01-16-2005, 07:07 AM
எதனுடனும் ஒப்பிட முடியாத பேரழிவு இது
முல்லைத்தீவில் சுனாமியால் ஏற்பட்டிருக்கின்ற அழிவை எதற்கும் ஒப்பிட்டுக் கூறமுடியாது. யுத்த அழிவுகள் வேறுää இயற்கை அழிவுகள் என்பது வேறுää இங்கு இயற்கை அழிவு இப்படியொரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என யாரும் நினைக்கவில்லை என பி.பி.ஸி செய்தியாளர் திருமதி. பிரான்சிஸ் கரிசன் தெரிவித்தார்.
முல்லைத்தீவுப் பகுதியில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவு தொடர்பான செய்திகளை அவர் பி.பி.ஸிக்காகத் திரட்டிக் கொண்டிருக்கையில் நாம் அவரைச் சந்தித்தோம்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் வரை இலங்கைக்கான பி.பி.சி முகவராக இருந்த இவர்ää தற்போது ஈரானில் கடமை புரிகிறார். 4 வருடங்கள் இங்கு கடமை புரிந்த இவர் சுனாமி அனர்தங்கள் தொடர்பில் செய்திகளைத் திரட்டுவதற்காக இலங்கை வந்துள்ளார்.
அரசின் நடவடிக்கை தொடர்;பான கேள்விகள் எதற்கும் பதிலளித்தால் அது பி.பி.சியின் கருத்தாக மாறிவிடு;ம். எனவே அது தொடர்பான வேள்விகளைத் தவிர்குமாறு கேட்டுக் கொண்டார் அவர் முல்லைத்தீவு நிலமை தொடர்பாக எமக்கு வழங்கிய செவ்வியை கீழே தருகின்றோம்.
கேள்வி - சுனாமியால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவின் நிலைமை பற்றி உங்கள் பார்வை எப்படி உள்ளது?
பதில் - முல்லைத்தீவைப் பார்க்கின்றபோது மிகவும் கவலையாக இருக்கின்றது. இந்தப் பகுதிகள் யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளை விட மிகவும் மோசமான அதிகமான அழிவுகளைச் சந்தித்துள்ளது. ஒரு யுத்தம் ஏற்படுத்த முடியாத அழிவுகளை இயற்கை ஏற்படுத்தி இருக்கின்றது. யுத்த நிறுத்தம் ஏற்பட்டதன் பின்னர் நான் இந்தப் பகுதிகளுக்கு . வந்திருந்தேன் அப்போது தான் மக்கள் மீளக் குடியமர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்வைக் கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையுடன் தான் இருந்தார்கள். ஆனால் அவர்களின் உழைப்புää உறுதிää மகிழ்ச்சி அனைத்துடன் அவர்களின் இருப்பிடங்கள் பொருட்கள் அனைத்துமே கடல் அள்ளிச் சென்று அவர்களை நிர்க்கதியாக்கி பெரும் துயரில் ஆழ்த்திவிட்டது.
கடற் பெருக்கில் சிக்கித் தப்பி நலன்புரி நிலையங்களில்
கேள்வி - தங்கியிருக்கும் மக்களை நீங்கள் சென்று பார்வையிட்டிருந்தீர்களா? அப்படியானால் அவர்களின் மன நிலைபற்றி உங்கள் பார்வை எப்படி இருக்கின்றது?
பதில் - ஆம் இந்தப் பெரும் அனர்த்தத்தில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் பெருந்தொகையானவர்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றார்கள் உண்மையில் இந்த மக்களின் மனநிலை மிக மோசமாக இருக்கின்றது. அவர்கள் கூறுகின்ற கரைகள் வேதனையைத்தருகின்றது.
