இளம்பெண் ஒருவள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். கடந்த 10 நாட்களில் உயிரிழக்கும் 3-வது நபர் இந்தப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அங்கு பறவைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது.
மேகாங்-டெல்டா மாகாணத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு H5N1 என்ற பறவைக்காய்ச்சல் கிருமி தொற்றி இருப்பது அண்மையில் தெரிய வந்தது. இதையடுத்து தலைநகர் கோசி-மின்-சிட்டியில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் தீவிர சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தாள். இதனிடையே அதே மாகாணத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கும் H5N1 வைரஸ் கிருமிகள் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் நோய் வியட்நாமில் மேலும் தீவிரமாக பரவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
சென்ற ஆண்டில் ஆசிய நாடுகளில் பறவைக்காய்ச்சல் பரவிய போது வெகுவாக பாதிக்கப்பட்ட தாய்லாந்தில் புதிதாக வேறு யாரும் பாதிக்கப்படவில்லை. இதேப் போல மலேசியாவில் பறவைக்காய்ச்சல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு கூறி உள்ளது. சென்ற ஆண்டில் பறவைக்காய்ச்சல் காரணமாக தாய்லாந்தில் 12 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
<b>ஒலிவ் எண்ணெய் மார்பக புற்றுநோயை எப்படி தடுக்கிறது? </b>
ஒலிவ் எண்ணெய்யானது, மார்பக புற்றுநோய் ஆபத்தில் இருந்து பெண்களை பாதுகாக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது. ஆனால் மார்பக புற்றுநோய் ஆபத்தை சமாளிக்கும் அளவுக்கு ஒலிவ் எண்ணெய்யில் என்ன விஷயம் உள்ளது? என்பது பற்றி சரியாக கூறப்படவில்லை. இந்நிலையில் இந்த சந்தேகத்துக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ஒலிவ் எண்ணெய்யில் காணப்படும் oleic acid என்ற அமிலம் தான் இந்த அற்புத செயலுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. மார்பக புற்றுநோய் கட்டிகளில் வேகமாக செயல்படும் HER-2/neu என்ற குறிப்பிட்ட மரபணுவின் ஆட்டத்தை இந்த அமிலம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்துகிறது. விளைவு, மார்பக புற்றுநோய் ஆபத்து குறைவதுடன், இதய நோய்களும் வெகுவாக தடுக்கப்படுகிறது.
மேற்படி அமிலம் HER-2/neu மரபணுவின் ஆட்டத்தை தடுப்பதுடன் நின்று விடாமல், மார்பக புற்றுநோய்க்கான Herceptin என்ற மருந்தின் செயல்திறனையும் பன்மடங்கு ஊக்கப்படுத்துகிறது. ஒலிவ் எண்ணெய்யை உட்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. இதனால் நச்சுத்தன்மை ஏற்படும் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. ஒலிவ் எண்ணெய்யை இயற்கையாகவே உணவில் சேர்த்துக் கொள்ளும் மக்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து ஏற்படுவதில்லை.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&