01-13-2005, 06:25 PM
<b>அவசர நிவாரணப் பணிகளில் புலிகளால் எந்த இடையூறும் இதுவரை இல்லை</b>
கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஐ.நா. நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் அவசர நிவாரணப்பணிகளுக்கு இதுவரை எந்தவொரு இடையூறும் ஏற்படவில்லையென ஐக்கிய நாடுகள் அமைப்பு திருப்தி தெரிவித்துள்ளது.
நாம் மிகவும் விழிப்புடன் அவதானித்து வருகிறோம், ஆனால், இன்றுவரை பாதுகாப்புக்குக் குந்தகமான எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறவில்லை. எமது நிவாரண நடவடிக்கைகளுக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லையென ஐ.நா. வின் அவசர மனிதாபிமானப் பணிகளுக்குப் பொறுப்பான அமைப்பின் தலைவர் கெவின் கென்னடி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் செல்வதற்கு அரசாங்கம் தடைவிதித்திருந்ததுடன், பாதுகாப்புப் பிரச்சினையை இதற்குக் காரணம் காட்டியிருந்த நிலையில் அப்பகுதிகளில் நிவாரணப்பணிக்கு எந்தவொரு இடைஞ்சலும் இல்லையென்று ஐ.நா. உயரதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இது இவ்வாறிருக்க கடற்கோள் அனர்த்தத்துக்கு சர்வதேச நன்கொடையாளர்களின் உதவி துரிதமாக வந்துசேர்வதாகவும் ஐ.நா. கூறியுள்ளது. அவசர உதவியாக வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்ட 1 பில்லியன் டொலரின் 70 சதவீதமான தொகை ஏற்கனவே திரட்டப்பட்டுவிட்டதாக ஐ.நா. கூறுகிறது.
கடற்கோளால் பாதிக்கப்பட்ட இந்துசமுத்திர நாடுகளுக்கு உதவுமாறு ஐ.நா. விடுத்த அழைப்பு மற்றும் நீண்டகால உதவித்திட்டம் என்பன குறித்து ஆராய்வதற்காக 80 இற்கும் அதிகமான நாடுகள் ஜெனீவாவில் கூடியிருக்கும் நிலையில் உறுதியளிக்கப்பட்ட முழுத்தொகையும் கிடைக்குமென்று ஐ.நா.வின் உதவி முயற்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரி ஜான் எக்லான்ட் கூறியிருக்கிறார்.
முன்னர் இவ்வாறு இடம்பெற்றதில்லை. அனர்த்தம் இடம்பெற்று இருவாரத்திற்குள் 7.7 மில்லியன் டொலர்களை உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்காக நாம் செலவிட்டிருக்கிறோம்' என்றும் எக்லான்ட் கூறியுள்ளார்.
¿ýÈ¢ ¾¢ÉìÌÃø...

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->