தங்களை நோக்கி கடல் வந்ததும் அதில் அடிபட்டுப் போனதும் அவர்கள் மனதில் அழியாதிருக்கின்றது. குறிப்பாக சிறுவர்கள் பற்றித்தான் நான் மிகக் கவலையடைகிறேன். பிள்ளைகள் பெரிதும் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஏனெனில் சிறுவர்கள் தங்கள் தாய்ää தந்தையர்ää இரத்த உறவுகள் கடலுடன் அடித்துச் செல்லப்படுவதையும் அதில் மூழ்கி இறந்து போவதையும் நேரிலே பார்த்திருக்கின்றார்கள் இது அவர்களின் மனநிலையை வெகுவாகப் பாதித்திருக்கின்றது எனக்கும் வேதனையைத்தருகின்றது. நான் ஒரு கதையைச் சொல்கின்றேன். ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் அவன் எனது மகன்மாதிரிää அவனை இந்தச் சம்பவம் பற்றி கேட்டவுடனேயே அவன் ஏதேதோ எல்லாம் சொல்லிக்கொண்டே போகின்றான் தான் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுää அதிலிருந்து ; தப்ப முடியாமல் தத்தளித்ததுää இறந்த சடலத்தைப்பார்த்தது. அப்படி இப்படி என் று கதையை நிறுத்தாமலேயே தொடர்ந்துகொண்டு போனான். இது சிறு பிள்ளைகளின் மனப் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்த நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் மனநிலை மிக மோசமாக இருக்கின்றது. குறிப்பாக சிறு பிள்ளைகளின் மனநிலை கவலை தருவதாக இருக்கின்றது.
ஒரு தாய் தனது பிள்ளையைக் காப்பாற்றக் கடுமையாகப் போராடியதாகவும் கடல்நீர் தனது இறுகிய அரவணைப்பி;ல் இருந்த குழந்தையை உருட்டி அடித்துப் பறித்துக் கொண்டு போய்விட்டதாகவும் வேதனையுடன் கூறினார். இப்படி பல சம்பவங்கள் நடத்திருக்கின்றன. அனைவரும் இப்படித்தான் புலம்புகிறார்கள். எவராலும் எவரையும் காப்பாற்ற முடியாத நிலை. அந்த அளவிற்கு கடல் மூர்க்கமாக அடித்திருக்கின்றது. இவர்களின் வேதனைகளை என்னால் உணர முடிகின்றது. நானும் ஒரு தாய்தான் அதனால் என்னை இந்த சோகச்கதைகள் வெகுவாகப்பாதிக்கச்செய்கின்றது.
இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் நீண்டகாலமாக யுத்தப்பாதிப்புக்குள்ளாகி பல தடவைகள் இடம் பெயர்ந்து பெரும் சிரமங்களின் மத்தியில் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்ந்து மகிழ்வாக இருந்தார்கள். அவர்களின் அந்த மகிழ்வை முன்னர் இந்தப்பபுதிக்கு வந்தபோது கண்டேன். நான் கண்ட அந்த மக்கள் “ சுனாமி ” யால் பாதிக்கப்பட்டு நிறையப்பேர் இறந்திருக்கலாம். முன்னர் அவர்கள் வாழ்ந்த மகிழ்வான வாழ்வையும் பார்க்கிறேன் இது ரொம்பவும் மோசமானது.
இதுபோலத்தான் வேறு பகுதிகளில் உள்ளவர்களும்ää அவர்கள் ஆடம்பரமான மகிழ்வான வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். பெரும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து சொத்துக்களை இழந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த முல்லைத்தீவு மக்களின் நிலை மிகவும் மோசமானது. தொடர்ச்சியாக இடம் பெயர்ந்து துயரத்துக்குள்ளேயே வாழ்ந்து மகிழ்வான வாழ்வுக்குள் போய்க்கொண்டிருந்த போது இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேள்வி - முல்லைத்தீவின் அழிவை எதற்காவது ஒப்பிட்டுக்கூறக் கூடியதாக இருக்கிறதா?
பதில் - இந்த அழிவை குறிப்;பிட்டுக்கூற முடியாது. பேரழிவுதான் இது. யுத்த அழிவுகள்வேறு. இயற்கை அழிவுகள் வேறு. இங்கு இயற்கை அழிவு இப்படித் தாக்கம் ஏற்படுத்தும் என்று யாரும் நினைக்கவில்லை.
கேள்வி - முகாம்களில் வாழ்கின்ற மக்கள் இந்த அதிர்வில் இருந்து மீளக்கூடியதாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில் - இது மிகவும் கஷ்ரமான கேள்வி. இந்த மக்களால் எவ்வளவு காலம் துயரத்தைத் தாங்க முடியும்? சிலரிடம் துணிவு இருக்கிறது. முனதைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் புதிய வாழ்வை ஆரம்பிப்பார்கள்.ஆனால் இந்த மக்கள் அழிவுகளுக்குள்ளேயே வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள் இனி என்ன செய்யப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. இந்த அழிவில் இருந்து மீள்வதென்பது கஷ் ரமான ஒன்று. அவர்கள் எப்படிச் செய்வார்கள் என்று என்னால் கூறமுடியவில்லை. இதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம். 62வயதுடைய ஒரு அம்மா அவர் வத்திராயனைச் சேர்ந்தவர். அவரின் மனநிலை மோசமாக இருக்கிறது. அவர் சொன்னார் 64ஆம் ஆண்டு கடலில் புயல் அடித்த நேரம் கணவன் கடலில் செத்து விட்டார்.
பிறகு யுத்தத்தால் இடம் பெயர்ந்து அனைத்தையும் இழந்து மீண்டும் அந்தப் பகுதிகளில் மீளக்குடியமர்ந்து வாழ்வைக்கட்டி எழுப்பிக்கொண்டிருந்த இந்த வேலையில் கடல் கொந்தளிப்பில் இந்த வேளையில் கடல் கொந்தளிப்பில் தனது பிள்ளைகள் அனைத்தையும் இழந்த நிர்க்கதியான நிலையில் இருக்கிறார். அவர் புலம்புகிறார். “ வாழவேண்டிய இளம்பிள்ளைகள் எல்லாம் செத்துப்போய் விட்டார்கள். நான் ஏன் தப்பியிருக்கிறேன் எங்களுக்கு ஏன் இந்தத் துன்பம் தொடர்ந்து வருகுது. ” என்ற கேள்வியை எங்களிடம் தொடர்ந்த கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மக்கள் இப்படியான கேள்வியுடன் தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு மீண்டும் துன்பத்தையே கொடுத்து மனதைச் சோர்வாக்கி அவர்களை மன நெருக்கடிக்குள்ளாக்குகின்ற அந்த முகாம் வாழ்க்கைக்குத் திரும்பிப்போவது என்பது மிகவும் மோசமானது. இவர்கள் எப்படி மீளப்போகிறார்கள் என்பது என்னால் கூறமுடியாதிருக்கின்றது.
இதிலே பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பற்றிக் கூறுவதானால்ää அன்ரனிடேவிட் என்ற 13வயதுப் பிள்ளை ஒருவனுடன் கதைத்தேன். அந்தப்பிள்ளை சொன்னான் “ நான் 5வயதாக இருக்கின்றபோது யுத்தத்தில் தந்தையைப் பறிகொடுத்துவிட்டேன் ” அவன் இந்தப் பேரழிவு பற்றிக் கூறும்போது சொன்னான் “ நீண்ட யுத்தம் நடந்தது அதுக்குள் அப்பாவை இழந்தோம்.
இப்படிப் பலதை இழந்தோம். ஆனால் ஆமியால எல்லாத்தையும் கொல்லமுடியேல்ல ஆனால் கடல்வந்து அவங்களால செய்யஏலாத எல்லாத்தையும் செய்து போட்டுது ” என்று அந்தச் சிறுவன் கடல்செய்த பொரிய அனர்த்தத்தை வெகு சுருக்கமாகச் சொன்னான். அந்த மாதிரியான மோசமான மனநிலையில் தான் இருக்கின்றார்கள். இந்த உதாரணமே அவர்களின் மன நிலையைப் புரிந்துகொள்ளப் போதுமானது.
கேள்வி - பாதிக்கப்பட்ட மக்களுக்காக உங்களால் செய்ய முடிந்தது?
பதில் - எங்களைப் பொறுத்தவரை இந்த அழிவுகள் பெரும் துன்பமானது. இங்குள்ள நிலைமையற்றி நான் ஊடகவியலாளர் என்ற வலையில் வெளி உலகுக்குக் கூறமுடியும். இதைவிட எதனைச் செய்யமுடியும்? இவர்களின் துயரில் நாமும் பங்குகொள்ளுகின்றோம். உலக உதவிகள் தான் இந்த மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்பும்.
கேள்வி - முகாம்களில் வாழ்கின்ற மக்கள் இந்த அதிர்வில் இருந்து மீளக்கூடியதாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கயா?
பதில் - இது மிகவும் கஷ்ரமான கேள்வி. இந்த மக்களால் எவ்வளவு காலம் துயரத்தைத் தாங்க முடியும்? சிலரிடம் துணிவு இருக்கிறது. முன்னதைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் புதிய வாழ்வை ஆரம்பிப்பார்கள்.
Source: Pathivu